தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு 2023

வணக்கம். ஆண்டுதோறும் உலகெங்கும் மென்பொருள் விடுதலை விழா செப்டம்பர் 16 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழகத்தில் சென்னை, புதுவை, விழுப்புரம் ஆகிய ஊர்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. சென்ற ஆண்டு முதல், மென்பொருள் விடுதலை விழாவை, சென்னையில் பல்வேறு கட்டற்ற மென்பொருள் சார்ந்த அமைப்புகள் இணைந்து‘தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு’ என நடத்தி வருகிறோம். இதில், பல்வேறு இணைய உரைகள், ஒரு நாள் நேரடி மாநாடு, பல்வேறு பயிற்சிப் பட்டறைகள் என செப்டம்பர் மாதம் முழுதுமே… Read More »

சரியான தரவுத்தளத்தைத் தேர்ந்தெடுப்பதெவ்வாறு

நாம் நம்முடைய வழக்கமான பணிகளுக்கு சரியான தரவுத்தளத்தினை பயன்படுத்தி கொள்வதே பயன்பாட்டின் வெற்றிக்கு தேவையானதும் அடிப்படை யானதுமாகும். அவ்வாறான முக்கிய தரவுத்தள வகைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் நாம் அவைகளில் என்னென்ன சரிபார்க்க வேண்டும் என்பதை இப்போதுகாண்போம். இன்றைய தரவுமயமான உலகில், வணிக நிறுவனங்கள் தங்கள் தரவு சேமிப்பு , தரவு மேலாண்மை ஆகிய தேவைகளைக் கையாள தரவுத்தள அமைப்பைத் தேர்ந்தெடுக்கும் போது பல்வேறுவகைகளிலான வாய்ப்புகளை எதிர் கொள்கின்றன. மிகச்சரியான தரவுத்தளத்தினை தேர்வு செய்வது என்பதே மிகமுக்கியமானதாகும்,… Read More »

பேராலயமும் சந்தையும் 7. ரோஜா எப்போது ரோஜா அல்ல?

லினஸின் செயல்முறையை நுட்பமாக ஆய்வு செய்து, அது ஏன் வெற்றிகரமாக இருந்தது என்பது பற்றிய ஒரு கோட்பாட்டை உருவாக்கினேன். பிறகு, எனது புதிய திட்டத்தில் (லினக்ஸ் அளவுக்குச் சிக்கலானதோ அல்லது பெரிய அளவிலானதோ இல்லை என்றாலும் கூட) இக்கோட்பாட்டைச் சோதிக்கத் தெரிந்தே ஒரு முடிவை எடுத்தேன். நிரலை மையமாகவும், தரவுக் கட்டமைப்புகளை நிரலுக்கு ஆதரவாகவும் கருதினார் ஆனால் நான் செய்த முதல் வேலை, பாப்கிளையன்டை மறுசீரமைத்து எளிமைப்படுத்துவதுதான். கார்ல் ஹாரிஸின் செயலாக்கம் மிகவும் நன்றாக இருந்தது, ஆனால்… Read More »

MentDB எனும் கட்டற்றஇயங்குதளம்

MentDB என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற (Mentalese Database) எனும் இயங்குதளமானது AI, SOA, ETL, ESB, தரவுத்தளம், இணைய பயன்பாடு, தரவுத் தரம், முன்கணிப்பு பகுப்பாய்வு, chatbot ஆகியவற்றிற்கு, ஒரு புரட்சிகர தரவு மொழியில் (MQL) கருவிகளை வழங்குகிறது. இந்த சேவையகமானது புதிய தலைமுறை AI தருக்கபடிமுறை ,WWD ஐ அடைய ஒரு புதுமையான SOA எனும் அடுக்கினை அடிப்படையாகக் கொண்டது. Mentalese என்பது மனித மூளையை கட்டமைக்கின்ற சிந்தனையின் மொழி யாகும். இந்த மொழி பல்வேறு… Read More »

பேராலயமும் சந்தையும் 6. எத்தனை பேர் கவனம் வைத்தால் சிக்கலை அடக்கியாள முடியும்

வழுத்திருத்தம் மற்றும் நிரல் வளர்ச்சியை சந்தை பாணி பெரிதும் துரிதப்படுத்துகிறது என்பதை மேம்போக்காக கவனிப்பது ஒன்று. தினசரி நிரலாளர் மற்றும் சோதனையாளர் நடத்தையின் நுண்மட்டத்தில் அது எப்படி, ஏன் வேலை செய்கிறது என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொள்வது மற்றொரு சங்கதி. இக்கட்டுரையில் (முதல் ஆய்வுக் கட்டுரைக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டது. அதைப் படித்து, தங்களின் சொந்த நடத்தையை மறுபரிசீலனை செய்த நிரலாளர்களின் நுண்ணறிவைப் பயன்படுத்தி) உண்மையான இயங்குமுறைகளை நாம் மிகக்கவனமாக ஆராய்வோம். தொழில்நுட்பத்தில் நாட்டமற்ற வாசகர்கள் இதை… Read More »

