மென்பொருள் சுதந்திர தினம் 2018 – காஞ்சிபுரம் – செப் 29 2018 – அழைப்பிதழ்

வணக்கம், காஞ்சி லினக்‌ஸ் பயனர் குழு, இந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி மென்பொருள் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. தேதி – செப் 29, 2018 சனி நேரம் – காலை 10 முதல் மாலை 5 வரை இடம். ஏ.கே. தங்கவேல் உயர் நிலைப்பள்ளி, தும்பவனம் தெரு, கீரை மண்டபம் அருகில், காஞ்சிபுரம் வரைபடம்  – www.openstreetmap.org/note/1541256#map=17/12.82289/79.70818&layers=N   நிகழ்ச்சி நிரல் ====== 1. கட்டற்ற மென்பொருட்கள் – ஒரு அறிமுகம் உரை –… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 24. இயல்மொழி ஆய்வு கருவித் தொடரி

இயல்மொழி ஆய்வில் எந்தவொரு வேலையை நிறைவேற்றவும் பல பணிகளை ஒன்றன்பின் ஒன்றாகச் செயல்படுத்த வேண்டும். எந்தவொரு சிறிய வேலைக்குக் கூட பெரும்பாலும் கீழ்க்கண்ட பணிகள் இன்றியமையாதவை: வாக்கியங்களைப் பிரித்தல் சொற்களைப் (நிறுத்தற் குறிகளையும் சேர்த்து) பிரித்தல் சொல்வகைக் குறியீடு செய்தல் அடிச்சொல்லையோ, தண்டுச்சொல்லையோ பிரித்தெடுத்தல் இதன் பின்னர், தேவையைப் பொருத்து, சார்புநிலைப் பிரிப்பியை வைத்து கிளைப்பட வங்கிகளாகவோ அல்லது சொற்பகுப்பியல் ஆய்வியை வைத்து உருபன்களாகவோ பிரிப்போம். ஆக, குறைந்த பட்சம் ஐந்தாறு பணிகளை ஒன்றன்பின் ஒன்றாகச் செயல்படுத்துவோம்.… Read More »

Machine Learning – 4 – Linear Regression

Simple & Multiple Linear Regressions Simple Linear என்பது இயந்திர வழிக் கற்றலில் உள்ள ஒரு அடிப்படையான algorithm ஆகும். இதில் இரண்டு விவரங்கள் எவ்வாறு தொடர்பு படுத்தப்படுகின்றன, algorithm எவ்வாறு தனது புரிதலை மேற்கொள்கிறது, அந்தப் புரிதல் எந்த அளவுக்கு சரியாக உள்ளது என்பது போன்ற விஷயங்களையெல்லாம் ஒருசில தரவுகளை வைத்து செயல்முறையில் செய்து பார்க்கப் போகிறோம். உதாரணத்துக்கு ஒரு பிட்சாவின் அளவினைக் கொண்டு அதன் விலையை எவ்வாறு நிர்ணயிப்பது என இப்பகுதியில் காணலாம். இதுவரை… Read More »

மென்பொருள் சுதந்திர தினம் 2018 – புதுவை – செப் 23 2018 – அழைப்பிதழ்

அனைவருக்கும் வணக்கம், கட்டற்ற மென்பொருள்/வன்பொருள் அமைப்பு, புதுவை (FSHM) இந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி மென்பொருள் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. சுதந்திர மென்பொருள் தினமானது உலகெங்கிளும் உள்ள கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் ஒன்றாக கூடி, சுதந்திர மென்பொருள், சுதந்திர கலாச்சாரம், சுதந்திர வன்பொருள், கருவிகள் பற்றி விவாதித்து, உரையாடி, பயன்படுத்தி காட்டும் நாள். இங்கு 15-20 நிலையகங்கள் (Stalls) வைக்கப்படும். கடந்த ஆண்டுகளில் கட்டற்ற மென்பொருள் குழுக்களிடையே… Read More »

FSFTN – மென்பொருள் சுதந்திர தினம் 2018 அழைப்பிதழ்

  அனைவருக்கும் வணக்கம், கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு (FSFTN) இந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி மென்பொருள் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. சுதந்திர மென்பொருள் தினமானது உலகெங்கிளும் உள்ள கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் ஒன்றாக கூடி, சுதந்திர மென்பொருள், சுதந்திர கலாச்சாரம், சுதந்திர வன்பொருள், கருவிகள் பற்றி  விவாதித்து, உரையாடி, பயன்படுத்தி காட்டும் நாள். இங்கு 15-20 நிலையகங்கள் (Stalls) வைக்கப்படும். கடந்த ஆண்டுகளில் கட்டற்ற மென்பொருள்… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 23. சார்புநிலை பிரிப்பி, சுட்டுப்பெயர் தீர்வு, தலைப்பு பிரித்தெடுத்தல்

