Tag Archives: freetamilebooks

FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி வெளியீட்டு விழா – காணொளிகள்

மே 12, 2019 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி வெளியீட்டு விழா – காணொளிகள்   FTE தமிழ் செயலி வெளியீட்டு விழா | கோ.செங்குட்டுவன் | இரா.இராமமூர்த்தி | இரவிகார்த்திகேயன்   D. Ravikumar speech | FTE தமிழ் செயலி வெளியீட்டு விழா | து.இரவிக்குமார்   புகைப்படங்கள் photos.app.goo.gl/7kgC7KpHsUvGuK467

கணியத்தில் பெண்களின் பங்களிப்பு

இன்றைய நிறுவனங்கள் பலவற்றிலும், தொடக்க நிலையில் ஆண்களுக்கு இணையான எண்ணிக்கையில் பெண்கள் இருந்தாலும், நான்கைந்து ஆண்டுகளுக்கு மேல் அனுபவமுள்ள பெண்களைக் கண்டறிய சிரமப்படுகின்றனர். அதிலும் பெண் தலைவர்களைக் கொண்ட நிறுவனங்கள் அத்தி பூத்தாற்போல அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன. இதற்குப் பல காரணிகள் இருக்கலாம். பள்ளிப்படிப்பை முடித்த பெண்கள் அனைவரும் கல்லூரிக்குச் செல்வதில்லை. கல்லூரியில் பட்டம் பெற்ற பெண்கள் அனைவரும் வேலைக்குச் செல்வதில்லை. வேலையில் சேர்கிற பெண்கள் அனைவரும், திருமணத்திற்குப் பின்னும், மக்கட்பேறுக்குப் பின்னரும் பணியைத் தொடர்வதில்லை. இதனை… Read More »

1000 நூல்களை ஒருங்குறி வடிவில் வாங்க நன்கொடை வேண்டுதல்

கணியம் அறக்கட்டளை   அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப,  தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதையும் அனைத்து அறிவுத் தொகுதிகளும்,  வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலையும் பணி இலக்காகக் கொண்டு கணியம்  அறக்கட்டளை செயற்பட்டு வருகின்றது. அதற்கிணங்க, இது வரை Kaniyam.com  தளத்தில் கடந்த  7 ஆண்டுகளாக, கட்டற்ற மென்பொருள் சார்ந்த கட்டுரைகளும், மின்னூல்களும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. FreeTamilEbooks.com தளத்தில் 5.5 ஆண்டுகளில் 500 மின்னூல்கள் இது வரை வெளியிடப்பட்டுள்ளன.  தமிழ்கூறு… Read More »