ரூபியில் கணித கூறானது (math module) நிரலருக்கு பல செயற்கூறுகளைக் கொடுக்கிறது. இதை கொண்டு பல கணக்கீடுகள் செய்ய முடியும். கூடுதலாக இதில் இரண்டு பொதுவான மாறிலிகள் (mathematical constants) உள்ளன.
ரூபி கணித மாறிலிகள்:
கணித கூற்றில் உள்ள மாறிலிகளை, Constants என்ற செயற்கூற்றை பயன்படுத்தி, பட்டியலிடலாம்.
[code lang=”ruby”]
Math.constants
=> ["E", "PI"]
[/code]
ரூபியின் தற்போதைய பதிப்பின்படி இரண்டு மாறிலிகளே வரையறுக்கப்பட்டுள்ளது. இதை :: குறியீட்டை பயன்படுத்தி அணுகலாம்.
[code lang=”ruby”]
Math::PI
=> 3.14159265358979
Math::E
=> 2.71828182845905
[/code]
ரூபி கணித செயற்கூறுகள்
ரூபியில் பலவகையாக கணித செயற்கூறுகள் உள்ளன. அதை பின்வரும் அட்டவணையில் காணலாம்.
Method name |
Description |
---|---|
Math.acos, Math.acos! |
Arc cosine |
Math.acosh, Math.acosh! |
Hyperbolic arc cosine |
Math.asin, Math.asin! |
Arc sine |
Math.asinh, Math.asinh |
Hyperbolic arc sine |
Math.atan,Math.atan!, Math.atan2, Math.atan2! |
Arc tangent. atan takes an x argument. atan2 takes x and y arguments |
Math.atanh, Math.atanh! |
Hyperbolic arc tangent |
Math.cos, Math.cos! |
Cosine |
Math.cosh, Math.cosh |
Hyperbolic cosine |
Math.sin, Math.sin! |
Sine |
Math.erf |
Error function |
Match.erfc |
Complementary error function |
Math.exp, Math.exp! |
Base x of Euler |
Math.frexp |
Normalized fraction and exponent |
Math.hypot |
Hypotenuse |
Math.ldexp |
Floating-point value corresponding to mantissa and exponent |
Math.sinh, Math.sinh! |
Hyperbolic sine |
Math.sqrt, Math.sqrt! |
Square root |
Math.tan, Math.tan! |
Tangent |
Math.tanh, Math.tanh! |
Hyperbolic tangent |
சில எடுத்துக்காட்டுகள்:
இப்போது கணித செயற்கூறுகளை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.
வர்க்கமூலத்தை கண்டுப்பிடிக்க,
[code lang=”ruby”]
Math.sqrt(9)
=> 3.0
[/code]
அல்லது Euler calculation:
[code lang=”ruby”]
Math.exp(2)
=> 7.38905609893065
[/code]
ரூபி தர்க்க செயற்குறிகள்:
தர்க்க செயற்குறிகளை (logical operators), Boolean operators என்றும் சொல்லலாம். ஏனென்றால் இது expression மதிப்பிட்டு true அல்லது false-யை திருப்பி அனுப்பும்.
முதல் படியாக, இவ்வகை செயற்குறிகள் ரூபியில் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை அறிய, நிரல் எழுதுவதற்கு முன்பாக, ஒரு சொற்றொடரை எழுதிப்பார்க்கலாம். var1, var2 என்று இரு மாறிகளை எடுத்துக்கொண்டு இதை முயற்சித்துப்பார்க்கலாம்:
If var1 is less than 25 AND var2 is greater than 45 return true.
இதில்,”AND” என்பதே தர்க்க செயற்குறி ஆகும். இந்த expression-னை ரூபியில், ஒப்பீட்டு (comparison operator) மற்றும் and அல்லது && என்ற தர்க்க செயற்குறிகளைப் பயன்படுத்தி எழுதலாம்.
[code lang=”ruby”]
var1 = 20
var2 = 60
var1 < 25 and var2 > 45
=> true
[/code]
அதேபோல்,
If var1 is less than 25 OR var2 is greater than 45 return true.
இதில் “OR” பதிலாக ரூபியில் or அல்லது “||” பயன்படுத்த வேண்டும்.
[code lang=”ruby”]
var1 < 25 or var2 > 45
=> true
[/code]
மற்றொரு தர்க்க செயற்குறி, not operator ஆகும். இது expression-னின் விடைக்கு எதிர்மறையான மதிப்பைத்தரும். NOT operator –க்கு ரூபியில் !குறியீட்டை பயன்படுத்த வேண்டும்.
[code lang=”ruby”]
10 == 10
=> true
!(10 == 10) #not operator கொண்டு விடை எதிர்மறையானதாக மாற்றப்பட்டுள்ளது.
=> false
[/code]
— தொடரும்
பிரியா – priya.budsp@gmail.com – ஐக்கிய அரபு அமீரகம்