மென்பொருள் விடுதலை நாள் 2012 – செப்டம்பர் 15, 2012 – நிகழ்ச்சி அறிக்கை

மென்பொருள் விடுதலை நாள் 2012 – நிகழ்ச்சி அறிக்கை

 

உலகம் முழுவதும் கட்டற்ற மென்பொருள்கள் மற்றும் குனு/லினக்ஸ் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த மென்பொருள் விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை இது கொண்டாடப்படுகிறது.

இந்தியன் லினக்ஸ் பயனர் குழு சென்னை [ ilugc.in ] மற்றும் Free Software Foundation TamilNadu [ fsftn.org ] இணைந்து மென்பொருள் விடுதலை நாள் விழாவை செப்டம்பர் 15, 2012 அன்று டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி, அரும்பாக்கம், சென்னையில் காலை 9:30 மணியில் இருந்து மாலை 5:30 மணி வரை நடத்தின.

கல்லூரி தாளாளர் திரு.P.ஹரிதாஸ் கல்வித் துறையில் கட்டற்ற மென்பொருளின் பயன்பாட்டின் அவசியத்தை எடுத்துரைத்தார். கல்லூரி முதல்வர் Dr.S.நரசிம்மன் மாணவர்களும், விரிவுரையாளர்களும் தங்களது தினசரி வேலைகளுக்கும், கல்வித் தேவைகளுக்கும் கட்டற்ற மென்பொருள்களை கற்று, உபயோகப்படுத்த வேண்டுமெனக் கூறினார். மேலும் கட்டற்ற மென்பொருள் குழுமத்திற்கு மாணவர்கள் பங்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த கணிணித் துறைத் தலைவர் Dr.T.சந்தானம் உறுதுணையாக இருந்தார். ஏற்கனவே அவரது துறையில் குனுலினக்ஸை அவர்கள் உபயோகப்படுத்துவதாகவும், மாணவர்கள் குனு/லினக்ஸ், பைதான், Latex மற்றும் PHP/MySQL ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்கின்றார்கள் எனவும் கூறினார். மாணவர்கள் பயனடைவதற்காக தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகளையும், பயிற்சி பட்டறைகளையும் அவரது கல்லூரியில் நடத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

30-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் இந்நிகழ்ச்சியில் கட்டற்ற மென்பொருள்களின் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. பல்வேறு கல்லூரிகளில் இருந்து, 1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டார்கள். டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியின் பிற துறையைச் சேர்ந்த விரிவுரையாளர்களும், அண்ணா ஆதர்ஷ், SDNB வைஷ்ணவ் கல்லூரி போன்ற கல்லூரிகளிலிருந்து விரிவுரையாளர்களும் கண்காட்சிக்கு வருகை தந்திருந்தனர்.

 

பின்வரும் கட்டற்ற மென்பொருள்கள் பற்றிய கண்காட்சிகள் இடம்பெற்றன.

 

  1. Screencasting
  2. Android Application Development
  3. Mozilla Suites and development
  4. Open source telephony applications
  5. Geany IDE
  6. Open source VS Properietory Software
  7. Open Source Security Tools
  8. GIMP – Open Source Raster Image Editor
  9. Inkscape – Open Source Vector Image Editor
  10. Bluefish IDE
  11. Ubuntu Linux
  12. Desktop Enviromnents
  13. Open Source Databases – MySQL/PostgreSQL
  14. Open Source Virualization Tools
  15. OOAD tools
  16. QT/PyQT
  17. Mysql Bench
  18. Webmin – Web Based System administration
  19. Jmeter – Performance Testing Software
  20. Subversion Edge – Version Control System
  21. LinuxMint Linux Distribution
  22. ILUGC
  23. Kaniyam
  24. wikipedia
  25. WebOS operating System
  26. MongoDB – NoSQL Database
  27. Ruby – Programming Language
  28. Ruby on Rails – Web programming framework
  29. Python – Progrmaming Language
  30. Top 10 Open Source Software

 

கீழ்கண்ட கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

 

  • Jaya Engineering College
  • Madras Institute of technology
  • DG Vaishnav College
  • Vivekanda College
  • KanchiLUG

 

நிறுவனங்கள்:

  • CollabNet Software Provate Ltd
  • OpenNovus
  • Whitestreet IT P Ltd

டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி, பிற பொறியியல் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரிகளில் இருந்தும் பல்வேறு துறைகளில் பயிலும் மாணவர்களும், பொது மக்களும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

இணையாக ராமன், வெல்கின், யோகேஷ், அதுல் ஜா, கிங்ஸ்லி, பாலசந்தர் மற்றும் சுப்ரமணி ஆகியோர் கட்டற்ற மென்பொருள்களைப் பற்றி உரையாற்றினார்கள்.

பார்வையாளர்களுக்கு ஸ்டிக்கர்களும், கையேடுகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சி குனு/லினக்ஸ் மற்றும் கட்டற்ற மென்பொருட்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

ஒரே இடத்தில் பல கட்டற்ற மென்பொருட்களைப் பற்றி த் தெரிந்து கொண்ட பார்வையாளர்கள், இதே போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு நல்கிய கல்லூரி தாளாளர், கல்லூரி முதல்வர், கணிணித் துறையின் தலைவர், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கும் இத்தகையதொரு நல்வாய்ப்பை வழங்கியதற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியன் லினக்ஸ் பயனர் குழு, சென்னையால் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளிலேயே சிறந்தது இதுவாகும். டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியில் தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த கணிணி துறைத்தலைவர் விருப்பம் தெரிவித்துள்ளார். கட்டற்ற மென்பொருள்களைப் பற்றி விழிப்புணர்வை உருவாக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளை பல்வேறு கல்லூரிகளில் நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியில் தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகளும், பயிற்சிப் பட்டறைகளும் நடைபெறவிருக்கின்றன.

உங்கள் கல்லூரியிலும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்த எங்களை தொடர்பு கொள்ளவும்:

T. Shrinivasan tshrinivasan@gmail.com 9841795468 ilugc.in

Welkin – alagunambiwelkin@fsftn.org – 9962240050 fsftn.org

Snaps available at:
picasaweb.google.com/102002010785949271518/SoftwareFreedomDay2012#

%d bloggers like this: