எண்ணிம நூலகவியல் 2 – அதிகார வரையறை (Authority Control)
பட்டியலாக்கம் (cataloging) அல்லது மீதரவு உருவாக்கத்தில் (metadata creation) நபர், நிறுவனம், இடம், பொருட்துறை போன்றவற்றை குறிக்க வேண்டி இருக்கும். மீதரவு உருவாக்கத்தில் இவ்வாறு பயன்படுத்தப்படும் பொருட்களை உருபொருட்கள் (entities) என்பர். ஒரு உருபொருள் பல வடிவங்களில் எழுதப்படலாம். எடுத்துக்காட்டாக தந்தை பெரியார் எழுதிய “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற நூலைப் பற்றிய மீதரவுப் பதிவில், அதன் ஆசிரியரான (author) தந்தை பெரியாரை எப்படி குறிப்பிட வேண்டும்? பெரியார், தந்தை பெரியார், ஈ. வெ. இராமசாமி, ஈரோடு… Read More »