[தினம் ஒரு கட்டளை] PS செயல்பாட்டு நிழற்படம்

By | November 19, 2024

மற்றொரு தினம் ஒரு கட்டளை பதிவில் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

8 வது நாள்

PS – Process Selection (Snapshot)

லினக்ஸ் கணினியில் துவங்கியதிலிருந்து பல செயல்படுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கும். அந்த நிகழ்வுகளை ஒரு நிழற்படம் போல ஒருகனப் பொழுதில் இருப்பனவற்றை பட்டியலிட்டு காட்ட இந்த கட்டளை பயன்படுகிறது.

தொடரியல்:

hariharan@kaniyam : ~/odoc $ ps

இந்த கட்டளை தற்போது கட்டளை இயக்கியில் இயக்கத்தில் இருக்கும் செயல்பாடுகளை காண்பிக்க பயன்படுகிறது.

தெரிவுகள்:

இந்த கட்டளைக்காண தெரிவுகள் மூன்று வகைகளில் அளிக்கலாம்.

  1. Unix தெரிவுகள் ஒரு இடைக்கோடு(hyphen) முன்வர ஒன்றினைக்கப்பட்ட அல்லது தனித் தெரிவுகள்.

2.BSD  தெரிவுகள் இடைக்கோடு இல்லாமல் குழுவாக்கப்பட்ட தெரிவுகள் அல்லது தனித் தெரிவுகள்.

3.குனு நீண்ட தெரிவுகள் இரண்டு இடைக்கோடுடன் உள்ள தெரிவுகள்.

-a செயல்பாட்டு தலைவர்கள் மற்றும் முனையத்தை சார்ந்திடாத செயல்பாடுகள் தவிர்த்து பிற அனைத்து செயல்பாடுகளையும் பட்டியலிடுகிறது.

T தற்போதய முனையத்துடன் தொடர்புடைய செயல்பாடுகளை பட்டியடில பயன்படுகிறது.

இதே போல பல தெரிவுகள் இருக்கின்றன அதை பற்றிய உங்களின் தேடலுக்கு ஏற்றார் போல் நீங்களே கற்க வேண்டுகிறேன்.

சில எடுத்துக்காட்டுகள்:

hariharan@kaniyam: ~/odoc $ ps aux

தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் செயல்பாடுகளை அதிக விவரங்களோடு அறிய பயன்படுகிறது.

hariharan@kaniyam: ~/odoc $ ps -ef

aux காட்டும் விவரத்தோடு சில கூடுதல் விவரங்களை மேற்கண்ட கட்டளை அளிக்கிறது.

நன்றி!

ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com