PHP கற்கலாம் வாங்க – பாகம் 3

தரவுவகைகள்(DataTypes) :

 

தரவுவகை என்பது தரவின் சில பண்புநலன்களைக் குறிக்கின்ற ஒரு பொதுவான பெயராகும். PHP மிக அதிகப்படியான தரவுவகைகளைத் தருகிறது. இதனை இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். அவை Scalar DataTypes மற்றும் Compound DataTypes ஆகும்.

Scalar DataTypes :

ஒரே ஒரு மதிப்பினைக் குறிப்பிடுவதை Scalar DataTypes என்கிறோம். இதில் பல்வேறு தரவுவகைகள் அடங்குகின்றன. அவை Boolean, Integer, Float, and String போன்றவைகளாகும்.

Boolean Type:

George Boole என்ற கணிதமேதையால் கண்டுபிடிக்கப்பட்ட இதற்கு Boolean என்று பெயரிடப்பட்டது. இது இரு மதிப்புகளைக் கொண்டுள்ளது : TRUE அல்லது FALSE. FALSE-ஐக் குறிப்பிடுவதற்கு 0-வையும், TRUE-ஐக் குறிப்பிடுவதற்கு பூஜ்ஜியத்தைத் தவிர எந்த ஒரு எண்ணையும் பயன்படுத்தலாம்.

$bool_val = TRUE; //$bool_val is true

$bool_val = -1; //$bool_val is true

$bool_val = 0; //$bool_val is false

Integer Type :

எந்த ஒரு முழுவெண்ணையும் Integer என்று கூறலாம். PHP-யானது decimal, octal, hexadecimal போன்றவை எண்களை முழுவெண்களாக கருதுகிறது.

31 //decimal

-62334 //decimal

0716 //octal

0xD3F //hexadecimal

 

Float Type :

இந்த மிதவை எண்கள் floats, double, அல்லது real numbers போன்றவைகளையும் குறிக்கின்றது. PHP-யில் இதனை கீழ்கண்ட வெவ்வேறு வழிகளில் குறிப்பிடலாம்.

1.234

5.0

2.7e4

1.43E+15

 

String Type :

String என்பது எழுத்துருக்களின் தொகுப்பாகும்(group of characters). இதனை single அல்லது double quotes குறியீட்டினைப் பயன்படுத்தி குறிப்பிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக,

“PHP is a popular language”

‘*9mystring’

“592$%^324”

 

String-ல் உள்ள ஒரு குறிப்பிட்ட எழுத்துருவினை பிரித்தெடுக்க array வகையினைப்(அடுத்த பகுதியில் விளக்கப்பட்டுள்ளது) பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக,

$language = “PHP”;

$parser = $language[0]; // Assigns ‘P’ to $parser

Compound DataTypes :

வேவ்வேறு வகையிலான மதிப்புகளை ஒரே வகையினுள் கொண்டுவருவதற்கு Compound DataTypes பயன்படுத்தப்படுகிறது. array மற்றும் object -ஆனது இதில் அடங்கும்.

Array Type:

இதில் பல்வேறு வகையான மதிப்புகளை(boolean, float, integer, string மற்றும் array) ஒரே தொகுப்பாக பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக,

$dataCollection[0] = true;

$dataCollection[1] = 123.454;

$dataCollection[2] = 10;

$dataCollection[3] = “PHP”;

Array-ஐப்பற்றி வருகின்ற கட்டுரைகளில் விரிவாகக் காணாலாம்.

Object Type:

இதனை object-oriented programming பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. இது மற்ற தரவுகளைப் போல் அல்லாமல் ஒரு தனச்சிறப்பு வாய்ந்ததாகும். ஒரு பொதுவான உதாரணத்தை இங்கு காண்போம் :

class A {

private $_b;

function setValue($val) {

$this->_b = $val;

}

}

$obj = new A; //object created

இந்த $obj-ன் மூலமாக class A-லுள்ள அனைத்தையும் கையாளலாம். இதனைப் பற்றி வருகின்ற கட்டுரைகளில் விரிவாகக் காணாலாம்.

 

அடுத்த இதழில் PHP-யின் தரவுவை மாற்றங்கள் மற்றும் வெவ்வேறான மாறிகளின் பயன்பாடுகைளப் பார்ப்போம்.

 

செல்வமணி சம்பத், இணைய தள வல்லலுநர்,

காஞ்சி லைனக்ஸ் பயனர் குழுவின் உறுப்பினர்,

மின்னஞ்சல் : selva.infobees@gmail.com

வலை : infobees.wordpress.com

%d bloggers like this: