Raspberry Pi எனும் ஒரு அட்டைவடிவ கணினி அறிமுகம்

Raspberry Pi என்பது மின்னனுசுற்றுகள் கொண்ட ஒரு சிறிய அட்டை அளவேயுடைய கணினியாகும்(படம்-1) இதனோடு விசைப்பலகையும் கணினித்திரையும் இணைத்தால் போதும் வழக்கமான கணினியின் அனைத்து பணிகளையும் செய்துமுடித்திடமுடியும்

படம்-1

இதனை செயல்படுத்திடுவதற்காக நமக்கு தேவையான வன்பொருட்கள்

1 SD அட்டையுடன் கூடிய Raspberry Pi கணினி ஒன்று

2.இணைப்பு கம்பியுடன்கூடிய கணினிதிரை தேவையெனில் HDMI ஏற்பான்

3. யூஎஸ்பி விசைப்பலகையும் சுட்டியும்

4. போதுமான மின்விநியோக இணைப்பு

5. NOOBSவாயிலாக நிறுவுகை செய்யப்படும் Raspbian மென்பொருள் தேவையாகும்

படம்-2

படம்-2இல் குறிப்பிட்டுள்ள இந்த Raspberry Pi கணினியின் உறுப்புகளை ஒரு பறவை பார்வை பார்த்திடுக

USB ports என்பவை கணினியுடன் சுட்டி ,விசைப்பலகை போன்றவைகளை இணைக்கவிரும்பும் வாயில்களாகும்

Micro SD card இந்த பகுதியில்தான் நம்முடைய இயக்கமுறைமை , பயன்படுத்திடும் கோப்புகள் ஆகிய அனைத்தும் சேமித்து வைக்கபடும் இடமாகும்

Ethernet port இதன்வாயிலாக இந்தRaspberry Pi கணினியை இணைய வலைபின்னலுடன் இணைப்பதற்கான வழியாகும்

Audio jack இதன்வாயிலாக ஒலி பெருக்கிகள் காதொளிப்பான்களை இணைத்துகொள்ளமுடியும்

HDMI port இதன்வாயிலாக கணினியின் திரையை இணைத்து பயன்படுத்தி கொள்ளமுடியும்

GPIO ports இதன்வாயிலாக இந்த Raspberry Pi கணினியின் செயல்திட்ட பொருட்களை இணைத்து செயலபடுத்தி பயன்பெறுமுடியும்

Micro USB power connectorஇறுதியாக இவையனைத்தும் செயல்படுதற்கு அடிப்படையான மின்னிணைப்பை வழங்கும் வாயிலாகும்

 

%d bloggers like this: