Tag Archives: லினக்ஸ்

பைத்தான் படிக்கலாம் வாங்க – 16 – மோகனா? மன்னனா? வென்றது யார்?

பயணம் தொடரட்டும், பாதை மலரட்டும் என்றெல்லாம் போன பதிவில் முடித்திருந்தீர்கள். நாங்களும் நீண்ட நாட்களாகக் காத்திருக்கிறோம், நீங்கள் வேறு பயணத்திற்குள் நுழைந்து விட்டீர்களா? ஆளையே காணோமே என்று நண்பர்கள் சிலர் செல்லமாகக் கடிந்து கொண்டார்கள். ஆமாம், உண்மை தான்! கல்வெட்டுப் பயிற்சி ஒன்றைத் தமிழ்நாட்டு அரசின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்தி வருகிறது. அந்தப் பயிற்சிக்குள் நுழைந்து தமிழியைப் படித்துக் கொண்டிருந்தேன். தமிழியை எடுத்த போது, தமிழ்க் கணினியைக் கொஞ்சம் விட்டு விட்டேன். முன்னைப் பழமைக்கும் தமிழே… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 7 – லினக்சில் நிரல் எழுதுவோம்!

முந்தைய பதிவில் விண்டோசில் எப்படி லினக்ஸ் நிரல் எழுதுவது என்று பார்த்தோம். இப்போது லினக்சில் எப்படி எழுதுவது என்று பார்ப்போம். லினக்ஸ் இயங்குதளத்தில் பைத்தான் நிரல் எழுதுவதற்கு முன், நோட்பேட்++(Notepad++),  நோட்பேட்கியூகியூ(Notepadqq) போன்ற மென்பொருட்களை நிறுவிக் கொள்வது சிறந்தது. இம்மென்பொருட்கள் கட்டாயமாகத் தேவையா எனக் கேட்டால் இல்லை தான்! இருந்தாலும் இவற்றைப் பயன்படுத்துவதில் சில நன்மைகள் இருக்கின்றன என்பதால் இவற்றைப் பயன்படுத்தச் சொல்கிறேன், அவ்வளவே! நோட்பேட்கியூகியூ தரவிறக்கம்: லினக்ஸ் மின்டின் சாப்ட்வேர் மேனேஜரைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள்.… Read More »

லினக்ஸ் மின்ட் அடிப்படை -நச்னு நாலு கட்டளைகள்

லினக்ஸ் மின்ட் பயன்படுத்தத் தொடங்கிய தொடக்க நாட்களில் கணினி பற்றிய தகவல்கள்(OS, Processor, RAM ஆகியன பற்றி) எப்படி, எங்கே பார்ப்பது எனத் தேடிக் கொண்டிருந்தேன். அவற்றின் சுருக்கம் தான் இங்கே! சின்னச் சின்ன சில கட்டளைகளைத் தெரிந்து கொண்டாலே போதுமானது! பல செய்திகளைத் தெரிந்து கொள்ள முடியும். டெர்மினலைத் திறந்து கொள்ளுங்கள். கட்டளை #1: வன்பொருள் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள, sudo lshw இப்போது பல தகவல்கள் தரப்பட்டிருக்கும். அவற்றை ஒழுங்குபடுத்தி, அட்டவணை வடிவத்தில்… Read More »