Tag Archives: ODOC

[தினம் ஒரு கட்டளை] top செயல்பாடுகளை மேலிருந்து பார்

நாள் : 12 top இந்த கட்டளை பெரும்பாலான லினக்ஸ் இயங்குதளங்களில் வேலைசெய்யும் வேலைசெய்யவிலை எனில் அது வேறொரு பெயரில் கண்டிப்பாக இருக்கக்கூடும். இந்தக்கட்டளை நமக்கு கணினியில் தற்போது நடந்துகொண்டிருக்கும் செயல்பாடுகளை பற்றிய பல்வேறு வகையான விவரங்களை தெரிவிக்கும். அவ்வாறு தெரிவிக்கும் விவரங்களின் பட்டியல் பின்வருமாறு : 1. தற்போதைய நேரம். 2. கணினி இயங்கிக்கொண்டிருக்கும் நேரம். 3. கணினியில் உள்நுழைந்துள்ள பயனர்களின் எண்ணிக்கை. 4. கணிணியில் உள்ள சராசரி செயல்பாடுகளின் சுமை ( Average System… Read More »

[தினம் ஒரு கட்டளை] whoami நான் யார்?

நாள் 11: whoami கணிணியில் நாம் எந்த பயனராக உள்நுழைந்துள்ளோம் என அறிய இந்தக்கட்டளை பயன்படுகிறது. தொடரியல்: hariharan@kaniyam: ~/odoc  $ whoami நன்றி! ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர், Programmer Life – programmerlife1.wordpress.com

[தினம் ஒரு கட்டளை] mkdir கோப்புறை உருவாக்கு

10 வது நாள் நாம் பார்க்கவிருப்பது கோப்புறை உருவாக்கும் கட்டளை நாம் தொடர்புள்ள கோப்புகளை எல்லவற்றையும் சேர்த்து ஒரு கோப்புறை உருவாக்கி அதில் சேமிப்பது தேவைப்படும் நேரத்தில் அந்த கோப்பினை நாம் எளிதாக கண்டறிய வழிவகை செய்யும். mkdir – இந்த கட்டளை கோப்புறையை உருவாக்கு (make directory) எனும் ஆங்கில சொற்சுருக்கத்தை அதன் பெயராகக் கொண்டுள்ளது. கோப்புறையை உருவாக்க பயன்படும் இந்த கட்டளை சில கோப்புறைகளின் உள்ளே மூல பயனர் மட்டுமே இயக்க இயலும். அவ்வாறான… Read More »

[தினம் ஒரு கட்டளை] Date நாள்

9-வது நாளாகிய இன்று நாம் பார்க்கவிருக்கும் கட்டளை date பெயரிலேயே அது எதைப்பற்றியது என்று எளிதில் விளங்கும். date – நாள் இந்தக்கட்டளை இயங்குதளம் பராமரிக்கும் இன்றைய தேதி மற்றும் நேரத்தை (வன்பொருள் கடிகாரம் நேரத்தை மற்றொரு வடிவத்தில் பராமரிக்கும்.) காட்டும். தொடரியல் : hariharan@kaniyam: ~/odoc/ $ date மேற்கண்ட கட்டளை இன்றைய தேதி மற்றும் நேரத்தை காண்பிக்கிறது. date கட்டளை மூலம் காட்டப்படும் தேதியை நமக்கு தேவையானபடி வடிவமைப்பு செய்துகொள்ள முடியும். வடிவமைப்புக்காண குறியீடுகள்… Read More »

[தினம் ஒரு கட்டளை] PS செயல்பாட்டு நிழற்படம்

மற்றொரு தினம் ஒரு கட்டளை பதிவில் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 8 வது நாள் PS – Process Selection (Snapshot) லினக்ஸ் கணினியில் துவங்கியதிலிருந்து பல செயல்படுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கும். அந்த நிகழ்வுகளை ஒரு நிழற்படம் போல ஒருகனப் பொழுதில் இருப்பனவற்றை பட்டியலிட்டு காட்ட இந்த கட்டளை பயன்படுகிறது. தொடரியல்: hariharan@kaniyam : ~/odoc $ ps இந்த கட்டளை தற்போது கட்டளை இயக்கியில் இயக்கத்தில் இருக்கும் செயல்பாடுகளை காண்பிக்க பயன்படுகிறது. தெரிவுகள்: இந்த கட்டளைக்காண… Read More »

[தினம் ஒரு கட்டளை] GREP தேடுதல் வேட்டையின் கருவி

இன்று 7ம் நாள். நாம் பார்க்கவிருக்கும் கட்டளை GREP – Global Regular Expression Print ஒரு கோப்பிலோ அல்லது ஒரு திரையிலோ (ஒரு கட்டளையின் வெளியீடு) உள்ள உரையில் ஒரு உள்ளீடாக கொடுக்கப்பட்ட சொல் அல்லது காட்டுரு (pattern)க்கு பொருத்தமானவைகளை பட்டியலிடக்கூடிய ஒரு கட்டளை ஆகும். தொடரியல் : hariharan@kaniyam: ~/odoc $ grep “pattern” filename தெரிவுகள் : -i எனும் தெரிவு ஆங்கில பெரிய மற்றும் சிறிய எழுத்து வேறுபடுகளை புறக்கணித்து பொருத்தங்களை… Read More »

[தினம் ஒரு கட்டளை] Head and Tail தலையும் வாலும்

இன்று 6 வது நாள் வார இறுதியாக வருவதாலும், இரு எதிரெதிரான கட்டளைகளை புரிந்துகொள்வதற்கு எளிதாக இருப்பதாலும், இன்று  இரு கட்டளைகளைக் காண்போம். அதில் முதலாவதாக HEAD பற்றி காண்போம். head கட்டளை ஒரு உரை கோப்பின் முதல் சில வரிகளை காண்பிக்க பயன்படுகிறது. தானமைவு (default) அமைப்பாக 10 வரிகளை அளிக்கிறது. இருநிலை தரவுகளைக்கொண்ட கோப்புகளாக இருப்பின் அவற்றில் உள்ள உரை மற்றும் குறியீடுகளை காண்பிக்கிறது. பல கோப்புகளை உள்ளீடாக அளிக்கும் போது ஒவ்வொறு கோப்பின்… Read More »

[தினம் ஒரு கட்டளை] echo எதிரொலி

5 வது நாள் echo –  எதிரொலி ஒரு செய்தியையோ அல்லது ஒரு மாறியையோ  அனைத்து உயிர்ப்போடு இருக்கும் பயனர்களுக்கு அனுப்பவும் கோப்புகளை உருவாக்கவும். உள்ளடக்கத்தை மாற்றி எழுதவும் பயன்படுகிறது. தொடரியல்: hariharan@kaniyam:~/odoc $ echo ” Hi Everyone” Hi Everyone என்ற செய்தியை முதல்நிலை வெளியீட்டில் அனுப்பகிறது. hariharan@kaniyam:~/odoc $ echo $HOME $HOME எனும் மாறியில் உள்ள மதிப்பை வெளியிடுகிறது. hariharan@kaniyam:~/odoc $ echo “the text” > filename.extension the text… Read More »

[தினம் ஒரு கட்டளை] CAT ஒன்றிணை.

4 வது நாளில் நாம் காண இருக்கும் கட்டளை CAT cat என்றவுடன் பூனை என்று எண்ணிவிடாதீர்கள். concatnate என்பதன் சுருக்கமே அது. தொடரியல்: hariharan@kaniyam :~/odoc $ cat ./bashrc ஒரே ஒரு கோப்புடன் இந்த கட்டளையை பயன்படுத்தும்போது கோப்பின் உள்ளடக்கத்தை  முனையத்தில் காட்டும். hariharan@kaniyam:~/odoc $ cat video.mp4 அப்படியெனில் படம் அல்லது காணொலிகளை இந்த கட்டளை பயன்படுத்தி படித்தால் முனையத்தில் படத்தின்(காணொளியின்) இருநிலை மதிப்பின் உரைவடிவம் வெளியிடப்படும். hariharan@kaniyam:~/odoc $ cat file1… Read More »

[தினம் ஒரு கட்டளை] LS பட்டியலிடுவோமா ?

தினம் ஒரு கட்டளை பகுதியில் கணியம் வாசகர்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி. இன்று மூன்றாவது நாளில் நாம் காண இருப்பது LS – பட்டியல் ls கட்டளையை நாம் பட்டியல் (list) எனப் பொருள் கொள்ளலாம். இந்தக்கட்டளை கோப்புறைகளையும் கோப்புகளையும் பட்டியலிட பயன்படுகிறது. எந்த ஒரு கோப்புறையின் பாதையையும் கொடுக்காமல் இக்கட்டளையை பயன்படுத்தும்போது தற்போது நாம் இருக்கும் கோப்புறையில் உள்ளவற்றை பட்டியலிடுகிறது. தொடரியல்: hariharan@kaniyam: ~/odoc $ ls hariharan@kaniyam: ~/odoc $ sudo ls . நீங்கள்… Read More »