தற்போது ஏராளமானஅளவில் கட்டற்ற தரவுதளங்கள் நம்முடைய பயன்பாட்டில் உள்ளன அவற்றுள் PostgreSQL, MariaDB , SQLite ஆகிய மூன்றினை மட்டும் இங்கே ஒப்பீடு செய்வதற்காக எடுத்துகொள்வோம்.
PostgreSQL
பொதுவாக தற்போது பயன்பாட்டில் உள்ள தரவுத்தளங்களின் பட்டியல் எனில் PostgreSQL என்பதில்லாமல் அவ்வாறான பட்டியல் முழுமையடையாது, இந்த தரவு தளமானது அனைத்து நிலையிலும் அனைத்து அளவிலும் உள்ள வணிக நிறுவனங்களுக்கும் மிகநீண்ட காலமாக விருப்பமான தீர்வாக உள்ளது. ஆரக்கிள் நிறுவனமானது MySQL ஐ கையகபடுத்திய நேரத்தில் வணிக நிறுவனங்களுக்கு நல்லதொரு உணர்வை ஏற்படுத்தி யிருக்கலாம், ஆனால் மேககணினி சேமிப்பகம் நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே வருவதால் PostgreSQL எனும் தரவுத்தளம் படிப்படியாக மேம்படுத்துநர்களுக்கு சாதகமாகிவிட்டது.
PostgreSQL ஆனது பொதுமக்களின் பயன்பாட்டில் மிகசமீபகாலத்திலிருந்துதான் இருந்து வருகின்றது என்றபோதிலும், MySQL ஆனது தனியுரிமையாக மாறியதால் உருவான அதனுடைய வீழ்ச்சியானது மிகவும் பயன் படுத்தப்படும் மற்ற கட்டற்ற தரவுத்தளங்களின் தலைப்புக்கான தீவிர போட்டியாளராக இந்த PostgreSQL ஆனது மாறிவிட்டது. ஏனெனில் இந்த PostgreSQL ஆனது MySQL உடன் மிகவும் ஒத்ததாக செயல்படுவதால், கட்டற்ற பயன்பாடுகளை விரும்பும் அனைத்து மேம்படுத்துநர்களும் MySQL இற்கு மாற்றாக இந்தPostgreSQL ஐ தேர்வுசெய்து வருகின்றனர்.
இ ந்தPostgreSQL ஐ பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
இதுவரை, PostgreSQL இன் மிகவும் குறிப்பிடப்பட்ட நன்மையெனில் இதனுடைய மைய வழிமுறையின் செயல்திறன் அமைப்பாகும், அதாவது இது மிகவும் மேம்பட்டதாக விளம்பரப்படுத்தப்பட்ட பல்வேறு தரவுத்தளங்களை விட விஞ்சிய நிலையில் திகழ்கின்றது . நாம் பெரிய தரவுத்தொகுப்புகளுடன் பணிபுரிகின்றோம் எனில் I / O செயல்முறைகளில் நெருக்கடி அல்லது தடையெதுவுமில்லாமல்இந்த PostgreSQL ஐ பயன்படுத்தி கொள்வது மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது, மேலும் இந்த PostgreSQL ஆனது மிகவும் நெகிழ்வான கட்டற்றதரவுத்தளங்களில் ஒன்றாகவிளங்குகின்றது; Python, Perl, Java, Ruby, C, Rஆகிய கணினிமொழிகளின் வாயிலாக இந்த PostgreSQL இனுடைய பரவலான சேவையக செயலிகளை நம்மால் மிக எளிதாக உருவாக்கமுடியும். பொதுவாகதற்போது நம்மால் பயன்படுத்தப்படும் கட்டற்ற தரவுத்தளங்களில் ஒன்றாக,இந்த PostgreSQL ஆனதுவிளங்குகின்றது மேலும் இதற்கு சமூககுழுவின் ஆதரவு மிகச் சிறந்ததாக அமைந்துள்ளது.
இந் தPostgreSQL ஐ பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்
பெரிய தரவுத்தொகுப்புகளுடன் மட்டுமே இந்த PostgreSQL இனுடைய செயல்திறன் நன்கு அறியப் பட்டிருக்கிறது, ஆனால்சிறிய தரவுத்தளங்களுக்கு இதனைவிட விரைவாக செயல்படும் பல்வேறு கருவிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இதனுடைய சமூககுழு ஆதரவு மிகவும் சிறப்பானது எனினும், இதனுடையன் முக்கிய ஆவணங்கள் மேம்படுத்தப்படவேண்டியுள்ளது. இணைப்படுத்தல், கொத்தாக்கம் செய்தல் போன்ற மேம்பட்ட கருவிகளுக்கு பழகியபின்னர் இந்த PostgreSQLஐ பயன்படுத்திகொள்வதற்காக முனைந்தால் அதற்காக மூன்றாம் தரப்பு செருகுநிரல்கள் தேவையாகும். இந்த வசதிகளை முதன்மை வெளியீட்டில் படிப்படியாக சேர்க்க திட்டங்கள் உள்ளன, ஆனால் அவை தரமாக வழங்கப்படுவதற்கு இன்னும் ஒருசில ஆண்டுகள் ஆகும்.
MariaDB
உண்மையில் MariaDBஆனது MySQL இற்கு மாற்றான கட்டற்ற விநியோகதரவுதளமாகும் (ஏனெனில் இது பொதுமக்களின்பயன்பாட்டிற்கு GNU GPLv2 எனும் அனுமதியின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது). மேலும் இந்த MariaDB ஆனது ஆரக்கிள் எனும் நிறுவனமானதுMySQL ஐ கையகப்படுத்திய பின்னர் அதற்கு மாற்றாக உருவாக்கப் பட்டதாகும், MySQL இன் ஒருசில முக்கிய மேம்படுத்துநர்கள் ஆரக்கிள் நிறுவனமானது MySQL இனுடைய திறமூல தத்துவத்தை குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்தபடும் என்று கவலை கொண்டிருந்தபோது. பல்வேறு முக்கிய கூறுகளுடன் முடிந்தவரை MySQL உடன் இணக்கமாக செயல்படுமாறு இந்த MariaDB ஆனது உருவாக்கப்பட்டது. இது ஒரு பரிமாற்றமும், பரிமாற்ற மல்லாததாகவும் ஆன இயந்திரமாக செயல்படுகின்றது இது சேமிப்பக இயந்திரத்தைப் பயன்படுத்தி கொள்கிறது. இந்த தரவுதளத்திற்கு மாறுவதற்கு முன்பு, எதிர்கால வெளியீடுகளில் இது MySQL க்கான நிலையான இயந்திரமாக மாறும் என்று ஒருசிலர் ஊகித்து செயல்படுத்திவருகின்றனர்.
இந்த MariaDBஐ பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
அவ்வப்போது இதனுடயை பாதுகாப்பு வெளியீடுகள் வெளியிடபட்டுகொன்டே இருப்பதால் பல்வேறு பயனாளர்கள் MySQL ஐ விட MariaDBஐத் தேர்வு செய்கிறார்கள். இது மிகவும் பாதுகாப்பானது என்று அர்த்தமல்ல என்றாலும், மேம்படுத்தும் சமூககுழுவினுடைய பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக்கொள்வதை இது குறிக்கிறது.
• MariaDBஇன் முக்கிய நன்மைகள் என்னவெனில், இது நிச்சயமாக திறமூலமாகவும், MySQL உடன்மிகவும் இணக்கமாகவும் செயல்படுவதாகும். இதன் பொருள் ஒரு அமைப்பிலிருந்து மற்றொன்றுக்கு இடம்பெயர்வது மிக விரைவாக இருக்கும்.
இத னுடைய பொருந்தக்கூடிய தன்மை காரணமாக, MariaD பொதுவாக MySQL உடன் பயன்படுத்தப்படும் பல்வேறு கணினிமொழிகளிலும் நன்றாக செயல்படுகிறது. இதன் பொருள் இதற்கான குறியீட்டைக் கற்றலிற்கும் பிழைதிருத்தம் செய்வதற்கு ம் மிககுறைந்த நேரம் மட்டும் செலவிடப்பட்டால்போது மானதாகும்.
