நம்மில் பலரும் அலுவலகப் பணிகளுக்கு, மைக்ரோசாப்ட் ஆபீஸ் போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகிறோம்
உங்களுடைய அலுவலகப் பணிகளை செய்வதற்கு, மிகவும் சிறப்பான தேர்வாக பலரும் குறிப்பிடுவது மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் செயலியை தான்.
ஆனால், மேற்படி மைக்ரோசாப்ட் ஆபீஸ் செயலியானது திறந்த நிலை பயன்பாடு கிடையாது.
மேலும், சில சிறப்பம்சங்களை நீங்கள் விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயமும், மைக்ரோசாப்ட் ஆபீஸ் போன்ற செய்திகளில் காணப்படுகிறது.
அதற்கு மாற்றாக, பல திறந்த நிலை பயன்பாடுகள் வழங்கப்பட்டு வந்தாலும் கூட அவற்றில் மைக்ரோசாஃப்ட் ஆபீசை ஒத்து செயல் வடிவத்தை நம்மால் பெற முடிவதில்லை.
ஆனால், இன்றைய கட்டுரையில் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கும் ஒன்லி ஆபீஸ்(ONLY OFFICE)என்னும் செயலியை கொண்டு, கிட்டதட்ட மைக்ரோசாப்ட் ஆபிஸை ஒத்த பணிகளை செய்ய முடிகிறது.
மேலும் , எளிமையான பயன்பாட்டு வடிவில் இந்த செயலி அமைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், நான் இங்கு குறிப்பிட்டு இருக்கும் ஒன்லி ஆபீஸ் செயலி, முழுக்க முழுக்க ஒரு திறந்த நிலை பயன்பாடு ஆகும்.
இதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு, நீங்கள் சென்று பார்க்கும் போது அங்கு இருக்கும் தகவல்கள் சற்றே குழப்பும் விதமாக இருக்கும்.
ஒன்லி ஆபீஸ் செயலி குறித்து பலருக்கும் தெரியாமல் போனதற்கு மிக முக்கியமான காரணம், இதுகுறித்து போதிய விளம்பரங்கள் இல்லாமல் போனதுதான்.
என்னதான் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் உடன் ஒப்பிட முடிந்தாலும் கூட, இங்கும் சில பிரச்சனைகள் இருக்க தான் செய்கின்றன.
ஆனால், மிக அதிகப்படியான பயனர்கள் இந்த செயலி க்குள் வரும்போது இந்த பிரச்சனைகள் நிச்சயமாக சரி செய்யப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
திறந்த நிலை பயன்பாடு என்பதற்காக வெறும் லினக்ஸ் இயங்குதளம் மட்டுமல்ல, விண்டோஸ் (windows),மேக்(mac), ஆண்ட்ராய்டு(android) இயங்குதளம் ஆப்பிளின் மொபைல் இயங்குதளம்(ios) ஆகியவற்றிற்கு செயல்படும் விதமான செயலிகள் உங்களுக்கு கிடைக்கின்றன.
ஆம்! ஒன்லி ஆபீஸ் செயலியை உங்களால் மொபைல் போனிலிருந்து கூட இயக்க முடியும்.
பலதரப்பட்ட பயனர்களும் ஒன்றிணைந்து செயலாற்றக்கூடிய வேலைகளை கூட, இங்கு எளிமையாக செய்ய முடியும்.
ஒரு சில தொழில் சார்ந்த பயன்பாடுகளுக்காக, கட்டணம் செலுத்தி சில சிறப்பம்சங்களை அனுபவிக்க முடியும்.
ஆனால் நீங்கள் ஒரு லினக்ஸ் பயனராக இருந்தால், பெரும்பாலும் libre ஆபீசையை நீங்கள் பயன்படுத்தி இருப்பீர்கள்.
அதனோடு ஒப்பிடும்போது, ஒன்லி ஆபீஸ் இன்னும் பல முன்னேற்றங்களை அடைய வேண்டி இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் உங்களுக்கு libre ஆபீசை பயன்படுத்த விருப்பமில்லை என்றால் ஒன்லி ஆபிஸ் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
மேற்படி, இந்த கட்டுரை குறித்த தகவல்கள் itsfoss இணையதளத்தில் திரு அங்குஸ் தாஸ் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையிலிருந்து பெறப்பட்டுள்ளது.
மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் ஏற்றவும்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர்.செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com