Tag Archives: mocking

ஓரலகு சோதனைகளில் போலிகளின் பயன்பாடு

ஓரலகு சோதனைகளில் சோதிக்கப்படும் வர்க்கத்தின் சார்புகளின் செயல்பாட்டை போலிகளைக்கொண்டு உருவகப்படுத்தலாம் என முந்தைய பதிவுகளில் அறிந்தோம். போலிகளைப் பயன்படுத்த சில கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. Java-வில், easymock, powermock, mockito, Ruby-யில் rspec-mocks, C#-க்கு Moq போன்றவை இவற்றுள் சில. ஒரு எடுத்துக்காட்டுடன் போலிகளின் பயன்பாட்டை பற்றி அறிய முயல்வோம். நாம் முந்தைய பதிவுகளில் பார்த்த உதாரணத்தில், திருப்பியமைக்கபட்ட சரத்தை ஒரு கோப்பில் சேமித்து வைக்கவேண்டும் என்ற புதிய தேவையை எடுத்துக்கொண்டு போலிகளைப் பயன்படுத்தி பார்க்கலாம். அதற்கான சோதனையை பின்வருமாறு… Read More »