சிறந்த செயல்திறனும் அதிகவசதிவாய்ப்புகளுடனான தொகுப்புக்காக MySQL க்கு மாற்றாகMariaDB’ உடன் வேர்ட்பிரஸ் நிறுவுகைசெய்திடவும் இயக்கவும்முடியும். வேர்ட்பிரஸ் என்பது சந்தை பகிர்வு மூலம் மிகவும் பிரபலமான CMS ஆகும் – இது கிட்டத்தட்ட இணையத்தை பாதிக்கும் – இது செயலில் திறமூல மேம்படுத்துநர் சமூககுவினைக் கொண்டுள்ளது. மூன்றாம் தரப்பு கருப்பொருட்களும் செருகுநிரல்களும் MariaDB உடன் வேர்ட்பிரஸ் நிறுவுகைசெய்து செயல்படுத்தி பயன்பெறமுடியும்.
இந்த MariaDB ஐபயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்
• அதன் மைய IDX பதிவுக் கோப்பு, குறிப்பாக, நீடித்த பயன்பாட்டிற்குப் பிறகு மிகப் பெரியதாக மாறுகிறது, இறுதியில் செயல்திறனைக் குறைக்கிறது.
தற்காலிக சேமிப்பகம் என்பது MariaDBபணியைப் பயன்படுத்தக்கூடிய மற்றொரு பகுதியாகும் – இது நம்பதகுந்த வேகத்தில் செயல்படாது.
அனைத்து ஆரம்ப வாக்குறுதிகள் இருந்தபோதிலும், MariaDBஆனது இனி MySQL உடன் முற்றிலும் பொருந்தாது. MySQL இலிருந்து இடம்பெயரும்போது ஒரு சில மறு குறியீட்டு முறை செய்யவேண்டி இருக்கும்.
SQLite
SQLite என்பது நடைமுறை உலகில் மிகவும் செயல்படுத்தப்பட்ட தரவுத்தள இயந்திரமாகும், இது பல்வேறு பிரபலமான வலை உலாவிகள், இயக்க முறைமைகள் கைபேசி சாதனங்களினால் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது . இந்த தரவுதளமானது முதலில் MySQL இன் இலகுரக முட்கரண்டியாக உருவாக்கப்பட்டது, இது பல்வேறு தரவுத்தளங்களைப் போலல்லாமல் இது வாடிக்கையாளரின் சேவையாளர் இயந்திரம் அன்று; மாறாக, இதனுடைய முழு மென்பொருளும் ஒவ்வொரு செயலாக்கத்திலும் உட்பொதிக்கப்பட்டுள்ளது.
இது SQLite இன் முக்கிய நன்மையை உருவாக்குகிறது: உட்பொதிக்கப்பட்ட அல்லது விநியோகிக்கப்பட்ட கணினிகளில், ஒவ்வொரு இயந்திரமும் தரவுத்தளத்தின் முழு செயலாக்கத்தையும் கொண்டுள்ளது. இது தரவுத்தளங்களின் செயல்திறனை பெரிதும் துரிதப்படுத்துகிறது, ஏனெனில் இது இடைநிலை-கணினி அழைப்புகளின் தேவையை குறைக்கிறது.
இந்த SQLiteஐ பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
பொதுவாக எந்தவொருநபரும் சிறியஅளவிலான தரவுத்தளத்தை ஒன்றினை உருவாக்கிடவும் செயல்படுத்திடவும் விரும்பினால், SQLiteஎனும் தரவுதளமே மிக சிறந்ததேர்வாக இருக்கும். இது மிகவும் சிறியது, எனவே இது அதிக நேரத்தைச் செலவழிக்கும் பணிகள் எதுவும் இல்லாமல் பரந்த அளவிலான உட்பொதிக்கப்பட்ட அமைப்புகளில் இதனை செயல்படுத்தி பயன்பெறலாம்.
