pandocஎனும் கட்டற்றமென்பொருள்ஒரு அறிமுகம்

இது எந்தவொரு வடிவமைப்பிலான உரையையும் எந்தவொரு வடிவமைப்பிற்கும் உருமாற்றிட உதவுகின்றது

அதாவது சாதாரண உரையை அல்லது குறிமுறைவரிகளை உரைசெயலிகளில் பயன்படுத்திகொள்வதற்காக நகலெடுத்து கொண்டுசென்று ஒட்டி பயன்படுத்திடுவோம் அதற்கு பதிலாக அவ்வுரைகோப்பினை நாம் விரும்பும் வடிவமைப்பில் உருமாற்றம் செய்திட தனியுடமை மென்பொருட்கள் பல தயாராக உள்ளன அதைவிட GPLஎனும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள pandoc எனும் கட்டற்ற பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்ளலாமே இது சாதாரண உரைமட்டுமல்லாது Markdown கோப்பு போன்றது மட்டுமல்லாமல் வேறு எந்தவகை கோப்பாக இருந்தாலும் நாம் விரும்பும் doc,PDF, HTML,Epub என்பன போன்ற எந்தவொரு வடிவமைப்பிற்கும் உருமாற்றம் செய்து வெளியிட உதவகின்றது இது லினக்ஸ் மேக் விண்டோ ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது இது வரைகலை இடைமுகப்பு கொண்ட பயன்பாடு அன்று இது ஒரு கட்டளைவரி பயன்பாடாகும் என்ற செய்தியை மட்டும் மனதில் கொள்க இதனை pandoc.org/ எனும் இணையதள பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்தபின்னர் pandoc.org/installing.html எனும் இணையதள பக்கத்தில் கூறியுள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து கொள்க.அதன்பின்னர்

pandoc -t odt filename.md -o filename.odt

என்றவாறு கட்டளைவரியை செயல்படுத்தி லிபர் ஆபிஸ் உரைச்செயலியை பயன்படுத்தி கொள்ளமுடியும் இதில் filename என்பது நாம் பயன்படுத்தி கொள்ளவிழையும் நம்முடைய கோப்பின் பெயராகும்.odt என்பதற்கு பதிலாக docஎன்றும் நம்முடைய கோப்பின் வகைக்கேற்றவாறு பின்னொட்டுகளை பயன்படுத்தி கொள்க இதைவிட தொடர்புடைய வகைகோப்பின் நாம் பயன்படுத்தி கொள்ள தயாராக இருக்கும் மாதிரிபலகத்தை பயன்படுத்தி கொள்ளமுடியும்

echo %cd% எனும் விண்டோ இயக்கமுறைமை கட்டளைவரியின் வாயிலாக நம்முடைய கோப்பு இருக்கும் கோப்பகத்திற்கு செல்க

mkdir

எனும் விண்டோ இயக்கமுறைமை கட்டளைவரியின் வாயிலாக நாம் சேமிக்கவிரும்பும் நம்முடைய பதிய துனைகோப்பகத்தை 
உருவாக்கி கொள்க இதனை பயன்படுத்தி கொள்ளும்போது எழும் சந்தேகங்களை தீர்வுசெய்து கொள்ள 
https://pandoc.org/faqs.html எனும் இணையதளபக்கத்திற்குசெல்க 
%d bloggers like this: