Tag Archives: Kaniyam software testing series

சாப்ட்வேர் டெஸ்டிங் – 15- வெள்ளைப் பெட்டி உத்திகள் -4

மாற்ற வழிச் சோதனை(Mutation Testing) அதென்ன மாற்ற வழிச் சோதனை? ஒரு சின்ன கதை வழியாக இதைப் புரிந்து கொள்வோம். அருள், வியன் – இருவரும் நண்பர்கள்; மென்பொறியாளர்கள். இருவரும் இணைந்து இணையத்தளம் ஒன்றை வடிவமைக்கிறார்கள். இணையத்தளத்தின் பின்னணி நிறம் சிவப்பாக இருந்தால் பளிச்சென்று எல்லோருக்கும் பிடித்தது போல் இருக்கும் என்று நினைக்கிறார் அருள். ஆனால், வியனுக்கோ வேறொரு எண்ணம் – பின்னணி நிறம் பச்சையாக இருந்தால், பார்ப்பதற்குப் பசுமையாக இருக்குமே என்பது வியனின் கருத்து. இருவரும்… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் -15 – வெள்ளைப் பெட்டி உத்திகள் – 3

இந்தப் பதிவில் நாம் பார்க்கவிருப்பது வழிச் சோதனை முறை தான்! 3) வழிச் சோதனை முறை (Path Coverage) ஒரு நிரலின் எல்லா வழிகளையும் சோதித்துப் பார்ப்பது தான் வழிச் சோதனை முறை ஆகும். நாம் இது வரை பார்த்த சோதனை முறைகளை எல்லாம் வைத்து சுழல் முறை  கடினத்தன்மை (‘Cyclomatic Complexity’)யைக் கண்டுபிடிக்கலாம்.  அதென்ன ‘சுழல் முறை கடினத்தன்மை’ – பேரே புதிதாக இருக்கிறது – ஒன்றுமே புரியவில்லை – என்றெல்லாம் நினைக்கத் தொடங்கி விடாதீர்கள். … Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் – 13 : டெஸ்ட் கேஸ் உத்திகள் – 2

அலைபேசி, கணினி, தொலைக்காட்சி, குளிரூட்டி என ஏராளமான மின்னணுக் கருவிகள் விற்கும் நிறுவனம் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு இரசீது கொடுக்கும் மென்பொருள் ஒன்றை நம்முடைய உருவாக்குநர்கள் உருவாக்கிக் கொடுப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் உருவாக்கும் நேரத்தில் சோதனையாளர்கள் டெஸ்ட் கேஸ்கள் எழுதத் தொடங்கியிருப்பார்கள். இங்கு நம்முடைய மென்பொருள் இரசீது கொடுக்கும் மென்பொருள் என்பதால், பல்வேறு வகைகளில் இரசீதுகளைச் சோதிக்க டெஸ்ட் கேஸ்கள் உருவாக்கப்பட வேண்டும். அதாவது, 10000 ரூபாய்க்கு மேல் பொருள் வாங்கினால் தள்ளுபடி கடன் அட்டை (கிரெடிட் கார்டு)… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் – 12 – டெஸ்ட் கேஸ் உத்திகள் – 1

தோழர், அடுத்த பதிவில் ‘பிழை வாழ்க்கை வட்டம்‘ பற்றிப் பார்ப்போம் என்று சென்ற பதிவில் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், அதற்கு முன் எனக்கு ஒரு சந்தேகம் – டெஸ்ட் கேஸ் எழுதுவது பற்றிப் (www.kaniyam.com/software-testing-8-write-test-case/) படித்து விட்டு, ஜிமெயிலில் பயனர் உருவாக்கும் பக்கத்திற்கு டெஸ்ட் கேஸ்களை எழுதலாம் என நினைத்து ஆர்வத்தில் டெஸ்ட் கேஸ் எழுதத் தொடங்கினேன். இன்னும் முடிக்க முடியவில்லை. எழுத எழுத டெஸ்ட் கேஸ்கள் வந்து கொண்டே இருக்கின்றன; நானும் பக்கம் பக்கமாக டெஸ்ட் கேஸ்கள்… Read More »