இது அளவில் மிகச்சிறியதாக இருப்பதால் எந்தவொரு கணினியிலும் தரவுதளபணியை மிக வேகமாக செயற்படுத்துகின்றது. இன்னும் சில மேம்பட்ட தரவுத்தளங்கள் செயல்திறன் சேமிப்புகளை உருவாக்குவதற்கான சிக்கலான வழிகளைப் பயன்படுத்துகையில், SQLite மிகவும் எளிமையான அணுகுமுறையை வழங்குகின்றது: தரவுத்தளத்தின் அளவையும் அதனுடன் தொடர்புடைய செயலாக்க மென்பொருளையும் குறைப்பதன் மூலம், பணி செய்வதற்கு குறைவான தரவு மட்டுமே உள்ளது.
அதன் பரவலான தத்தெடுப்பு என்பது SQLite அநேகமாக மிகவும் இணக்கமான தரவுத்தளமாக ஆக்குகின்றது. நம்முடைய கணினியை திறன்பேசிகளுடன் ஒருங்கிணைக்க நாம் விரும்பினால் இது நமக்கு கைகொடுக்கு தயாராக இருக்கின்றது அவ்வாறு திட்டமிடும்போது இதுநம்முன் வந்து சேவைசெய்ய தயாராக இருக்கின்றது . மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் இருந்துவருகின்றபோதும், பரந்த அளவிலான சூழல்களில் குறைபாடற்ற முறையில் செயல்படும் வரைமிகவும் முக்கியமானதாக விளங்குகின்றது இது iOS இலும் செயல்படத்தயாராக இருக்கின்றது.
இந்த SQLiteஐ பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்
இந்த SQLiteஇன் அளவுமிகச் சிறியதாக இருப்பதால் பெரிய தரவுத்தளங்களில் காணப்படும் ஒருசில வசதி வாய்ப்புகளை இதுகொண்டிருக்கவில்லை. இது உள்ளமைக்கப்பட்ட தரவு குறியாக்கத்தைக் கொண்டிருக்க வில்லை, எடுத்துக்காட்டாக, மிகவும் பொதுவான இணையத்தின் நேரடி தாக்குதல்களைத் தடுக்க இயலாத நிலையாகிவிட்டது. பரந்த தத்தெடுப்பு ம் பொதுவில் கிடைக்கக்கூடிய குறியீடு SQLite உடன் பணி செய்வதை எளிதாக்குகிறது, அதனால் தாக்குதல் வாய்ப்பினையும் அதிகரிக்கிறது. இது மிகவும் பொதுவாக மேற்கோள் காட்டப்பட்ட தீமையாகும். புதிய முக்கியமான பாதிப்புகள் SQLite இல் அடிக்கடி கண்டுபிடிக்கப்படுகின்றன, அதாவது சமீபத்திய தொலைதூர தாக்குதல் Magellan என அழைக்கப்படுகிறது. SQLite இன் ஒற்றை-கோப்பு அணுகுமுறை விரைவாகபல்வேறு நன்மைகளை உருவாக்குகிறது என்றாலும், கணினியைப் பயன்படுத்தி பல பயனாளர் சூழலை செயல்படுத்த எளிதான வழியாக அது இல்லை.
இந்த மூன்றில் எது சிறந்தது?
இறுதியாக இம்மூன்றில்நம்முடைய வணிகத் தேவைகளையும் குறிப்பாக நம்முடைய கணினியின் அளவைப் பொறுத்து ஏதாவதொன்றினை மட்டும் தெரிவுசெய்து கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது. அதாவது சிறிய தரவுத்தளங்கள் அல்லது குறைந்த பயன்பாட்டைக் கொண்டவர்களுக்கு, இலகுரக தீர்வாக SQLite எனும் தரவுதளம் சிறந்த தேர்வாகும்: இது செயல்பாட்டை விரைவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், குறைவான சிக்கலான அமைப்பையும் எளிதாக்குகின்றது,
பெரிய அமைப்புகளுக்கு, குறிப்பாக பெரியஅளவில் வளர்ந்து வருகின்ற வணிகநிறுவனங்கள், PostgreSQL போன்ற மிகவும் சிக்கலான தரவுத்தளத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது நம்முடைய வணிகம் வளரும்போது நம்முடைய தரவுத்தளங்களை மீண்டும் குறியீடு செய்வதற்கான தேவையை இது நீக்குவதன் மூலம் நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்த உதவுகின்றது.