தற்போது உலகமுழுவதும் வாழும் மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கின்ற COVID-19எனும் கொரோனா
நச்சுயிரைஎதிர்த்துபோராடுவதற்காகபின்வரும் திறமூல வன்பொருள்கூட உதவதயாராக இருக்கின்றன .
Opentrons
இந்த திற மூல ஆய்வக தானியங்கிதளமானது திற மூல வன்பொருள், சரிபார்க்கப்பட்ட
ஆய்வக உபகரணங்கள், நுகர்பொருட்கள், உதிரிபாகங்கள் பணிநிலையங்கள் ஆகியவற்றின் தொகுப்பைக் கொண்டுள்ளது. நாளொன்றிற்கு 2,400 பரிசோதனைகள் வரை தானியங்கியாக செயல்படுத்தக்கூடிய
அமைப்புகளுடன் அதன் தயாரிப்புகள் வியத்தகு அளவில் COVID-19 பரிசோதனைக்கு உதவக்கூடிய வகையில் இது அமைந்துள்ளது. வருகின்ற ஜூலை 2020 இற்குள் 1 மில்லியன் பரிசோதனை மாதிரிகள் வரை கொண்டுசெல்ல திட்டமிடப் பட்டுள்ளது.
அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தின் கீழ் மருத்துவ நோயறிதலுக்கு அதன் அமைப்புகளைப் பயன்படுத்த
முடியுமா என்பதைத் தீர்மானிக்க நிறுவனம் ஏற்கனவே கூட்டாட்சி உள்ளூர் அரசாங்க நிறுவனங்களுடன்
இணைந்து செயல்படுகிறது. இது அப்பாச்சி 2.0 எனும் உரிமத்தின் கீழ் பொதுமக்களின்
பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது. மேலும் விவரங்களுக்கு opentrons.com/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க
Chai Open qPCR
இந்த சாதனமானது நாம் அடிக்கடி பயன்படுத்திடும் கதவுகள் சன்னல்கள் ஆகியவற்றின் கைப்பிடிகள் மின்தூக்கியின் பொத்தான்கள் ஆகியவற்றின் மேற்பரப்புகளில் கொரோனா வைரஸ் ஆனது இருக்கிறதா என்பதைப் சரிபார்க்கவும், விரைவாகச் பரிசோதிக்கவும். பாலிமரேஸ் எதிர்வினை சங்கிலியைப்(polymerase chain reaction(PCR)) பயன்படுத்தி கொள்கின்றது.
இது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அப்பாச்சி 2.0 எனும் உரிமத்தின் கீழ் கிடைக்கின்றது
இந்த திற மூல வன்பொருளானது செயல்படுவதற்காக பீகல்போன் (BeagleBone) போன்ற குறைந்த சக்தி கொண்ட லினக்ஸ் கணினியைப் பயன்படுத்திகொள்கின்றது. வணிக நிறுவனங்களும் உள்ளூராட்சி தலைவர்களும் இதிலுள்ள தரவுகளை கொண்டு பொது சுகாதாரம்,குடிமை பணிதொடர்பான துப்புரவு, நோய்தணிப்பு, நோய்பரவிடும் வசதியை மூடல், ஒப்பந்தத் தடமறிதல் நோய்குறித்த பரிசோதனை போன்ற செயல்களை குறித்து முடிவுகளை எளிதாக எடுக்க முடியும். மேலும் விவரங்களுக்கு www.chaibio.com/openqpcr எனும் இணையதளமுகவரிக்கு செல்க
OpenPCR
இது Chai Open qPCRஇன் படைப்பாளர்களான ஜோஷ் பெர்பெட்டோ ஜெஸ்ஸி ஹோ ஆகியோர்களால் உருவாக்கப்பட்டதொரு பி.சி.ஆர் பரிசோதனை சாதன கருவியாகும், இது அவர்களின் முந்தைய செயல்திட்டத்தை விட சிறந்ததொரு DIY திற மூல சாதனமாகும், ஆனால் இது அதே பயன்பாட்டு திறனை கொண்டுள்ளது: இது சுற்றுச்சூழல் பரிசோதனையைப் பயன்படுத்தி புலத்தில் உள்ள கொரோனா வைரஸை அடையாளம் காண உதவுகின்றது.
