Tag Archives: electronics

ஒளி உமிழ் டையோடுகளும் அவை செயல்படும் விதமும் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 9

எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை எழுத ஆரம்பித்த நாளிலிருந்து, டையோடுகளுக்கும் நமக்கும் நல்ல உடன்பாடு இருக்கிறது போலும்! நான் எப்பொழுது கட்டுரையை எழுத தரவுகளை சேகரித்தாலும், டையோடுகள் எனது கண்களில் இருந்து தவறுவதில்லை. கடந்த ஒரு கட்டுரையில், ஒளி மின் டையோடு(photo diode) குறித்து பார்த்திருந்தோம். அதாவது, வெளியில் இருக்கும் ஒளியின் அளவைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யவல்ல டையோடு தான் ஒளிமின் டையோடு. இவற்றைப் பெரும்பாலும் உணர்விகளில் பயன்படுத்தலாம் என்று நான் குறிப்பிட்டிருந்தேன். அந்த வகையில் நாம் கொடுக்கின்ற… Read More »

ஒலிபெருக்கிக்கு பின்னால் இருக்கக்கூடிய அறிவியல் என்ன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 8

தொடர்ந்து கடந்த சில கட்டுரைகளாக, டையோடுகள்,ட்ரான்சிஸ்டர்,மின்தடை உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் குறித்து எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் பேசி இருந்தோம். ஆனால், இந்தக் கட்டுரையில் நாம் பொது வாழ்வில் அனுதினமும் காணக்கூடிய,  ஒலிபெருக்கிகளில்(loud speakers)புதைந்திருக்க கூடிய அறிவியலை எளிமையாக அறிந்து கொள்ளலாம். அதற்கு முன்பாக, என்னுடைய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை நீங்கள் படிக்க விரும்பினால்! கீழே வழங்கப்பட்டுள்ள பட்டனை பயன்படுத்தி பார்வையிடவும். விழா காலங்கள் என்றாலே, ஒலிபெருக்கிகள் ( loud speakers) இல்லாமல் நிறைவடையாது. நீங்கள் பென்டிரைவ் அல்லது ப்ளூடூத் இல்… Read More »

ஒளிமின் டையோடு | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 7

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், தொடர்ந்து மின்னணுவியல் தொடர்பான கட்டுரைகளை பார்த்து வருகிறோம். கடந்த கட்டுரையில் ட்ரான்சிஸ்டர்கள் குறித்து விவாதித்து இருந்தோம், அந்த வகையில் என்னுடைய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை நீங்கள் படிக்கவில்லை என்றால்! கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டனை பயன்படுத்தி என்னுடைய பிற கட்டுரைகளையும் பார்வையிடுங்கள். அந்த வகையில் இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது , ஒளிமின் டையோடுகள் குறித்து தான். அடிப்படையில், ஒளிமின் டையோடுகள் என்பது பி என் சந்தி டையோடின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகிறது. இதுகுறித்து அறிந்து கொள்ள… Read More »

டிரான்சிஸ்டர்கள்(திரிதடையம்) என்றால் என்ன ? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 6 .

கடந்த எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், டையோடுகள் குறித்து விவாதித்து இருந்தோம். அந்த கட்டுரையை படிக்கவில்லை எனில்? இந்த கட்டுரையை படித்து விட்டு அதையும் பார்வையிடவும் . மேலும்,  எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் வெளியாகும் அனைத்து கட்டுரைகளை படிக்க, கீழே இருக்கும் பொத்தானை அமிழ்த்தவும். டிரான்சிஸ்டர் என்றால் என்ன? தமிழில் திரிதடையம் என அழைக்கப்படும் டிரான்சிஸ்டர்கள், அடிப்படையில் குறை கடத்திகளின் ஒரு மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு தான். இரண்டு PN  சந்திடையோடுகளை இணைத்தார் போல காணப்படும் டிரான்சிஸ்டர்கள் , அதற்கு உரிய… Read More »

செனார் டையோடுகளும் அவை குறித்து தகவல் துணுக்குகளும் |எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 5

கடந்த கட்டுரையில் பி என் சந்தி டையோடு குறித்து பார்த்திருந்தோம். என்னுடைய எலக்ட்ரானிக் தொடர்பான கட்டுரைகளை, நீங்கள் இதுவரை படிக்க வில்லை எனில் , கீழே வழங்கப்பட்டுள்ள பொத்தானை அமிழ்த்தி, கட்டுரைகளை பார்வையிடவும். இன்றைக்கு நாம் விவாதிக்க இருப்பது “செனார் டையோடு” குறித்து தான், நாம் சந்தி டையோடில் பார்த்தது போல, கிட்டத்தட்ட ஒரே விதத்தில் தான், செனார் டையோடும் செயல்படுகிறது. ஆனால், செனார் டையோடுக்கு என சில சிறப்பு பண்புகள் இருக்கின்றன! குறிப்பாக, எதிர் திசை… Read More »

