Archive

கட்டற்ற மென்பொருள் உலகம் – இந்த வார செய்திகள் – 2024-08-04

இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள். [Parameshwar’s News] [Thanga Ayyanar News]

MinGW எனும் குறைந்தபட்ச குனுவிண்டோ மேம்பாட்டு சூழல் ஒருஅறிமுகம்

MinGWஎனும் சுருக்கமான பெயரில் அழைக்கப்பெறும் விண்டோஇயக்கமுறைமைகளில் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான மைக்ரோசாப்ட்டின்சொந்த குறைந்தபட்ச குனு விண்டோ(Minimalist GNU for Windows) மேம்பாட்டு சூழலானது தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இந்த.MinGW என்பது பொது நலன் மென் பொருளாக பதிவு செய்யப்பட்ட ( பதிவு எண் 86017856) ஒரு வர்த்தக முத்திரையாகும்; இது MinGW.org எனும் இணையதளத்தின் சார்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது,…
Read more

FSFTN இன் தமிழ் தொழில்நுட்ப ஒலியோடை – பகுதி 2

FSFTN இன் தமிழ் தொழில்நுட்ப
ஒலியோடை – பகுதி 2

இந்த வாரம் ஒலியோடையில், பேஸ் ஆப்பின் (Faceapp) விதிமுறைகள் மற்றும்
நிபந்தனைகள், கே டி இ (KDE) இல் உள்ள ஒரு பாதுகாப்பு பிழை, தி கிரேட் ஹேக்
(The Great Hack ) என்னும் ஆவணப்படம், ஓபன் ஸ்ட்ரீட் மேப்பின் (Open Street
Map) 15 வது பிறந்த நாள் மற்றும் இந்த வார இலவச மற்றும் திறந்த மூல
மென்பொருளான ஜாமி (Jami) பற்றி உரையாடியுள்ளோம். இதில் ராதா கிருஷ்ணன் மற்றும்
சர்வேஷ் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஒலியோடை பற்றிய உங்களது கருத்துக்களை எங்களுக்கு எழுதுங்கள் :
ask@fsftn.org

FSFTN பற்றி மேலும் அறிய : fsftn.org/

FSFTN இன் தமிழ் தொழில்நுட்ப ஒலியோடை: பகுதி 1

FSFTN இன் தமிழ் தொழில்நுட்ப ஒலியோடை: பகுதி 1
files.fsftn.org/s/dT2awkCCP2977Hq

எங்களது முதலாம் ஒலியோடைத் தொடரில், ட்ரு காலர் (True Caller) செயலியில் உள்ள பிழையை பற்றியும், நமது அரசின் டி.என்.ஏ தொடர்பான சட்டத்தைப் பற்றியும், டக்ஸ் கார்ட் (Tux Kart) என்கிற காணொலி விளையாட்டைப் பற்றியும், ப்ளெண்டர் என்னும் முப்பரிமாண (3D) வரைகலை மென்பொருளைப் பற்றியும், வேறு சிலவற்றை பற்றியும் பேசியுள்ளோம். இந்த ஒலியோடையில் ராதா கிருஷ்ணன், பாரதி மற்றும் சர்வேஷ் பங்கேற்றுள்ளார்கள்.

இந்த ஒலியோடையை கேட்டப்பின் உங்களது கருத்துக்களை எங்களுடன் பருகுங்கள், அது நாங்கள் முன்னேற உதவியாய் இருக்கும்.

இந்த ஒலியோடையைப் பற்றி எங்களுக்கு எழுதுங்கள் : ask@fsftn.org

FSFTN பற்றி மேலும் அறிந்துகொள்ள : fsftn.org/

இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டத்தில், கொடுங்கண்காணிப்புக்கான மாற்றங்கள் – ஒலியோடை

இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டத்தில், கொடுங்கண்காணிப்புக்கான மாற்றங்கள் – நூருதீன், கமல், பிரசன்னா – புதுச்சேரி – fshm.in