அமேசான் இணையச்சேவைகள் – நேட் நுழைவாயில்கள்
தனிப்பட்ட துணைஇணையங்களிலுள்ள மேகக்கணினிகளுக்கு இணைய இணைப்பை வழங்குவதற்கு நேட் நுழைவாயில்கள் உதவுகின்றன. இணைய இணைப்பு கிடைத்துவிட்டால், பொதுத் துணைஇணையத்திற்கும் தனிப்பட்ட துணைஇணையத்திற்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடாதா? இணையத்திலிருக்கும் எவராலும், தனிப்பட்ட துணைஇணையத்தை நேட் நுழைவாயில் வழியாக அணுகமுடியுமா? இவற்றுக்கு விடைகாண்பதற்கு நேட் என்றால் என்னவென்று அறிந்துகொள்வது அவசியம். இணையமுகவரி மாற்றம் – Network Address Translation (NAT) சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், நேட் என்பது இடைத்தரகர் போல. தனிப்பட்ட துணைஇணையத்திலிருக்கும் மேகக்கணினியிலிருந்து துவங்கப்படும் இணையப் போக்குவரத்து, நேட் சாதனங்கள்… Read More »