எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 3 – நிரலில் comment செய்தல்
Comment என்பது நிரலாளரின் (programmer) பயன்பாட்டிற்காக நிரலில் எழுதப்படும் வரிகளாகும். நிரலிலுள்ள comment-களை interpreter இயக்க முயற்சிக்காது, நிராகரித்துவிடும். Comment ஒருவரியிலோ, பலவரிகளிலோ இருக்கலாம். மற்ற நிரலாளர்களால் பயன்படுத்தப்படும் library-கள் எழுதும் பொழுது, ஆவணத்திற்காக (documentation) comment-கள் பயன்படுத்தப்படும். ரூபி ஆவணத்திற்குப்பயன்படுத்தபடும் rdoc, இதற்கு ஒரு சிறந்த உதாரணம். நிரல் வரிகளை, comment செய்வதின் மூலம், interpreter-ஆல் இயக்கமுடியாமல் தடுக்கலாம். இது தற்காலிகமாக இருக்க வேண்டும். எழுதப்பட்ட நிரல், எதிர்பார்த்தபடி இயங்குகிறதா என்பதை சோதித்தபின், இது போன்ற… Read More »