அனைவருக்கும் வணக்கம்,
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு (FSFTN) இந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி மென்பொருள் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது.
சுதந்திர மென்பொருள் தினமானது உலகெங்கிளும் உள்ள கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் ஒன்றாக கூடி, சுதந்திர மென்பொருள், சுதந்திர கலாச்சாரம், சுதந்திர வன்பொருள், கருவிகள் பற்றி விவாதித்து, உரையாடி, பயன்படுத்தி காட்டும் நாள். இங்கு 15-20 நிலையகங்கள் (Stalls) வைக்கப்படும். கடந்த ஆண்டுகளில் கட்டற்ற மென்பொருள் குழுக்களிடையே இது ஒரு பெரிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டம், மக்களிடையே கட்டற்ற மென்பொருளை பெரியளவில் கொண்டு சேர்ப்பதற்க்கு சிறந்த வழியாக திகழ்கிறது.
இந்த ஆண்டு இக்கொண்டாட்டம் எழும்பூரில் உள்ள Madras School of Social Work கல்லூரியில் நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நிகழ்வில் பங்கு கொண்டு கட்டற்ற மென்பொருளையும், அதனைச் சுற்றியுள்ள சூழல்களையும் அறிந்து கொண்டு அதனை அனைவருக்கும் கொண்டு சேர்க்க அழைக்கின்றோம். அனைவரும் வாருங்கள்.
சுவரிதழ் – flic.kr/p/28pK321
தேதி – 23 செப் 2018
நேரம் – காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம் – Madras School of Social Work, எழும்பூர் (www.openstreetmap.
நிகழ்வு – www.facebook.com/
நிலையகங்கள்:-
1. கட்டற்ற மென்பொருள் மாற்றுகள்
2. பிரபஞ்சமும் கட்டற்ற மென்பொருள் கருவிகளும்
3. கட்டற்ற மென்பொருள் விளையாட்டுகள்
4. Libre Digital Library
5. கணியம்
6. விக்கிபீடியா
7. மொசில்லா உலாவி மற்றும் Addon-கள்
8. இணையத்தில் தனியுரிமை
9. ஆன்ட்ராய்டு மாற்றுகள்
10. தமிழும் கணிணியும்
11. அறிவியலும் கட்டற்ற மென்பொருளும்
12. மேலும் பல…
அனைவரும் வருக!
நன்றி
இப்படிக்கு,
பாலாஜி