[தினம் ஒரு கட்டளை] rm நீக்கு

நாள் : 19

rm : இந்த கட்டளை கோப்புகளை தெரிவுகளுடன்  நீக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதே கட்டளையை நாம் கோப்புறையை நீக்கவும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரியல் :

hariharan@kaniyam : ~/odoc $ rm file.extension rm file1.extension file2.extension

தெரிவுகள் :

rm -r : இந்த தெரிவு மூலம் நீக்கவேண்டிய கோப்புறையில் இருக்கும் அனைத்து கோப்புகளையும் கோப்புறையினில் இருக்கும் பிற கோப்புறைகளையும் நீக்ககூடியது. இந்த தெரிவில்  r  என்பது recursive எனும் ஆங்கில வார்த்தையின் சுழல்நிலை எனும் பொருளைப் பெறுகிறது. இந்த கட்டளையை பயன்படுத்தும் போது கவனமாக பயன்படுத்துக.

rm -v : இந்த கட்டளை நீக்கப்பட்ட கோப்புகளின் விவரங்களை காட்டுகிறது. இந்த தெரிவினை -r தெரிவுடன் சேர்த்து பயன்படுத்தலாம்

hariharan@kaniyam: ~/odoc $  rm -rv directory

rm -f :இந்த கட்டளை கோப்புகளை எந்த ஒரு தூண்டும் இல்லாமல் கோப்புகளை நீக்கப்பயன்படுகிறது. இந்தகட்டளை பெரும்பாலும் -r தெரிவுடன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  அதிக கோப்புறைகளில் உள்ள கோப்புகளை நீக்க வேண்டும்.

hariharan@kaniyam: ~/odoc $ rm -rf directory

நன்றி !
ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com

About Author

hariharan
Freelance Consultant | PHP Developer | Codeigniter | Laravel | Customized Web Application development | Pythonista | Novice Linux Boy

%d bloggers like this: