Tag Archives: தமிழ்

எளிய தமிழில் Robotics 6. கூட்டுவேலை எந்திரன்கள் (Collaborative Robots or Cobots)

தொழில்துறை எந்திரன்கள் பொதுவாக கனரக இயந்திரங்கள் வகையில் அடங்குபவை. மேலும் இவை மிகத் துரிதமாக இயங்குபவை. ஆகவே பாதுகாப்புக்காக தொழில்துறை எந்திரன்களைச் சுற்றி கம்பி வலை தடுப்பு போடுவது வழக்கம். தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் தற்செயலாக எந்திரன்களின் அருகில் செல்ல நேரிட்டால் கடுமையான விபத்துகள் நிகழக்கூடும் என்பதாலேயே இந்த முன்னெச்சரிக்கை எடுக்கப்படுகிறது. சமீப காலத்தில் பார்வை உட்பட பல்வேறு உணரிகளில் ஏற்பட்டுள்ள தொழில்துறை மேம்பாடுகள் காரணமாக புது வகையான தொழில் துறை எந்திரன்கள் சந்தைக்கு வந்துள்ளன. இவற்றை… Read More »

எளிய தமிழில் Robotics 5. எந்திரனை நிரல் எழுதி இயக்குதல்

தேவையான இயக்கங்களின் வரையறையை முன்னரே கொடுத்துவிட்டால் எந்திரன் மனிதத் தலையீடு இல்லாமல் அவற்றைச் செய்ய முடியும். ஆனால்  நமக்குத் தேவையான வேலை செய்யுமாறு அமைப்பை அடையாளம் கண்டு மற்றும் குறிப்பிட்டு வடிவமைத்து முன்கூட்டியே நிரல் எழுத வேண்டும். எடுத்துக்காட்டாக, எடுத்து வைத்தல் (pick-and-place) வேலை செய்யும் எந்திரன் கைமுனை சாதனம் (end effector) எந்தத் தோற்ற அமைவில் இருக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்து நிரல் எழுத வேண்டும். எந்திரன் கைக்கு நிரல் எழுதும் வகைகள்… Read More »

எளிய தமிழில் Robotics 4. சேவை எந்திரன்கள்

மூன்று மைல் தீவு (Three Mile Island) 1979 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மூன்று மைல் தீவு அணுமின் நிலையத்தில் விபத்து ஆகி கதிரியக்க பொருட்கள் கசிந்து விட்டன. மேல் தளத்தைப் பார்வையிட முடிந்தது. பல பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்துகொண்டு சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்க முடிந்தது. ஆனால் கீழ்த்தளத்திலிருந்த நிலவறையைப் பார்க்க இயலவில்லை. ஆகவே பிரச்சினையின் பரிமாணத்தை அளவிடக்கூட இயலவில்லை. பிட்ஸ்பர்கில் உள்ள கார்னகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் எந்திரனியல் பேராசிரியர் வில்லியம் விட்டேக்கர் தலைமையிலான மாணவர்கள்… Read More »

எளிய தமிழில் Robotics 3. கொஞ்சம் கோட்பாடு கொஞ்சம் கைப்பயிற்சி

பயிற்சி வழிக் கற்றல் கோட்பாடுகள் உருவமற்றவை. அதிகமானால் சலிப்புத் தட்டும், புரிந்து கொள்வதும் கடினம். கைப்பயிற்சியில் விளையாட்டாகக் கற்றுக்கொள்ளலாம். ஆனால் வெறும் கைப்பயிற்சி மட்டுமே செய்தால் நாம் முயற்சிப்பது வேலை செய்தாலும் ஏன் வேலை செய்தது என்று தெரியாது. ஏதாவது பிரச்சினை வந்து கொஞ்சம் மாற்ற வேண்டுமென்றால் எதை மாற்றுவது, ஏன் என்றும் புரியாது. எனவே கொஞ்சம் கைப்பயிற்சிகளுடன் கொஞ்சம் அடிப்படைகளைக் கலந்து படித்தால் எளிதாகப் புரியும் மற்றும் சலிப்புத் தட்டாது. உணர், திட்டமிடு, செய் எந்திரனியலில்… Read More »

எளிய தமிழில் Robotics 2. தொழில்துறை எந்திரன்கள்

முதல் எண்ணிம கட்டுப்பாடு மற்றும் நிரல் எழுதி இயக்கக்கூடிய எந்திரனை 1954 இல் ஜார்ஜ் டெவல் (George Devol) என்பவர் உருவாக்கினார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு முதல் யூனிமேட் (Unimate) என்ற பெயர் கொண்ட எந்திரனை இவர் விற்றார். 1961 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியிலுள்ள ஒரு ஆலையில் அச்சு வார்ப்பு எந்திரத்திலிருந்து பழுக்கக் காய்ச்சிய உலோக பாகங்களை எடுத்து அடுக்கி வைக்க இந்த எந்திரன் நிறுவப்பட்டது. இது ஒரு எந்திரன் கை (Robotic Arm).… Read More »

எளிய தமிழில் Robotics 1. நிலம், நீர், வானம் எங்கும் எந்திரன்மயம்!

தானியங்கியியல் (Robotics) என்றவுடனே நம் மனக்கண்ணில் தோன்றுவது எந்திர மனிதன் தான். டெர்மினேட்டர், ஸ்டார் வார்ஸ் படத்தில் வந்த C3P0 மற்றும் R2D2, வால்-E, ரஜினிகாந்தின் எந்திரன் மற்றும் ரோஸி எந்திரப் பணிப்பெண் போன்ற திரைப்படங்களில் வந்த கற்பனை ஆளுமைகள் இந்த எந்திர மனிதனின் கவர்ச்சியை வளர்த்து விட்டன. தவிரவும் மனித இயக்குனரின்றி தானாகவே இயங்கும் (automatic) எந்திரங்கள் யாவற்றையும் தானியங்கி என்றுதான் சொல்கிறோம். இக்காரணத்தினால் Robotics துறையைத் தமிழில் எந்திரனியல் என்று சொல்வதே மிகப் பொருத்தமாக… Read More »

திறந்த மூல கயெக பாவனையாக்கிகள் (CNC Simulators)

ஏன் பாவனையாக்கிகளைப் பயன்படுத்த வேண்டும்? கயெக நிரலாக்கம் (CNC Programming) பற்றிய அடிப்படைகளை முந்தைய கட்டுரையில் காணலாம். புதிதாக நிரல் பயில்வோர் தங்கள் நிரலை ஓட்டிப் பார்க்க ஒரு எளிதான வழி தேவை.  கயெக எந்திரங்கள் விலை உயர்ந்தவை. மேலும் உற்பத்திக்குப் பயன்படும் எந்திரங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. அனுபவமுள்ள நிரலாளர்கள்கூட கயெக நிரலாக்கத்தில் மிகப் பெரும் இடர் என்ன என்பது பற்றிக் கவனம் வைக்க வேண்டும். நீங்கள் நிரலில் இட்ட கட்டளைகளைக் கணினி கண்ணை மூடிக்கொண்டு… Read More »

கயெக நிரலாக்கம் (CNC Programming)

கணினி எண்ணிம கட்டுப்பாட்டு (Computer Numerically Controlled) எந்திரங்களைத் தமிழில் அஃகுப்பெயராக கயெக எந்திரங்கள் என்று கூறலாம். கணினி கட்டுப்பாட்டில் மரவேலை வழிச்செயலி (Woodworking Router), மின்ம வெட்டல் (Plasma Cutting), சீரொளி வெட்டல் (Laser Cutting), செதுக்கல் (Engraving), பற்றவைத்தல் (Welding) போன்ற பல எந்திரங்களை இயக்கலாம். இக்கட்டுரையில் கயெக கடைசல் இயந்திரம் (CNC Lathe) மற்றும் கயெக துருவல் இயந்திரம் (CNC Milling machine) ஆகியவற்றில் முக்கியமாகக் கவனம் செலுத்துகிறோம். கயெக (CNC) எந்திர… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 28. மொழித் தொழில்நுட்பத்தில் வளங்கள் மிகுந்த மொழியாகத் தமிழை உயர்த்துவோம்

இயல் மொழியியலில் அண்மைய தொழில்நுட்பக் கலை பற்றிய ஆய்வு, தொகுதி 13-14 இலிருந்து கீழ்க்கண்ட மேற்கோள் எடுக்கப்பட்டது. “மொழித் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் பெறக்கூடிய நன்மைகள் இவை. கணினிகளின் பயன்மை (usability) அதிகரிக்கிறது. மேலும் கணினி பயன்பாட்டில் பாமர மக்கள் தன்மேம்பாடு பெறவும் (empowering) வழிவகுக்கிறது.” தமிழின் கடந்த முதன்மைத்துவத்தை மீண்டும் பெற முயல்வோம் 1805 இல் ராஜெட் ஆங்கிலத்தில் முதல் தெஸாரஸ் (Roget’s Thesaurus) உருவாக்கினார். இதன் மூலப் பதிப்பில் 15,000 சொற்கள் இருந்தன. அச்சிடல்… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 27. உணர்வு பகுப்பாய்வும் சமூக ஊடகங்களும்

உணர்வு பகுப்பாய்வு (sentiment analysis) அல்லது கருத்து சுரங்க வேலை (opinion mining) என்பது ஒரு பேச்சாளரின் அல்லது எழுத்தாளரின் மனோபாவத்தைத் தீர்மானிப்பது. ஒரு தலைப்பைப் பற்றியோ அல்லது ஒரு ஆவணத்தை ஒட்டுமொத்தமாகவோ ‘நேர்மறை (positive)’ அல்லது ‘எதிர்மறை (negative)’ என்று கணிக்கிறோம். இம்மாதிரி நேரெதிரான இரண்டு தன்மைகள் இருந்தால் அவற்றை முனைவு (polarity) என்று சொல்கிறோம். சில வேலைகளுக்கு மூன்றாவதாக ‘நடுநிலை (neutral)’ என்றும் கணிக்க வேண்டியிருக்கலாம். இது தவிர உயர்நிலை உணர்வு பகுப்பாய்வில் “கோபம்”,… Read More »