சார்புநிலை பிரிப்பி இயல்மொழியைப் புரிந்து கொள்வது கடினமானது!  “I saw a girl with a telescope” என்ற வாக்கியத்தைப் பாருங்கள். தொலைநோக்கி வைத்திருந்த பெண்ணை நீங்கள் பார்த்தீர்களா அல்லது நீங்கள் தொலைநோக்கி மூலம் பார்த்தீர்களா? இது ஆங்கில எடுத்துக்காட்டு. எனினும் தமிழிலும் இதே பிரச்சினை உள்ளது. “ஜெயலலிதாவைத் திருப்திப்படுத்தும் ஆர்வத்தில் சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேச ஆரம்பித்ததும் அ.தி.மு.கவினர் குறுக்கீடு செய்தனர்.” என்று செய்தித் தலைப்பு. ஜெயலலிதாவைத் திருப்திப்படுத்தும் ஆர்வம் காங்கிரஸுக்கா அல்லது அ.தி.மு.கவினருக்கா? இம்மாதிரி… Read More »

கணியம் அறக்கட்டளை பதிவு – மின் உரிமை மேலாண்மை இல்லா உலகம் படைப்போம்

  மூலம் – commons.wikimedia.org/wiki/File:Digital_Restriction_Management-2018.svg உலகெங்கும் இன்று “மின் உரிமை மேலாண்மை (DRM) க்கு எதிரான ஒரு நாள்” என்று கொண்டாடப்படுகிறது. மின்னணு கோப்புகளைப் பகிர்வதை தடுக்கும் வகையில் பல்வேறு கருவிகளும் மென்பொருட்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவை அறிவுப் பகிர்தலை தடுப்பதுடன், சமூக வளர்ச்சியையும் பாதிக்கின்றன. இதற்கு எதிராக பல்வேறு அமைப்புகளும் நிறுவனங்களும் உலகெங்கும் குரல் கொடுத்து வருகின்றன. மேலும் அறிய www.defectivebydesign.org/dayagainstdrm DRM பற்றிய கட்டுரைகள் தமிழில் இங்கே – மின் உரிமை மேலாண்மை /… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 22. அடிச்சொல், தண்டுச்சொல் மற்றும் சொற்பகுப்பாய்வு

பகுதி விகுதி இடைநிலை சாரியை சந்தி விகாரம் ஆறினும் ஏற்பவை முன்னிப் புணர்ப்ப முடியும் எப்பதங்களும் நன்னூல். பதவியல் – 133 (13 ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூல்) சொற்பகுப்பியல் (morphology) சொற்கள் எப்படி சிறிய அலகுகளால் உருவாக்கப்படுகின்றன என்ற சொல் கட்டமைப்பு ஆய்வை சொற்பகுப்பியல் அல்லது உருபனியல் என்று சொல்கிறோம். சொல் என்பது என்ன? மொழியை எழுதும்போது, சொல் என்பது இரு இடைவெளிகளுக்கு இடையே இருப்பது என்று நாம் சொல்லலாம். ஆனால்… Read More »

அமேசான் இணையச்சேவைகள் – நேட் நுழைவாயில்கள்

தனிப்பட்ட துணைஇணையங்களிலுள்ள மேகக்கணினிகளுக்கு இணைய இணைப்பை வழங்குவதற்கு நேட் நுழைவாயில்கள் உதவுகின்றன. இணைய இணைப்பு கிடைத்துவிட்டால், பொதுத் துணைஇணையத்திற்கும் தனிப்பட்ட துணைஇணையத்திற்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடாதா? இணையத்திலிருக்கும் எவராலும், தனிப்பட்ட துணைஇணையத்தை நேட் நுழைவாயில் வழியாக அணுகமுடியுமா? இவற்றுக்கு விடைகாண்பதற்கு நேட் என்றால் என்னவென்று அறிந்துகொள்வது அவசியம். இணையமுகவரி மாற்றம் – Network Address Translation (NAT) சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், நேட் என்பது இடைத்தரகர் போல. தனிப்பட்ட துணைஇணையத்திலிருக்கும் மேகக்கணினியிலிருந்து துவங்கப்படும் இணையப் போக்குவரத்து, நேட் சாதனங்கள்… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 21. சொல்வலையும் சொல்லின் பொருளில் ஐயமகற்றலும்

அடுத்து வரும் நான்கு வாக்கியங்களைப் பாருங்கள். அவன் வீட்டிற்குச் சென்று இட்லி சாப்பிட்டான். பின்னர் அவன் சமையலறையைச் சுத்தம் செய்து விட்டு நாற்காலியில் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து, அவன் இருக்கையில் இருந்து எழுந்தான். அவன் படுக்கைக்குச் சென்றான், சில நிமிடங்களில் அவன் சத்தமாகக் குறட்டை விட்டான். இயல்மொழி செயலாக்கத்தில், வாக்கியங்களின் பொருளை அறிய கணினி நிரல்களைப் பயன்படுத்துகிறோம். மேலே உள்ள நான்கு வாக்கியங்களில், சொல்வலை (wordnet) உதவியுடன், கணினி நிரலால் பின்வருவனவற்றை அடையாளம் காண முடியும்.… Read More »