உங்கள் வரவு செலவுகளை கவனிக்க ஒரு சிறந்த கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 17

By | April 20, 2025

உங்களுடைய வரவு செலவுகளை பார்ப்பதற்கு மற்றும் எங்கு செலவழிக்கிறோம் என்றே தெரியாமல் பணம் செலவழிகிறது? என்று வருந்துபவர்களுக்கு ஒரு கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலி இருக்கிறது

இந்த ஆண்ட்ராய்டு செயலியானது முழுக்க முழுக்க கட்டற்ற முறையில் தயாரிக்கப்பட்டு இருப்பதால், உங்களுடைய தகவல்கள் மற்றும் வரவு செலவு கணக்குகள் பெரு நிறுவனங்களின் கைகளில் சென்று விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்படுமோ என்று வருந்த வேண்டாம்.

இந்த செயலியானது மிகவும் எளிமையான மற்றும் நுட்பமான வரவு செலவு கணக்குகளை சமாளிக்கக்கூடிய வசதிகளை வழங்குகிறது. ஆனால், இந்த செயலியில் உங்களுக்கு 60 நாட்களுக்கு மட்டுமே இலவச அணுகல் வழங்கப்படுகிறது. அதற்குப் பிறகாக, இந்த செயலியை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 500 வரை செலவழிக்க வேண்டி இருக்கும். அல்லது இந்த செயலியை மாதம் ஒருமுறை பதிவிறக்கி அழித்துவிட்டு, மீண்டும் பதிவிறக்கி பயன்படுத்த முடியும். கேட்பதற்கு சற்றே வேடிக்கையாக இருந்தாலும், உங்கள் வரவு செலவு கணக்குகளை 60 நாட்களுக்கு மேல் பராமரிக்க வேண்டும் என்றால், 500 ரூபாய் செலவழித்து இந்த செயலியை பணம் கொடுத்து பயன்படுத்தலாம்.

இல்லை மாதாமாதம் பயன்படுத்திவிட்டு அடுத்த மாதத்திற்கு புதியதாக கணக்குப் போட்டுக் கொள்ளலாம் என்றால் நான் முதலில் சொன்ன வழியை பின்பற்றலாம். எளிமையாக புரியும் வகையில் மற்றும் பயன்படுத்தும் வகையிலேயே இந்த செயலி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. முன்பே சொன்னது போல, கட்டற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதால், தரவுகள் திருடப்படும் எந்த வித அபாயமும் இல்லை.

இந்த செயலியின் பெயர் my expenses ஆகும். வேறு பல இலவச வரவு-செலவு கணக்குகளை பார்க்கக்கூடிய செயலிகள் ப்ளே ஸ்டோரில் கூட காணக் கிடைக்கும். ஆனால், அத்தகைய செயலிகளில் விளம்பரங்கள் அதிகமாக இருப்பதால் பயன்படுத்தும் போது சிக்கல்கள் ஏற்படும்.

மேலும், உங்களுடைய தனிப்பட்ட வரவு செலவு கணக்குகள் அந்த செயலியை உருவாக்குபவர்களுக்கு தெரிய வந்து அந்த தகவல்களை வேறு நிறுவனங்களுக்கு விற்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, அது தேவையற்ற தனி உரிமை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

இந்த செயலியானது, அதிகப்படியாக நான் வரவு செலவு கணக்குகளை பார்ப்பேன்! மற்றும் சிறிய அளவில் அல்லது பெருமளவில் தொழில் செய்து வருபவர்களுக்கு மொபைலில் இருந்து பார்ப்பதற்கு உண்மையிலேயே வசதியான ஒரு செயலி தான். அத்தகைய, ஒரு சூழ்நிலையில் ஒரேடியாக 500 ரூபாயை செலவழித்து இந்த செயலி திட்டத்தை முழுவதுமாக வாங்கி விடுவது உண்மையிலேயே நல்ல முதலீடாக அமையும்.

வாய்ப்பிருப்பின் இந்த செயலியை பயன்படுத்திப்பாருங்கள். இதற்கான இணைப்பை கீழே வழங்குகிறேன்.

f-droid.org/packages/org.totschnig.myexpenses

மீண்டும் ஒரு கட்டற்ற செயலியோடு சந்திப்போம்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com