எளிய தமிழில் Electric Vehicles 27. மின்னூர்திகளின் தரநிலைகள்
வண்டியை வாங்குவதற்கு முன் அதன் திறன் (power), முறுக்கு விசை (torque), முடுக்கம் (acceleration), ஓடுதூரம் (range) பொன்ற பல விவரங்களைக் குறிப்பாகப் பார்க்கிறீர்கள். ஒவ்வொரு தயாரிப்பாளரும் அவரவர் வழியில் சோதனை செய்து வெளியிட்டால் உங்களால் இவற்றை ஒப்பீடு செய்து பார்க்க முடியாது. இவற்றைப் பொதுவாகச் சோதிக்கும் செயல்முறைகள் தேவை. மேலும் சார்பற்ற மையம் ஒன்று சோதனை செய்து அறிக்கை வெளியிட்டால்தான் வாங்குபவர்களுக்கு நம்பத்தக்கதாக இருக்கும். இந்தியத் தானுந்து ஆராய்ச்சிக் கழகம் (Automotive Research Association of… Read More »