பைடார்ச் என்பது பைதானிற்கான ஒரு திறமூல இயந்திர கற்றல் நூலகமாக வரையறுக்கப் படுகின்றது. இது இயற்கை மொழி செயலாக்கம் போன்ற பயன்பாடுகளுக்காகபயன்படுத்திகொள்ளப்படுகின்றது. பேஸ்புக் எனும் நிறுவனத்தின் செயற்கை–நுண்ணறிவு ஆராய்ச்சி குழுவானது இதனை முதன்முதல் உருவாக்கியது அதாவது முதலில், Torchஎனும் வரைச்சட்டத்தின் அடிப்படையில் LusJITஇற்கான பைத்தான் மேலட்டையாக இந்த PyTorchஆனது உருவாக்கப்பட்டது.அதன்பின்னர் இதனுடைய நிகழ்தகவு நிரலாக்கமானது உபேர் எனும் நிறுவனத்தினுடைய Pyro எனும் மென்பொருளால் கட்டமைக்கப்பட்டு மேம்படுத்தப்–பட்டது.
இதில் பின்புல குறிமுறைவரிகளுக்கான சிஎனும் கணினிமொழியின் அதேமைய நூலகங்களைப் பகிர்ந்துகொண்டு பைத்தானில் Torchஐயும் செயல்படுத்தி இந்த PyTorchஆனது மறுவடிவமைப்பு செய்துவெளியிடப்ட்டுள்ளது. பைத்தான் எனும் கணினி மொழியானது மிகதிறனுடன் இயங்குவதற்காகPyTorch மேம்படுத்துநர்கள் இதனுடைய பின்புல குறிமுறைவரிகளை சரிசெய்து மேம்படுத்தியுள்ளனர். மேலும் GPU அடிப்படையிலான வன்பொருள் முடுக்கத்தையும் , Lua வைஅடிப்படையாகக் கொண்ட Torchஐ உருவாக்கி விரிவாக்க வசதிகளையும் இதில் கொண்டுவந்துள்ளனர்.
இதன் வசதி வாய்ப்புகள் பின்வருமாறு
பைடார்ச்சின் API ஐஆனது பயன்படுத்த எளிதானது; எனவே இதனை இயக்குவதும் செயல்படுத்துவதும் மிகவும் எளிமையானதாகக் இருக்கின்றது. அதைவிட இந்த கட்டமைப்பில் குறிமுறைவரிகளை செயல்படுத்துவது மிகவும் எளிதானது.
இந்த நூலகம் Pythonic எனக் கருதப்படுகிறது, இது பைதான் தரவு அறிவியல் அடுக்குடன் சுமூகமாக ஒருங்கிணைந்து செயல்படுகின்றது. எனவே, இது பைதான் சூழலால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் செயல்பாடுகளையும் மேம்படுத்துகின்றது.
பைடார்ச் ஆனது இயக்கநேரக் கணக்கீட்டு வரைபடங்களை வழங்குகின்ற ஒரு சிறந்த தளத்தை நமக்கு வழங்குகின்றது. இதனால் ஒரு பயனாளர் இயக்க நேரத்தில் அவற்றை மாற்றியமைத்திடலாம். ஒரு நரம்பியல் வலைபின்னல் மாதிரியை உருவாக்குகின்றஒரு மேம்படுத்தநருக்கு அதற்காக எவ்வளவு நினைவகம் தேவை என்று தெரியாதபோதுகூட இது மிகச்சரியாக செயல்படுகின்ற மிகவும் சிறந்த கருவியாக இதனுடைய செயல்பாடு விளங்குகின்றது.
இந்த பைடார்ச் ஆனது கட்டாயமாக n- பரிமாண வரிசையின்படி GPUவில் இயங்குகின்ற Tensor என்றும் data , gradient ஆகிய இரண்டையும்சேமிக்கின்ற கணக்கீட்டு வரைபடத்தில் ஒருமுனைமமாக, Variable என்றும் நிலையான அல்லது கற்றுக் கொள்ளக்கூடிய நிலையை சேமிக்கும் நரம்பியல் பிணைய அடுக்காக. Module என்றும்
ஆகிய மூன்று நிலையிலானதொகுப்புகளைக் கொண்டுள்ளது
இதன் குறிமுறைவரிகளை எளிதாக புரிந்துகொள்ளமுடியும் அதனால் இதில் பிழைதிருத்தம் செய்வது மிக எளிய செயலாகும். இந்த PyTorch ஆனது Torch.இன் பல அடுக்குகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது, இதில் நிறைய இழப்பு செயலிகளும் உள்ளன, இதனை GPUகளுக்கான NumPy இன் நீட்டிப்பாக கூடகருதலாம்.இது கணக்கீடுகளைச் சார்ந்து இருக்கின்ற வலைபின்னல்களை உருவாக்க அனுமதிக்கின்றது. . மேலும்விவரங்களுக்கு pytorch.org/ எனும் இணையதளத்திற்கு செல்க