Tag Archives: பைத்தான்

பைத்தான் ரிஜெக்ஸ் 3 – ஒன்றுக்கு மேற்பட்ட அலைபேசி எண்களை எப்படிச் சோதிப்பது?

முந்தைய பதிவில் தொலைபேசி எண் இருக்கிறதா என்பதைப் பார்த்தோம். அதைப் பார்க்கும் போது நண்பர் ஒருவர், 91 என்று நாட்டுக் குறியீட்டுக்குப் பதிலாகச் சில நேரங்களில் நாம் சுழி(0) கொடுப்போமே! அதை உங்கள் நிரல் கையாளுமா? என்று கேட்டிருந்தார். சிலர் 91 என நாட்டுக்குறியீடு கொடுப்பார்கள். சிலர், சுழி(0) கொடுப்பார்கள். ரிஜெக்சில் இதை எப்படிக் கையாள்வது? 91 அல்லது 0 என்பதை ரிஜெக்ஸ் முறையில் எழுத வேண்டும். (91|0) அவ்வளவு தான்! இங்கே நடுவில் இருக்கும் |… Read More »

பைத்தான் – ரிஜெக்ஸ் – 2 – தொலைபேசி எண்களை எப்படிச் சோதிப்பது?

முந்தைய பதிவில் அலைபேசி எண்கள் பார்த்தோம் அல்லவா! இப்போது நாம் ரிஜெக்ஸ் முறையில் தொலைபேசி எண்களைச் சோதிப்பது எப்படி என்று பார்ப்போமா! முதலில் சில தொலைபேசி எண்களை எழுதுவோம். கீழ் உள்ள எண்களைப் பாருங்கள். 9144-22590000 – சென்னை எண் 91462-2521234 – திருநெல்வேலி எண் 9140-23456789 – ஐதராபாத் எண் 914562-212121 – சிவகாசி எண் இந்த எண்களில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. STD என்று சொல்லப்படும் பகுதிக் குறியீடு, பிறகு தொலைபேசி எண். இந்த… Read More »

பைத்தான் – ரிஜெக்ஸ்(Regex) – 1

பைத்தானில் ரிஜெக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாதே என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால், உங்களுக்கான சரியான பதிவு தான் இது.  பைத்தான் ரிஜெக்ஸ் பார்ப்பதற்கு முன்னர், ஓர் எண், அலைபேசி எண்ணா எனக் கண்டுபிடிக்க, பைத்தானில் நிரலைப்பார்த்து விடுவோமே! def isPhoneNumber(text): if len(text) != 10: return False for i in range(0, 9): if not text[i].isdecimal(): return False if text[0] == ‘0’: return False return True print(‘Is 8344777333… Read More »

பைத்தான் : திட்டப்பணி வழிகாட்டு – இலவச இயங்கலை நிகழ்ச்சி

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் பயிலகம் – நியூஸ் 18 இணைந்து பைத்தான் வகுப்புகளை இயங்கலையில் எடுத்து யூடியூபில் பதிவேற்றியிருப்பது உங்களுக்குத் தெரிந்தது தான்! அந்த வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பைத்தான் திட்டப்பணி வழிகாட்டு நிகழ்ச்சிகள் நாளை முதல் இரு வாரங்களுக்குத் தொடங்குகின்றன. பயிலகம் பயிற்றுநருடன் கணியம் சீனிவாசன், கலீல் ஆகியோரும் வழிகாட்டிகளாக இணைந்து கலக்கவிருக்கிறார்கள். இலவசமாகவும் கட்டற்றும் கிடைத்த பைத்தானை இலவசமாகவே பயிற்றுவித்து கட்டற்று(படைப்பாக்கப் பொது உரிமையில்) வெளியிட்டு இலவசமாகவே வழிகாட்டவும் செய்தால் யாருக்காவது… Read More »

பைத்தான் – இணையவழி, இலவசப் பயிற்சிப் பட்டறை

பயிலகமும் நியூஸ் 18 தமிழ்நாடும் இணைந்து தமிழில் பைத்தான் – இணையவழி, இலவசப் பயிற்சிப் பட்டறையை நடத்தவிருக்கின்றன.  வகுப்புகள் வரும் மே 6ஆம் நாளில் வகுப்புகள் தொடங்குகின்றன.  தினமும் ஒரு மணிநேரமாக (காலை 7.30 இல் இருந்து 8.30) , ஒரு மாதம் இந்த வகுப்புகள் நடக்கவிருக்கின்றன.  வகுப்புகளின் பதிவுகள் – யூடியூப் தளத்தில் பயிலகம் பக்கத்தில் பதிவேற்றப்படும். யார் யார் படிக்கலாம்? பைத்தான் படிக்க விரும்பும் யாரும் படிக்கலாம் நான் ஐடி துறை இல்லை. படிக்கலாமா?… Read More »