Piezo electric(அழுத்த மின்)விளைவு என்றால் என்ன? |எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 13

எளிய எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான பல கட்டுரைகளை பார்த்து வருகிறோம்.

நாம் அனுதினமும் கடந்து வரக்கூடிய ஒரு மிக முக்கியமான விளைவு தான்; இந்த பிசோ எலக்ட்ரிக் விளைவு.

இது குறித்து நம்மில் பல அறிந்திருப்பதில்லை.

இதுகுறித்து விரிவாக பார்ப்பதற்கு முன்பாக, என்னுடைய பிறை எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை பார்வையிட, கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

kaniyam.com/category/basic-electronics/

பிசோ எலக்ட்ரிக் விளைவு தமிழில் அழுத்தமின் விளைவு என அறியப்படுகிறது.

ஒரு பொருளின் மீது குறிப்பிட்ட அழுத்தத்தை வழங்கும்போது, அதிலிருந்து மின்சாரம் வெளிப்படுவது அழுத்த மின் விளைவு எனப்படும்.

மேலும் இந்த விளைவு தலைகீழாக்கப்படக்கூடியது (reversible process).

உதாரணமாக, உங்களிடத்தில் ஒரு கல் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.அந்த கல்லின் மீது மிக வேகமாக சுத்தியலால் தட்டும்போது, அதில் இருந்து மின்சாரம் உருவாகும் பட்சத்தில்! அது அழுத்தமின் விளைவு கொண்ட கல்(piezo electric crystal)என பொருள்படும்.

கேட்பதற்கு ஏதோ வினோதமாக இருக்கிறது அல்லவா? ஆனால் நீங்கள் கவனித்திருக்கக்கூடும்! சில கற்களின் மீது வேகமாக தட்டும் போது அதிலிருந்து தீப்பொறிகள் கிளம்பும் இதுவும் ஒரு வகையில் அழுத்தமின் விளைவின் ஒரு வெளிப்பாடுதான்.

அழுத்தத்தின் விளைவுக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு குவார்ட்ஸ் கற்கள்(quartz crystal).

குவார்ட்ஸ் கற்களின் மீது, நீங்கள் மின்னழுத்தத்தை(electric potential)செலுத்தும் போது அதனுடைய வடிவமைப்பில் மாற்றங்கள் ஏற்படும்.

குவார்ட்ஸ் படிகத்தின் மீது மின்அழுத்தத்தை செலுத்தும் போது, வினாடிக்கு 32768 முறை அதிர்வு ஏற்படுகிறது.

சரி இதனால் என்னதான் பயன்? என்று நீங்கள் கேட்டால்! நீங்கள் தினமும் வீட்டில் பயன்படுத்தக்கூடிய கடிகாரங்கள், உங்கள் கையில் கட்டி இருக்க கூடிய கை கடிகாரங்கள், ஏன்? உங்களுடைய பெரும்பாலான ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் கூட இதே முறையில் தான் நேரம் கணிக்கப்படுகிறது.

மேலும், ஒரு சில ஸ்கேனிங் தொழில்நுட்பங்களில் கூட பிசோ எலக்ட்ரிக் விளைவு பயன்படுகிறது.

மேலும், இத்தகைய அழுத்தமின் விளைவு கொண்ட பொருட்களை பயன்படுத்தி நிலநடுக்கங்களின்(Destruction sensors)தீவிர தன்மையை கூட ஆராய முடியும்..

கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆராய்வதற்கும், இன்னபிற கட்டுமானத்துறை சிக்கல்களை கண்டறிவதற்கும் கூட இதை பயன்படுத்த முடியும்.

மேலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் லைட்டர்கள்(lighters),எலக்ட்ரானிக் இசைக்கருவிகள்(music instruments),கடிகாரங்கள்(clocks),அச்சு எடுக்கும் கருவிகள் போன்றவற்றிலும் கூட இவை பயன்படுத்தப்படுகிறது.

சரி செயல் முறையைப் பற்றி பார்த்து விடலாம்.

மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள படி ஒரு அழுத்தமின் விளைவு கொண்ட கல்லின் மீது, மின்னழுத்தம் செலுத்தப்படுகிறது.இதன் காரணமாக, அதனுடைய பரிமாணத்தில் மாற்றம் ஏற்படுகிறது.

அதன் நீளம் குறையவோ, அதிகரிக்கவோ செய்கிறது.

ஆனால், இதை வெறும் கண்களால் பார்ப்பது சற்று கடினம் தான். உதாரணமாகz lead zirconite titanite எனும் வகையிலான படிகத்தின்  மின்னழுத்தத்தை வழங்கும்போது! அதனுடைய, உண்மையான அமைப்பில் இருந்து 0.1 சதவீதம் மாற்றமடைகிறது.

ஆனால், இவ்வாறு மாற்றமடையும்போது இத்தகைய கற்கள் அதாவது படிகங்கள் மீ ஒளி(ultra sound) அலைகளை உருவாக்குகின்றன.

மருத்துவமனைகளில் பயன்படுத்தக்கூடிய மீஒலி ஸ்கேனிங் தொழில்நுட்பத்தில்(ultra sound scan) முதன்மையாக பயன்படுத்தப்படுவது பிசோ எலக்ட்ரிக் விளைவுதான்.

ரேடியத்தை கண்டறிந்துமேரி கியூரியின் கணவர் பீரி க்யூரி தான்; இந்த பிசோ எலக்ட்ரிக் விளைவை 1880 ஆம் ஆண்டு கண்டறிந்தார்.

மேலும், இந்த பிசோ எலக்ட்ரிக் முறையை பயன்படுத்தி, மிகவும் அதிகப்படியான மின்னழுத்த வேறுபாட்டை(production of  high voltages)கூட உங்களால் உருவாக்க முடியும்.

இன்றைக்கு உள்ள எலக்ட்ரானிக் உலகின், மிகவும் அடிப்படையான கோட்பாடாக அழுத்தமின் விளைவு செயல்படுகிறது.

நிச்சயமாக! நீங்கள் பள்ளிகளில் அழுத்த மின் விளைவு அதாவது பிசோ எலெக்ட்ரிக் விளைவு குறித்து படித்திருப்பீர்கள்.

அதன் பின்னால் இருக்கக்கூடிய, பல மலைக்க வைக்கும் பயன்பாடுகளை! இந்த கட்டுரையின் மூலமாக நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இந்த கட்டுரை தொடர்பான தகவல்களை விக்கிபீடியாவில் இருந்து நான் சேகரித்திருந்தேன். மேலும், எனக்குத் தெரிந்த தகவல்களையும் இதனோடு இணைத்து இருக்கிறேன்.

மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் இயற்றவும்.

மீண்டும் ஒரு எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான கட்டுரைகள் உங்களை வந்து சந்திக்கிறேன்.

கட்டுரையாளர்:-

ஶ்ரீ காளீஸ்வரர் செ,

இளங்கலை இயற்பியல் மாணவர்,

(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி,

நாகர்கோவில் – 02)

இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,

கணியம் அறக்கட்டளை.

மின்மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com

இணையம்: ssktamil.wordpress.com

%d bloggers like this: