Tag Archives: பைத்தான்

பைத்தான் படிக்கலாம் வாங்க – 1

பைத்தான் படிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாட்களாகவே என்னுள் இருந்த சிந்தனை. கல்லூரி படித்த காலங்களில் சி++, ஜாவா ஆகிய இரண்டையும் பாடமாகவே படித்திருந்தேன். ஆனாலும் அவை இரண்டும் பெரிய அளவில் மனத்தில் நிற்கவில்லை. செயலிலும் அப்படித்தான் வெளிப்பட்டது. வேலை பார்த்த நாட்களில் ஜாவா மிகப் பெரிய அளவில் எனக்குத் தேவையாக இருந்தது. வேலையைத் தக்க வைப்பதற்கே ஜாவா வேண்டும் என்னும் நாட்களில் எப்படியாவது ஜாவாவைக் கரைத்துக் குடித்து விட வேண்டும் என்று ஜாவா கம்ப்ளீட்… Read More »

பைத்தான் மொழி – அறிமுகம் – இணைய உரையாடல் – 11.03.2021 – மாலை 7.00-8.30

வணக்கம். 625001in (மதுரை ஒபன் டெக் கிளப்‌) இணையவழி இலவச அறிவுபகிர் நிகழ்வுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். வரும் வியாழக்கிழமை மாலை 7.00 – 8.30pm இணைய வழியில் சந்தித்து, பைத்தான் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல்: 1. MOTC அறிமுகம் 2. பைத்தான் பயில்வோம். 3. கேள்வி பதில்கள். நிகழ்வில் சந்திப்போம்.   பதிவு செய்ய – www.airmeet.com/e/58f34eb0-7cb4-11eb-89b5-4db4a0246670  

லேங்ஸ்கேப் நிறுவனம் – பயிலகம், கணியம் இணைந்து நடத்தும் ஜேங்கோ(DJango) இலவச இணையவழிப் பயிற்சிகள்

மொழிபெயர்ப்புத் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான லேங்ஸ்கேப்(Langscape) நிறுவனம், பயிலகம், கணியம் ஆகியவற்றுடன் இணைந்து பைத்தான் ஜேங்கோ(DJango) பயிற்சிகளை இலவசமாக நடத்த முன்வந்துள்ளது. பயிற்சி இணையவழி இரண்டு (கூடினால் மூன்று) வாரங்கள் நடத்தப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள, பைத்தான் அடிப்படைகள் தெரிந்திருத்தல் கட்டாயம். ஒவ்வொரு நாளும் பயிற்சி நேரம் தவிர, ஓரிரு மணிநேரங்கள் பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும். பயிற்சி தொடங்கும் நாள்: பிப்ரவரி 11, 2021 நேரம்: பிற்பகல் 2 – 3.30 இந்திய நேரம் பயிற்சியில்… Read More »

லேங்க்ஸ்கேப் – பயிலகம் வழி நடத்தும் ஒரு மாத இலவச இணையவழி பைத்தான் பயிற்சி

லேங்க்ஸ்கேப் நிறுவனம் முன்னெடுக்கும் இலவசப் பைத்தான் பயிற்சிகள் பயிலகம் பயிற்றுநர்கள் மூலம் தமிழ் வழியில் நடத்தப்படுகிறது. ஒரு மாதம் (திங்கள் – சனி வரை) இப்பயிற்சி நடத்தப்படும். பைத்தான், ஜேங்கோ(Django) ஆகியன பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொரு நாளும் இரண்டு மணிநேரம் இவ்வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமும் நேரமும் உள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். பயிற்சியை முறையாக முடிப்பவர்களுக்கு, லேங்க்ஸ்கேப் நிறுவனத்தின் பணி வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளில் வாய்ப்பு தரப்படும். * பயிற்சி முற்றிலும் இலவசமா? ஆம். முற்றிலும் இலவசம். *… Read More »

பைத்தான் – sys module – வினா 8 விடை 8

போன பதிவில் os நிரல்கூற்றைப் பற்றிப் பார்த்தோம் அல்லவா! இந்தப் பதிவு sys module பற்றியது. கணினியின் சில அடிப்படைத் தகவல்கள், பைத்தான் வரிபெயர்ப்பி பற்றிய தகவல்கள் ஆகியவற்றை sys நிரல்கூற்றில் இருந்து பெறலாம். முதலில் import sys கொடுத்துக் கொள்ளுங்கள். வினா 1: பைத்தான் காப்புரிமை பற்றிய தகவல்களை எங்கே பார்ப்பது? sys.copyright வினா 2: float தரவுவகை பற்றி என்று எப்படிப் பார்ப்பது? sys.float_info வினா 3: யூனிக்கோடு என்கோடிங் என்ன என்று எப்படிப்… Read More »

