நாள் 14: ping
ping: இந்தகட்டளை இரு கணிணிகள் சரிவர இணைய இணைப்பில் இருக்கின்றனவா என்பதை சோதிக்க பயன்படுகிறது.இந்த பிங் கட்டளை கொடுக்கப்பட்ட கணினியின் இணையப் பெயரையும் (hostname) அல்லது இணைய நெறிமுறை முகவரி (ip address)வைத்து ICMP துணுக்குகளை கொடுக்கப்பட்ட முடிவில்லாமல் இணைய முகவரிக்கு அனுப்பும்.
தொடரியல்:
hariharan@kaniyam : ~/odoc $ ping [ipaddress/websiteaddress]
hariharan@kaniyam : ~/odoc $ ping google.com
hariharan@kaniyam : ~/odoc $ ping 8.8.8.8
தெரிவுகள்:
-c: இந்த தெரிவு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ICMP துணுக்குகளை மட்டும் அனுப்பிவிட்டு வெளியேறும்.
(எ.கா) ping -c [number] [ipaddress/websiteaddress]
hariharan@kaniyam : ~/odoc $ ping -c 4 8.8.8.8
நன்றி !
ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com