நோய்க்கிருமிகளைக் கண்டறியும் திறன் கொண்ட பாரம்பரிய நிகழ்வுநேர பி.சி.ஆர் இயந்திரங்கள் பொதுவாக 30,000 அமெரிக்க டாலர்களின்விலையில் கிடைக்கின்றன ஆயினும் அவை
கள பயன்பாட்டிற்கு ஏற்றவை அல்ல அதற்கு பதிலாக இந்த புதிய OpenPCR என்பது பயளாளர்களால் உருவாக்கப்பட்டு GPLv3.0 எனும் உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்ற ஒரு கருவியாக இருப்பதால், மூலக்கூறு கண்டறியும் அணுகலை ஜனநாயகமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.மேலும், எந்தவொருநல்ல திற மூல செயல்திட்டத்தையும் போல, சுவிட்சர்லாந்தில் GPLv3.0 எனும் உரிமத்தின் கீழ் கிடைக்கின்ற
WildOpenPCR என்பதிலிருந்து இது உருவாக்கப்பட்டதொரு வழித்தோன்றலாகும் மேலும்
விவரங்களுக்குhttps://openpcr.org/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க
PocketPCR
கௌடி ஆய்வகத்தின் இந்த பாக்கெட்பி.சி.ஆர் எனும் வெப்பசுழல் என்பது சிறிய சோதனைக் குழாய்களில் ஒரு திரவத்தின் வெப்பநிலையை உயர்த்துவதன் மூலமும் குறைப்பதன் மூலமும் உயிரியல் எதிர்வினைகளை செயல்படுத்திஅறிந்து கொள்ள பயன்படுகிறது. இதனை கணினி அல்லது திறன்பேசியில் தேவையில்லாத முன்னமைக்கப்பட்ட அளவுருக்களுடன்,ஒரு எளிய யூ.எஸ்.பி மின்னேற்பான் மூலம் இயக்கலாம், இது ஏதனும் ஒருசாதனத்துடன் இணைக்கப்பட்டு இயங்குவது அல்லது சுயமாக இயங்கிடும் திறன் கொண்டது. பிற பி.சி.ஆர் வாய்ப்புகளைப்போலவே, இந்தச் சாதனமும் கொரோனா வைரஸிற்கான சுற்றுச்சூழல் பரிசோதனைக்கு வழிவகுக்கும், இருப்பினும் அதன் செயல் திட்டப்பக்கமானது இதனை பற்றி வெளிப்படையாகக் கூறப்படவில்லை. இது ஜி.பி.எல்.வி3.0 உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது. மேலும் விவரங்களுக்கு gaudi.ch/PocketPCR/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க
OPENLUNG ventilator
இது ஒரு விரைவான வரிசைப்படுத்தலிற்கான வென்டிலேட்டர் ஆகும், காற்றும் வெளிச்சமும் எளிதாக வந்து செல்வதற்கு வசதி ஏற்படுத்துவதற்காக இது ஒரு bagvalve mask (BVM) என்பதை பயன்படுத்தி கொள்கின்றது, அம்பு-பை(Ambu-bag) என அழைக்கப்படும்
இது ஒரு முக்கிய அங்கமாக திகழ்கின்றது. இந்த அம்பு-பைகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு, சான்றளிக்கப்படுகின்றன இவை சிறியவையாகவும், இயந்திரத்தனமாகவும் எளிமையானவையாகவும் உள்ளன, இவை ஆக்கிரமிப்புகுழாய் ,முகமூடி ஆகிய இரண்டிற்கும் பொருந்தக்கூடியவை. மேலும் அரை தன்னாட்சி செயல்பாட்டை இயக்கும் குறிக்கோளுடன், கொண்ட இந்த OPENLUNG ventilator ஆனது காற்று அழுத்தத்தையும் ஓட்டத்தையும் உணரவும் கட்டுப்படுத்தவும் மீச்சிறு மின்னனுக்களை பயன்படுத்திகொள்கின்றது. இந்தஆரம்ப கட்டத் செயல்திட்டமானது நூற்றுக்கணக்கான பங்களிப்பாளர்களைக் கொண்ட ஒரு பெரிய குழுவைக் கொண்டுள்ளது, இது GPLv3.0 எனும் உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றதுமேலும் விவரங்களுக்கு gitlab.com/TrevorSmale/low-resource-ambu-bag-ventilor எனும் இணையதள முகவரிக்கு செல்க