பைத்தான் – os module – வினா 8 விடை 8

பைத்தானின் முதன்மையான நிரல்கூறு(module)களுள் ஒன்று os என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்தப் பதிவில், அதில் அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண்டிய சில செயல்கூறுகளை(functions)ப் பார்க்கலாமா! os நிரல்கூற்றை முதலில் உங்கள் கணினியில் இறக்கிக் கொள்ளுங்கள். அதாவது, import os அவ்வளவு தான்! வினா 1: நான் இருக்கும் அடைவைப் பைத்தானில் பார்ப்பது எப்படி? os.getcwd() cwd என்பது Current Working Directory என்பதன் சுருக்கம். அதாவது இப்போது நீங்கள் எந்த அடைவில்(directory) இருக்கிறீர்கள் என்பதைக் காட்டும். வினா… Read More »

லினக்ஸ் மின்டில் செலினியம் வெப் டிரைவர்,பயர்பாக்ஸ் டிரைவர் – பைத்தானுக்கு நிறுவுவது எப்படி?

செலினியம் திட்டப்பணி செய்வதில் தொடக்க நிலையில் இருப்பவர்கள், செலினியம் வெப் டிரைவர், பயர்பாக்ஸ் டிரைவர் ஆகியவற்றை லினக்ஸ் மின்டில் நிறுவுவது எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். லினக்சில் மென்பொருள் நிறுவல் என்பது மிக மிக எளிமையான ஒன்று. டெர்மினலைத் திறந்து கொள்ளுங்கள். 1. நீங்கள் ஏற்கெனவே pip3 நிறுவியிருந்தால் நேரடியாக இரண்டாம் படிக்குப் போய் விடுங்கள். இல்லாவிட்டால் sudo apt-get install pip3 என்று கொடுங்கள். pip3 நிறுவப்பட்டு விடும். 2. இப்போது செலினியம்… Read More »

பைத்தான் ரிஜெக்ஸ் – 7 – ஒரு கோப்பில், மின்னஞ்சலில் உள்ள மின்னஞ்சல் முகவரியைக் கண்டுபிடிப்பது எப்படி?

நம்மிடம் ஒரு கோப்பு(File) இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கோப்பில் நிறைய தகவல்கள் இருக்கின்றன. அந்தத் தகவல்களில் ஒரு சில மின்னஞ்சல் முகவரிகளும் இருக்கின்றன. அந்த மின்னஞ்சல் முகவரிகள் மட்டும் நமக்கு வேண்டும். இதைப் பைத்தான் ரிஜெக்ஸ் பயன்படுத்திச் செய்யப் போகிறோம். இந்த வேலையில் இரண்டு படிகள் இருக்கின்றன. 1. கோப்பைத் திறந்து பைத்தான் கையில் கொடுப்பது. இது மிக எளிது. file_content = open(‘test.txt’) மேல் உள்ள வரியில் test.txt என்னும் கோப்பைத் திறந்து… Read More »

பைத்தான் ரிஜெக்ஸ் – 6 – வார்த்தை, வாக்கிய எண்ணிக்கை

இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது, ஒரு வரியில் எத்தனை வார்த்தைகள் இருக்கின்றன என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது, ஒரு பத்தியில் எத்தனை வாக்கியங்கள் இருக்கின்றன ஆகியனவற்றைத் தான்! ரிஜெக்சுக்குப் போவதற்கு முன்பு, சில அடிப்படை கருத்துகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்” – இந்த வாக்கியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் எத்தனை வார்த்தைகள் இருக்கின்றன? நான்கு! எப்படிச் சொன்னோம்? ஒரு வார்த்தையையும் இன்னொரு வார்த்தையையும் எப்படிப் பிரித்தோம்? இடைவெளி இருப்பதைப் பார்த்தோம்!… Read More »

பைத்தான் ரிஜெக்ஸ் – 4 – தேதியை உறுதிப்படுத்துவது எப்படி?

இதற்கு முன்பு, தொலைபேசி எண்கள், அலைபேசி எண்கள் ஆகியவற்றை எப்படிச் சோதிப்பது என்று பார்த்துவிட்டோம். இப்போது நம் முன்னால் உள்ள கேள்வி – ஒரு தேதி – சரியான தேதி என்று தான் பைத்தான் ரிஜெக்ஸ் மூலம் எப்படி உறுதிப்படுத்துவது என்பதைத் தான்!  தேதியை எப்படி எழுதுவோம் – பொதுவாக நாள்/மாதம்/ஆண்டு என்பதை, dd/mm/yyyy எனும் பொது வடிவத்தில் எழுதுவோம் அல்லவா! அதாவது முதலில் இரண்டு எண்கள்(தேதிக்கு), பிறகு இரண்டு எண்கள்(மாதத்திற்கு), பிறகு நான்கு எண்கள்(ஆண்டுக்கு) என்பது… Read More »