PN சந்தி டையோடு – ஒரு அடிப்படை விளக்கம் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 4

கடந்த கட்டுரையில் குறைகடத்திகள் குறித்து விரிவாக விவாதித்து இருந்தோம். குறைக்கடத்திகளின் ஒரு மேம்படுத்தப்பட்ட வடிவம் தான்! PN சந்திடையோடு. அது குறித்து தான் இன்றைய கட்டுரையில் அடிப்படை தகவல்களை அறியவிருக்கிறோம். என்னுடைய எளிய எலக்ட்ரானிக்ஸ் குறித்த கட்டுரைகளை நீங்கள் படிக்கவில்லை! என்றால், அவற்றையும் இந்த கட்டுரைக்கு பிறகு பார்வையிடவும். அவற்றை பார்வையிட கீழே இருக்கும் பொத்தானை அமிழ்த்தவும்! பிஎன் சந்திடையோடு என்பது அடிப்படையில் முக்கோண வடிவில் குறியிடப்படுகிறது. பி என் சந்திடையோடு மின்சுற்று படம் கீழே வழங்கப்பட்டுள்ளது.… Read More »

குறை கடத்திகள் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 3

ஏற்கனவே மின்தேக்கிகள் மற்றும் மின்தடைகள் குறித்து இரண்டு கட்டுரைகளில் விவாதித்திருந்தேன். அந்தக் கட்டுரைகளை படிக்கவில்லை எனில், இந்த கட்டுரையை படித்துவிட்டு அதையும் பார்வையிடவும். சரி! இன்றைய தலைப்புக்கு வருவோமா? குறை கடத்திகள் அப்படி என்றால் என்ன? ஏன் அவை குறைவாக கடத்த வேண்டும்? என அடுக்கடுக்கான கேள்விகள் உங்களுக்குள் வரலாம். அடிப்படையில் திடப்பொருட்கள் மூன்று வகையில் வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வகைப்பாடானது, திடப் பொருட்களின் ஆற்றல் மட்ட கோட்பாட்டின்( Band theory of solids) அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. அவையாவன,… Read More »

யாவருக்குமான! எளிய எலக்ட்ரானிக்ஸ் – பகுதி 1

மின்தேக்கி(ஒரு அறிமுகம்):- யாவருக்குமான எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதிக்கு, உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன். இந்த தொடரின் முதல் கட்டுரை இது. இன்றைய தலைப்பில் நாம் காண இருப்பது, மின்தேக்கி ( capacitor)! பொதுவாக, மின்விசிறிகளுக்கு மட்டும் கப்பாசிட்டர்களை வாங்கியிருப்போம். உண்மையில், இவை எவ்வாறு இயங்குகின்றன? அது தொடர்பாக தான் அறிந்து கொள்ளவிருக்கிறோம். இயற்பியலில், “மின் ஆற்றலை தேக்கி வைக்க கூடிய பொருள் மின் தேக்கி என வரையறுக்கப்படுகிறது”. மின் தேக்கியின் அலகு farad(பராட்) ஆகும். 18 ஆம்… Read More »

யாவருக்குமான, எளிய   எலக்ட்ரானிக்ஸ் – அறிமுகம்

பொதுவாக, இயற்பியல் மற்றும் பொறியியல் படித்தவர்களுக்கு மட்டுமே, பரிச்சயமான ஒரு துறை தான் எலக்ட்ரானிக்ஸ். இதற்கு ஊடாகவே, பல நூற்றுக்கணக்கான பொறியியல் துறைகள் வலம் வருகின்றன. இன்றளவும் கூட பலருக்கும், எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான எளிய தகவல்களை கற்றுக்கொள்ள வேண்டும்! எனும் ஆர்வம் இருக்கும். பள்ளிப் பாட புத்தகங்களைக் கடந்து, எலக்ட்ரானிக்ஸ் தொடர்பாக படித்து தெரிந்து கொள்ள பல வழிகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அவற்றில் பலவும் ஆங்கில மொழியிலேயே கிடைக்கின்றன. கற்றுக் கொள்வதற்கு மொழி தடையாக… Read More »