பைதானின் AI, இயந்திர கற்றல்ஆகியவற்றிற்கான சிறந்த நூலகங்கள்

பொதுவாக கணினியை பயன்படுத்துவதில் அதிக ஆர்வமுள்ள அனைவரும் செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (ML) , ஆழ் கற்றல் (DL) ஆகியவற்றிற்கான சில சிறந்த பைதான் நூலகங்களைப் பற்றி அறிந்துகொள்வது மிகவும் நல்லது. திறமூல நூலகங்களின் பரந்த சேகரிப்பு காரணமாக நிறைய மென்பொருள் உருவாக்குநர்கள் பைத்தானுக்கு ஈர்க்கப்படுகிறார்கள். ஏனெனில் இதல் சமீபத்தில், இயந்திர கற்றல் (ML), செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் ஏராளமான நூலகங்கள் வளர்ந்து வருகின்றன. இந்த நூலகங்கள் தரவு அறிவியல், உருவப்படம், தரவுகளைக்… Read More »

பேராலயமும் சந்தையும் 5. முன்னதாக வெளியிடுக, அடிக்கடி வெளியிடுக

முன்னதாக வெளியிடுதல் மற்றும் அடிக்கடி வெளியிடுதல் லினக்ஸ் மேம்பாட்டு மாதிரியின் முக்கியமான அங்கமாகும். பெரும்பாலான நிரலாளர்கள் (நானும்தான்) மிகச்சிறியது தவிர மற்ற திட்டங்களுக்கு இது மோசமான கொள்கை என்று நம்பினர். ஏனெனில் தொடக்கப் பதிப்புகளில் வழு நிறைந்திருக்கும். உங்கள் பயனர்களின் பொறுமையை சோதிக்க விரும்ப மாட்டீர்கள். இக்கருத்துதான் பேராலயம்-பாணி வளர்ச்சிக்கான பொதுவான நம்பிக்கையை வலுப்படுத்தியது. பயனர்கள் முடிந்தவரை குறைந்த அளவு வழுக்களைப் பார்ப்பதே முக்கிய நோக்கமாக இருந்தால், நீங்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது அதைவிடக்… Read More »

FreeTamilEbooks.com பங்களிப்பாளர் இணையவழி நேர்காணல் – தேசிகன் நாராயணன் (சுஜாதா தேசிகன்)

FreeTamilEbooks.com இணையதளம் தமிழில் எண்ணற்ற புத்தகங்களை கட்டற்ற உரிமையில் (Creative Commons License) வெளியிடும் இணையதளம் அகும். இத்தளம் கணியம் அறக்கட்டளையால் தொடங்கப்பட்டு நடத்தி வரப்படுகிறது. இத்தளத்தில் தன் புத்தகத்தை கட்டற்ற உரிமையில் வெளியிட்ட ஆசிரியர் தேசிகன் நாராயணன் (சுஜாதா தேசிகன்) அவர்களுடன் இணையவழி நேர்காணல் நடைபெற உள்ளது. அவருடன் உரையாட விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் இணையவும். நேர்காணல் நிகழ்படப் பதிவு www.youtube.com/@TamilLinuxCommunity தளத்தில் வெளியிடப்படும். நாள்: சனி, 2023-08-12 நேரம்:… Read More »

உருவாக்கும் Generative) செயற்கை நுண்ணறிவின்: (AI)முன்னேற்றமும் எதிர்காலமும் -3

கடந்த பத்தாண்டுளில், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மிகமுக்கியமாக AI ஆனது நமது அன்றாட வாழ்வில் ஒருபகுதியக மிகவும் பரவலாக கலந்துவிட்டது. ஆழ்கற்றல் (DL) அல்லது நவீன செயற்கை நரம்பியல் வலைபின்னல்கள், அதிக அளவிலான தரவுகள் கிடைப்பது , DL மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்கான சக்தியைக் கணக்கிடுதல் உள்ளிட்ட பல காரணிகளால் AI இன் பரவலான பயன்பாடும் ஏற்றுக்கொள்வதும் காரணிகளாக இருக்கலாம். மிக சமீபத்தில், உருவாக்கும் AIஆனது பொது மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துவருகின்றது,இது… Read More »

பேராலயமும் சந்தையும் 4. பயனர்கள் இருப்பதன் முக்கியத்துவம்

பயனர்களைச் சரியாகப் பண்படுத்தினால் அவர்கள் இணை உருவாக்குநர்களாகவும் ஆகலாம் இப்படியாக நான் பாப்கிளையன்ட்டைப் பெற்றேன். அதைவிட முக்கியமாக, நான் பாப்கிளையன்ட்டின் பயனர் அடித்தளத்தைப் பெற்றேன். பயனர்கள் நமக்குத் தேவையான அற்புதமான நபர்கள். நாம் ஓர் உண்மையான தேவைக்குச் சேவை செய்கிறோம், எதையோ சரியாகச் செய்துள்ளோம் என்பதை அவர்கள் நிரூபிப்பதால் மட்டுமல்ல. சரியாகப் பண்படுத்தினால், அவர்கள் இணை உருவாக்குநர்களாகவும் ஆகலாம். யூனிக்ஸ் பாரம்பரியத்தின் மற்றொரு பலம், பல பயனர்கள் கொந்தர்களாகவும் (hackers) உள்ளனர். இதையே லினக்ஸ் நல்ல உச்சநிலைக்குக்… Read More »