Tag Archives: PHP என்றால் என்ன?

PHP தமிழில் பகுதி 15: அடைவுகளுடன் பணியாற்றுதல் (Working with Directories)

கோப்புகளைப் கையாளுவது எப்படி? என்று முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்த பகுதியில் PHPயில் அடைவுகளை கையாளுவது எப்படி? என்று பார்ப்போம். புதிதாக ஒரு அடைவை உருவாக்குதல், ஏற்கனவே இருக்கும் ஒரு அடைவை நீக்குதல், அடைவுகளுக்குள் இருக்கும் கோப்புகளை பார்வையிடுதல் என நிறைய function கள் PHP யில் இருக்கின்றன. புதிதாக அடைவுகளை உருவாக்குதல் (Creating Directories) mkdir() function ஐப் பயன்படுத்தி நாம் புதிதாக ஒரு அடைவை உருவாக்கலாம். தற்போது இருக்கும் அடைவுக்குள்ளே புதிதாக ஒரு அடைவை… Read More »

PHP தமிழில் பகுதி 12: Arrays

PHP Arrays பல மாறிகளை (variable) ஒன்றாக இணைத்து ஒரு குழுவாக மாற்றி அதை ஒற்றை மாறியின் (variable) மூலமாக அணுகுவதற்கு வழி எற்படுத்தி தருகிறது. Array யானது ஒருமுறை உருவாக்கப்பட்டுவிட்டால் அதன் பிறகு அதில் நம்மால் உருப்படிகளைச் (items) சேர்க்க, நீக்க, மாற்ற, வரிசைப்படுத்த முடியும். ஒரு Array இருக்கும் உருப்படிகள் எந்த மாறி வகையினைச் சேர்ந்ததாக இருக்கலாம். Array யில் உருப்படிகள் அனைத்தும் ஒரே வகையினைச் சேர்ந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும்… Read More »

PHP தமிழில் பகுதி 11: Functions

11. Functions (செயல்கூறு) நிரல் எழுதுவதில் முறைகள் உள்ளது ஒன்று நீளமாக எழுதுவது மற்றொன்று சிறு சிறு துண்டுகளாக பிரித்து எழுதிப் பிறகு தேவையான இடத்தில் சிறிய பகுதிகளை பயன்படுத்திக் கொள்வது அல்லது சிறிய பகுதிகள் அனைத்தையும் சேர்த்து பெரிய நிரலாக மாற்றிக் கொள்வது. Function (செய்லகூறு) என்றால் என்ன? PHP யின் உண்மையான பலமே அதனுடைய செயல்கூறில்தான் இருக்கிறது. PHP யில் 1000 build-in functions மேலும் உள்ளது. செயல்கூறு(function) என்பது கூற்றுகளின்(statements) தொகுதி ஆகும்.… Read More »

PHP தமிழில் – 6 மாறிலிகள் (Variables)

பகுதி – 6 PHP மாறிலிகள் (Variables) மாறிலிகள் உருவாக்குதல் மற்றும் பெயரிடுதல் மாறிலிகளுக்கு மதிப்புகள் கொடுத்தல் மாறிலிகளின் மதிப்புகளை அணுகுதல் மாறிலிகளின் மதிப்புகளை மாற்றுதல் மாறிலி set செய்யப்பட்டுள்ளதா என சோதனை செய்தல் மாறிலிகளை புரிந்து கொள்ளுதல் முழு எண் மாறிலி வகை (Integer Variable Type) தசம் எண் மாறிலி வகை (Float Variable Type) இரும மாறிலி வகை (Boolean Variable Type) எழுத்து மாறிலி (String Variable) எழுத்துக்களை எழுதுதல் மற்றும்… Read More »

PHP தமிழில் – 3 PHP எப்படி வேலை செய்கிறது?

பகுதி – 1 PHP – இன் வரலாறு PHP Script உருவாக்குதல் PHP பிரபலமானது எப்படி? பகுதி – 2 PHP – ஓர் அறிமுகம் பகுதி – 3 PHP எப்படி வேலை செய்கிறது?   PHP எப்படி வேலை செய்கிறது? பயனர் தன்னுடைய கணினியில் இருக்கும் இணைய உலாவியைத் திறந்து, உலாவியினுடைய முகவரிப்பட்டையில் இணையதளத்தின் முகவரியை கொடுத்து இயக்கும் போது, உலாவி வலைப்பக்கத்தின் பிரதியை கேட்டு  இணைய வழங்கிக்கு கோரிக்கை அனுப்புகிறது. இணைய… Read More »

PHP தமிழில் – 2 ஓர் அறிமுகம்

  பொருளடக்கம் பகுதி – 1 PHP – இன் வரலாறு PHP Script உருவாக்குதல் PHP பிரபலமானது எப்படி? பகுதி – 2 PHP – ஓர் அறிமுகம் PHP என்றால் என்ன? PHP என்பது ஒரு Server Side Scripting language. எளிமையாக சொல்ல வேண்டுமானால் உங்களுக்கு ஒரு புத்தகம் தேவைப்படுகிறது. அதை இணையமூலம் வாங்குவதற்காக ஏதோ ஒரு  பதிப்பகத்தின் இணையதளத்திற்கு செல்கிறீர்கள். அந்த பதிப்பகத்தின் இணையதளம் PHP மூலம் உருவாக்கப்பட்டதெனில். அந்த இணைதளத்தில்… Read More »