விக்கிப்பீடியாவில் இந்திய மொழிகளுக்கிடையே போட்டி

வணக்கம்,
இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கிடையே வரலாற்றில் இல்லாத விறுவிறுப்பான போட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஜனவரி 10 2020 வரை நடைபெறும் போட்டியில் சுமார் மூன்று வாரம் கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா முதலிடத்தைத் தக்கவைத்து முன்னேறிக் கொண்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டைப் போல கடைசி நேரத்தில் வெற்றியைத் தட்டிப்பறிக்கும் பிற மொழி விக்கிப்பீடியாக்களும் தமிழைத் தொடர்ந்து வந்து கொண்டுள்ளன. ஆர்வமுடையவர்கள் வந்து விக்கிப்பீடியாவில் எழுதித் தோள் கொடுக்கலாம்,

 

Languages Articles Participants Links
Tamil 515 32 Fountain
Punjabi 430 17 Fountain
Urdu 392 20 Fountain
Bengali 315 17 Fountain
Santali 170 7 Fountain
Hindi 167 14 Fountain
Malayalam 109 6 Fountain
Assamese 90 12 Fountain
Telugu 54 4 Fountain
Odia 46 4 Fountain
Gujarati 35 3 Fountain
Marathi 26 5 Fountain
Kannada 11 3 Fountain
Tulu 6 3 Fountain
Sanskrit 0 0 Fountain

 

என்ன போட்டி?
சுருக்கமாகச் சொன்னால், கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் விக்கிப்பீடியா நடையில் முன்னூறு வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும். அது தான் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி
எப்படி எழுத? தெரியாதே!
இந்தக் காணொளிகளைப் பார்க்கலாம். இந்த ஆவணங்களைப் படிக்கலாம். கூடுதல் சந்தேகங்களுக்கு ஒத்தாசைப் பக்கம்வாட்சப் குழு அல்லது பேஸ்புக் குழுவில் கூடக் கேட்கலாம்.
பரிசு உண்டா?
அதிகக் கட்டுரை எழுதியவர்களுக்கு மட்டும் பரிசு நிச்சயம், தமிழ் விக்கிப்பீடியா குமுகமாக வென்று அனைவருக்கும் பரிசைப் பெற்றுத்தருவது லட்சியம்.
வேறு ஏதாவது உண்டா?
இந்த செய்தி பிடித்திருந்தால் மற்றவர்களுடன் ஷேர் செய்யுங்கள், மறக்காமல் கட்டுரை எழுதி ஸ்கோர் செய்யுங்கள்.


அன்புடன்,
நீச்சல்காரன்
விக்கிப்பீடியர்

 

%d bloggers like this: