தமிழ்க் கம்ப்யூட்டர் இதழில் 1995 முதல் 2006 வரை டி’பேஸ் வழியாக சி-மொழி, சி-மொழியின் சிறப்புத் தன்மைகள், மொழிகளின் அரசி++, வருங்கால மொழி சி#, நெட்வொர்க் தொழில்நுட்பம் ஆகிய தலைப்புகளில் நான் எழுதிவந்தேன். அப்பாடங்களைப் படித்து, அதன்மூலம் கணினி அறிவியல் பாடத்தில் ஆக்கமும் ஊக்கமும் பெற்ற மாணவர்கள் பலர். அவ்வாறு பலனடைந்தோர் பலர் இன்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அதே காலகட்டத்தில், பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வித் துறையில் எம்சிஏ, எம்எஸ்சி… Read More »
இந்தப் பிரகடனம் இந்தியாவில் பொது நலனுக்காக ஆராய்ச்சி வெளியீடுகளின் அணுகலைத் திறக்கப் பாடுபடும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வல்லுநர்களை உள்ளடக்கிய குழுவினரால் தயாரிக்கப்பட்டது. திறந்த அணுகல் இயக்கம், ‘பொதுமக்களின் வரிப்பணத்தில் செய்யப்படும் ஆராய்ச்சி முடிவுகளை பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்வதை’ இலக்காகக் கொண்டது. இந்தப் பிரகடனத்தின் பங்களிப்பாளர்கள் மற்றும் கையொப்பமிட்டோர், திறந்த அணுகல் இந்தியாவின் உறுப்பினர்கள், மற்றும் புது டெல்லியில், 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 நடைபெற்ற கலந்தாய்வில் பங்கு பெற்றோர். திறந்த அறிவியல் நடைமுறையை நாங்கள் ஆதரிக்கிறோம் (“சக்கரத்தை… Read More »
Jmol – முப்பரிமாண வேதியியல் மூலக்கூறுகளை காண உதவும் கட்டற்ற மென்பொருள் அறிமுகம் J mol (Java molecular) ஒரு வேதியியல் மூலக்கூறுகளை முப்பரிமாணத்தில் காண உதவும் கட்டற்ற மென்பொருள். இது ஜாவா நிரலாக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. எனவே இதனை அனைத்து இயங்குதளங்களிலும், Applet ஆக ஜாவா உதவியுடன் அனைத்து இணைய உலாவிகளிலும் (Browsers) பயன்படுத்தலாம். மேலும் Jmol viewer – development toolkit ஐ பயன்படுத்தி மற்றி ஜாவா மென்பொருளுடன் இணைத்துக்கொள்ளலாம். இம்மென்பொருளின் பல்வேறு சிறப்பம்பசங்களால்… Read More »
நானோ தொழில்நுட்பத்திற்கான கட்டற்ற மென்பொருள் CNT அறிமுகம் Carbon Nanotube (மீநுண் கரிக்குழல்) என்பதன் சுருக்கமே CNT. குழல் போன்ற அமைப்பைக் கொண்ட CNT கரிமத்தால் (Carbon) ஆனது. ஏறக்குறைய 3-10 nm விட்டமும், சில நூறு மைக்ரான்கள் நீளமும் கொண்டது. (நானோமீட்டர் – 10^(-9) அதாவது ஒரு சென்டிமீட்டரை ஒரு கோடி கூறுகளில் ஒரு பங்கு. நம் தலைமுடியின் தடிமன் 100 மைக்ரான், இது நானோ மீட்டரில் 100000nm.) இது எதற்கு பயன்படும்? இதை வைத்து… Read More »
மின்சுற்று வரைபடங்கள் கல்லூரியில் பயிலும் இயற்பியல் மாணவர்கள் தங்கள் செய்முறை வகுப்புகளில் சில அடிப்படை மின்சுற்றுகளை அமைத்து வேலை செய்யும் விதத்தை அறிந்திருப்பர். பல்தொழில்நுட்பம், பொறியியலில் பயிலும் ECE, EEE மாணவர்கள் மின்சுற்றுகளைப் பற்றி அதிகம் அறிந்திருப்பர். இதுபோன்ற மின்சுற்றுகளுக்கும், மின்சுற்று ஒப்புச் செயலாக்கத்திற்கும் (Circuit Simulation) ஆட்டோகேட் (Auto CAD) போன்ற வர்த்தக மென்பொருள்களைப் பயன்படுத்தி வருகின்றனர். லினக்ஸிலும் இதுபோன்று மின்சுற்றுக்களை அமைப்பதற்கும், அமைக்கப்பட்ட மின்சுற்றினைச் சோதிப்பதற்கும், இறுதியாக உருவாக்கப்பட்ட மின்சுற்றினைப் பொருத்துவதற்கு, அச்சிட்ட மின்சுற்றுப்… Read More »