Tag Archives: Free Software

கட்டற்ற மென்பொருள் உருவாக்கும் போது கவனிக்க வேண்டியது என்ன?

கட்டற்ற மென்பொருள் உருவாக்கும் போது ரொம்ப முக்கியமானது – அந்த மென்பொருளைப் பற்றி என்னென்ன தெரியும் என்று எழுதி வைப்பது. ஏன் இப்படி எழுதி வைக்க வேண்டும்? நாம் வேலை செய்யப்போவது கட்டற்ற மென்பொருள் அல்லவா! அதனால் பலரும் பங்களிக்க வருவார்கள். அப்படிப் பங்களிக்க வருபவர்களுக்கு உதவியாக, 1. மென்பொருள் என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது? 2. மென்பொருளை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? 3. யார் யாரெல்லாம் பங்களிப்பாளர்கள் ஆகியவற்றை எழுதிப் பதிந்து வைக்க வேண்டும். எழுதிப் பதிந்து… Read More »

கணித்தமிழ் வளர்ச்சியில் கட்டற்ற மென்பொருட்கள்

கணித்தமிழ் வளர்ச்சியில் கட்டற்ற மென்பொருட்கள் த.சீனிவாசன் tshrinivasan@gmail.com ஆங்கிலேயர் உருவாக்கிய கணிணியின் திரைகளில் 1990 களில் தமிழ் எழுத்துக்களைக் காட்டுவதற்கே பலரும் பல வகைகளில் பெரிதும் முயற்சி செய்தனர். பின் எழுத்துருக்கள், குறிமுறைகள், விசைப்பலகைகள் எனப்பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒருங்குறியின் வருகை தமிழை அனைத்து கணிணிகளிலும் கருவிகளிலும் காட்டுவதற்கு உதவியது. இது கணித்தமிழ் வளர்ச்சியின் முதல் நிலையே. இதுவே எழுத்துணரி (OCR), பேச்சு உணரி (Speech to Text), எழுத்து ஒலி மாற்றம் (Text to Speech),… Read More »

லிப்ரெஓபிஸ் 4.3: இன்று, அதினும் சிறந்த அலுவலகத் தொகுதி இல்லை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3, 2014 இன்று தமிழா! குழுவினர் லிப்ரெஓபிஸ் 4.3 இன் வெளியீட்டை அறிவித்தனர். உலகெங்கிலும் பரவிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்களின் உடனுழைப்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வந்த லிப்ரெஓபிஸ், இன்று எல்லாவிதத் தேவைகளையும் நிறைவு செய்யும் ஒரு மிகச் சிறந்த அலுவலகத் தொகுதியாக வளர்ந்திருக்கிறது. ‘லிப்ரெ’ என்றால் விடுதலை என்று பொருள்பட அமைந்துள்ள லிப்ரெஓபிஸ் ஒரு கட்டற்ற திறமூல மென்பொருள் ஆகும். அது முழுக்க முழுக்க தமிழில் அமைந்திருப்பது மட்டுமல்லாது, அனைவருக்கும் இலவசமாகவே… Read More »

தமிழ் மொழி சார்ந்த கட்டற்ற மென்பொருட்கள் – திட்டப்பணி

தமிழ் மொழி சார்ந்த கட்டற்ற மென்பொருட்களின் தேவை பெருமளவில் உள்ளது. அவற்றை உருவாக்கவும், நிரலாளர்களை ஊக்குவிக்கவும் Google Summer of Code போன்ற திட்டம் ஒன்றை செயல்படுத்தலாம். திட்டப்பணிகள் 1. தமிழ் மொழி சார்ந்த மென்பொருட்களை பட்டியலிடுதல். உங்களுக்கு தேவையான மென்பொருட்களின் பட்டியலை tshrinivasan@gmail.com க்கு அனுப்புக. அவை கணிணி, மொபைல் சார்ந்து இருக்கலாம். மொழியியல், வணிகம், விளையாட்டுகள் என எத்துறையிலும் இருக்கலாம். 2. வல்லுனர் குழு உருவாக்கம் பட்டியல் வெளியானதும், வல்லனர் குழு உருவாக்க வேண்டும்.… Read More »

திறவூற்று மென்பொருளுக்கு மாறும் தமிழக அரசு துறைகள்

மைக்ரோ சாப்ட் நிறுவனம், விண்டோஸ் எக்ஸ்பிக்கான தொழில் நுட்ப உதவியை (technical assistance) ஏப்ரல் 8 ஆம் தேதியுடன் நிறுத்தி விட்டது. இது குறித்த அறிவிப்பை ஜனவரியிலேயே மைக்ரேசாப்ட் வெளியிட்டு விட்டது. இதன் காரணமாக, தமிழ்நாட்டு அரசு துறைகளில் உள்ள அனைத்து கணினிகளிலும் திறவூற்று மென்பொருளான (open source software) பாஸ் லினக்ஸை (BOSS Linux) நிறுவ உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. “பாஸ் லினக்ஸை முக்கிய இயங்கு தளமாக நிறுவ பரிசீலியுங்கள்”, என தகவல் தொழில்நுட்ப துறையின்… Read More »