முந்தைய அத்தியாயத்தில் ஒரு குறிப்பிட்ட expression true அல்லது false ஆக இருப்பதை கொண்டு ஒரு வேலையை செயல்படுவதை கண்டோம். இந்த அத்தியாயத்தில் for loop, upto, downto மற்றும் times ஆகிய செயற்கூறுகளைக் காணலாம்.
ரூபியின் for கட்டளை:
For என்ற மடக்கு கட்டளையானது (loop statement) பல நிரலாக்க மொழிகளில் உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட முறை, ஒரு குறிப்பிட்ட வேலையை தொடர்ந்து செய்யும்.
உதாரணத்திற்கு,
[code lang=”ruby”]
for i in 1..5 do
puts i
end
[/code]
விடை பின்வருமாறு,
[code lang=”ruby”]
1
2
3
4
5
[/code]
For கட்டளையில் do என்ற திறவுச்சொல் கட்டாயமானதல்ல. ஆனால் for கட்டளையை ஒரே வரியில் எழுதினால் do சேர்க்க வேண்டும்:
[code lang=”ruby”]
for i in 1..5 do puts i end
[/code]
ரூபியின் ஒரு for கட்டளையை இன்னொரு for கட்டளையின் உள்ளமைப்பாகவும் (nested) தரலாம்,
[code lang=”ruby”]
for j in 1..5 do
for i in 1..5 do
print i, " "
end
puts
end
[/code]
விடை பின்வருமாறு,
[code lang=”ruby”]
1 2 3 4 5
1 2 3 4 5
1 2 3 4 5
1 2 3 4 5
1 2 3 4 5
[/code]
மேலும் for கட்டளையை இடைநிறுத்தம் செய்ய, break if கட்டளையை பயன்படுத்தலாம். இதில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். பல மடக்கு கட்டளைகளை உள்ளடக்கிய ஒரு நிரலில்லிருந்து உள்ளடங்கிய for கட்டளையைவிட்டு வெளியேறினாலும் வெளியிலுள்ள for கட்டளை தொடர்ந்து வேலை செய்யும்:
[code lang=”ruby”]
for j in 1..5 do
for i in 1..5 do
print i, " "
break if i == 2
end
end
[/code]
i=2 இருக்கும்பொழுதே உள்ளடங்கிய மடக்கு கட்டளை இடையில் நிறுத்தப்பட்டு, நிரலோட்டம் வெளி மடக்கு கட்டளைக்கு சென்று விடும்.
[code lang=”ruby”]
1 2
1 2
1 2
1 2
1 2
[/code]
ரூபியின் times செயற்கூறு:
Times செயற்கூற்றை for கட்டளைக்கு மாற்றாக பயன்படுத்தலாம். இந்த செயற்கூறு integer class-யில் உள்ளது. இது ஒரு வேலையை குறிப்பிட்ட முறை செயல்படும்.
[code lang=”ruby”]
5.times { |i| puts i }
[/code]
மேலே உள்ள உதாரணம் ஆனது பின்வரும் for கட்டளைக்கு இணையானது, மேலும் இதை தட்டச்சிடுவதும் எளிது:
[code lang=”ruby”]
for i in 1..5
puts i
end
[/code]
ரூபியின் upto செயற்கூறு:
Upto செயற்கூற்றை integer, string மற்றும் date வர்க்கங்களில் பயன்படுத்தலாம். இதை for கட்டளையை போன்று பயன்படுத்த முடியும்.
உதாரணத்திற்கு,
[code lang=”ruby”]
for i in 1..5 do
puts i
end
[/code]
இதற்கு பதிலாக upto செயற்கூற்றை பயன்படுத்தலாம். இதில் எத்தனை முறை loop-ஆக வேண்டுமோ அதை இந்த செயற்கூற்றின் argument-ஆக அனுப்ப வேண்டும்.
[code lang=”ruby”]
5.upto(10) do
puts "hello"
end
[/code]
இதை சுருக்கி ஒரே வரியில் எழுதலாம்,
[code lang=”ruby”]
1.upto(5) { |i| puts i }
[/code]
ரூபியின் downto செயற்கூறு:
Downto செயற்கூறு, upto செயற்கூற்றை போன்றதுதான். upto செயற்கூறு ஏறுவரிசையில் இயங்கும். downto செயற்கூறு இறங்குவரிசையில் இயங்கும். உதாரணத்திற்கு:
[code lang=”ruby”]
15.downto(10) {|i| puts i }
=> 15
14
13
12
11
10
[/code]
— தொடரும்
பிரியா – priya.budsp@gmail.com – ஐக்கிய அரபு அமீரகம்