மென்பொருள் சுதந்திர தினம்- 2018 விழுப்புரம்
அனைவருக்கும் வணக்கம்,
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம், இந்த வருடம் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி மென்பொருள் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது.
சுதந்திர மென்பொருள் தினமானது உலகெங்கிளும் உள்ள கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் ஒன்றாக கூடி, சுதந்திர மென்பொருள், சுதந்திர கலாச்சாரம், சுதந்திர வன்பொருள், கருவிகள் பற்றி விவாதித்து, உரையாடி, பயன்படுத்தி காட்டும் நாள். இங்கு 15-20 நிலையகங்கள் (Stalls) வைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் கட்டற்ற மென்பொருள் குழுக்களிடையே இது ஒரு பெரிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டம், மக்களிடையே கட்டற்ற மென்பொருளை பெரியளவில் கொண்டு சேர்ப்பதற்க்கு சிறந்த வழியாக திகழ்கிறது.
இந்த ஆண்டு இந்நிகழ்வு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள
நித்தியானந்தா பள்ளியில் நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் ஏராளமான இலவச(சுதந்திர) மென்பொருள்(Software) தொழில்நுட்பங்களை பற்றிய கண்காட்சி அமைக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்வில் பங்கு கொண்டு கட்டற்ற மென்பொருளையும், அதனைச் சுற்றியுள்ள சூழல்களையும் அறிந்து கொண்டு அதனை அனைவருக்கும் கொண்டு சேர்க்க அழைக்கின்றோம். அனைவரும் வாருங்கள்.
தேதி : 14.10.2018(ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை
இடம் :
நித்தியானந்தா பள்ளி,
புதிய பேருந்து நிலையம் அருகில், விழுப்புரம்.
மென்பொருள் கண்காட்சியில் இடம்பெறும் அரங்குகள் :-
– Distros
– Philosophy
– Text to Speech
– Kaniyam
– 4D Coloring
– Robotics
– Women in Technology
– Blender
– Stellarium, Scratch
– Virus
– Privacy on Android
– Alternatives
– Linux Games
– Wiki & OSM
– IOT
– Self Hosting
தொடர்புக்கு :
9894327947
9952426108
இதனால் பயன் என்ன..?
நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைபேசி முதல் கணினி வரை, நமக்கு தெரியாமலே நம்மை பற்றிய தகவல்களை தனியார் நிறுவனங்கள் சேகரித்து, அதன் மூலம் அதிக லாபத்தை பெற்று விடுகின்றனர். இதனை தடுக்கவும், பல தொழில்நுட்பங்களை மக்களாகிய நாம் கற்று கொள்ளவும், நம் அனைவரின் சுதந்திரத்தை/அந்தரங்கத்தை காப்பதுமே இந்த மென்பொருள் சுதந்திர தினத்தின் முக்கிய நோக்கம்.
அனைவரும் வாரீர்…! தொழில்நுட்பத்தை பற்றிய புரிதலையும், அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றிய விழிப்புணர்வையும் இலவசமாக பெற்று செல்லுங்கள்.
அனுமதி முற்றிலும் இலவசம்..!
பின் குறிப்பு:
வரும்போது பென்ட்ரைவ்(Pendrive) கொண்டு வந்து மென்பொருளை இலவசமாக பெற்று கொள்ளுங்கள் நண்பர்களே..!
முந்தைய நிகழ்வுகள்
இப்படிக்கு,