Pandemic Ventilator
இது ஒரு DIY வென்டிலேட்டர் முன்மாதிரி ஆகும். RepRap செயல்திட்டத்தைப் போலவே, இது அதன் வடிவமைப்பில் பொதுவாக கிடைக்கக்கூடிய வன்பொருள் கூறுகளைப் பயன்படுத்தி கொள்கின்றது. இந்த செயல்திட்டம் 10 ஆண்டுகளுக்கு முன்பு பயனாளர் Panvent பயிற்றுவிப்பாளர்களுக்கு பதிவேற்றப்பட்டது, மேலும் அதை தயாரிக்க ஆறு முக்கிய படிமுறைகள் உள்ளன.இந்த செயல் திட்டமானது CC BY-NC-SA எனும் உரிமத்தின்கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது. மேலும் விவரங்களுக்கு www.instructables.com/id/The-Pandemic-Ventilator/ எனும் இணையதள முகவரிக்கு செல்க
Folding at Home
புரதத்தின் இயக்கநேரத்தை உருவகப்படுத்துவதற்கான ஒரு விநியோகிக்கப்பட்ட கணிப்பு செயல் திட்டமே இந்த Folding at Home ஆகும் இதில்புரத மடிப்பு செயல்முறை, பல்வேறு நோய்களில் சிக்கியுள்ள புரதங்களின் இயக்கங்கள்ஆகியவை அடங்கும். பொதுமக்கள் ,விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் தன்னார்வலர்கள் தங்களுடைய கணினிகளை வீட்டிலேயே பயன்படுத்திக் கொள்ளவும் செயல்முறையிலிருந்து அறவே நீக்கம் செய்யப்பட்ட SETI@Home project என்பதை போன்றே உருவகப்படுத்துதல்களை இயக்க வும் இது உதவுகிறது. மிக முக்கியமாக நாம் திறமையான கணினி வன்பொருள் தொழில்நுட்ப வல்லுநராக இருந்தால், Folding at Home நமக்கானதாகும் என்ற செய்தியை மனதில் கொள்க .
இது புதிய சிகிச்சை வாய்ப்புகளைத் தேடுவதற்காக ஒரு புரதம் எடுக்கக்கூடிய வடிவங்கள் மற்றும் மடிப்பு பாதைகளை மாதிரியாக மாற்றுவதற்கு மார்கோவ் மாநில மாதிரிகளை பயன் படுத்திகொள்கின்றது. வாஷிங்டன் பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளர் கிரெக் போமனின் இடுகையில் இது எவ்வாறு செயல்படுகிறது.என்றும் இந்தசெயல்திட்டத்தில் நாம் எவ்வாறு உதவலாம் என்பது பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம்.
இந்த செயல் திட்டத்தில் ஹாங்காங்,குரோஷியா,சுவீடன் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கல்வி ஆய்வகங்கள் பங்களிப்பாளர்கள் வணிக நிறுவன பங்களிப்பார்களின் கூட்டமைப்பு பங்குகொண்டுள்ளனர்
இது ஜிபிஎல் உரிமம்,தனியுரிமம் ஆகியவற்றின் கலவையான உரிமங்களின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது இதுவிண்டோ மேக் குனு /லினக்ஸ் ஆகிய இயக்கமுறைமைகளில் செயல்படும் திறன்மிக்கதாகும்.மேலும் விவரங்களுக்கு foldingathome.org/ எனும் இணையதள முகவரிக்கு செல்க