சங்க இலக்கியம் – குறுஞ்செயலி வெளியீட்டு விழா – நிகழ்வுக் குறிப்புகள்

இன்று, சென்னை நந்தனம் அரசினர் கலைக்கல்லூரியில், சங்க இலக்கியம் – குறுஞ்செயலி வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த செயலியில் 1820 முதல் 1950 வரையில் வெளியிடப்பட்ட பல்வேறு சங்க இலக்கிய நூல்களை கைபேசியில் படிக்கும் வகையில் 6 அங்குல PDF கோப்புகளாகப் படிக்கலாம்.

 

 

இதுவரை சுமார் 1000 மின்னூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை குட்டி PDF கோப்புகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, செயலி உருவாக்கம் முடிவடைந்து, இன்று வெளியீட்டு விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் சேஷாத்ரி அவர்கள் உரையாற்றினார். பின் அமெரிக்க நண்பர் திரு. டேவிட் ராஜாமணி அவர்கள் தமிழில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார். அகராதிகளைத் தொகுக்கும் பணிக்கு இரு நபர்களை முழு நேரமாக பணிக்கு அமர்த்த இயலும் என்று அறிவித்தார்.

 

   

 

பின், செயலியை உருவாக்கி, கட்டற்ற மென்பொருளாக வெளியிட்ட கலீல் ஜாஹீர், செயலி பற்றி விளக்கினார். பின் சீனிவாசன், விக்கி மூலம், OCR, பிழைத்திருத்தும் தேவைகள், கணியம் அறக்கட்டளை பற்றி பேசினார்.

 

` ` `

 

பின், ஆழி பதிப்பகம் உரிமையாளர், திரு. ஆழி செந்தில்நாதன் அவர்கள், தமிழும் வேலைவாய்ப்புகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

 

நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த பேராசிரியர் திரு.கை.சங்கர் அவர்கள் உரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.

 

சங்க இலக்கிய மின்னூல்களை தொகுத்தளித்து, செயலி உருவாக்க ஊக்கம் அளித்த, திரு. கை. சங்கர் அவர்களுக்கும், செயலி உருவாக்கிய கலீல் அவர்களுக்கும், தொடர்ந்து ஊக்கமளித்து வரும் திரு. டேவிட் ராஜாமணி, திரு. ஆழி செந்தில்நாதன் அவர்களுக்கும் நன்றிகள்.

 

செயலியை இங்கே பெறலாம் – `

play.google.com/store/apps/details?id=com.jskaleel.sangaelakkiyangal

மூலநிரல் – github.com/KaniyamFoundation/SangaElakkiyam

புகைப்படங்கள் – photos.app.goo.gl/gswC4tUvw6hyJuy9A

%d bloggers like this: