Tag Archives: python regex in tamil

பைத்தான் ரிஜெக்ஸ் – 6 – வார்த்தை, வாக்கிய எண்ணிக்கை

இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது, ஒரு வரியில் எத்தனை வார்த்தைகள் இருக்கின்றன என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது, ஒரு பத்தியில் எத்தனை வாக்கியங்கள் இருக்கின்றன ஆகியனவற்றைத் தான்! ரிஜெக்சுக்குப் போவதற்கு முன்பு, சில அடிப்படை கருத்துகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்” – இந்த வாக்கியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் எத்தனை வார்த்தைகள் இருக்கின்றன? நான்கு! எப்படிச் சொன்னோம்? ஒரு வார்த்தையையும் இன்னொரு வார்த்தையையும் எப்படிப் பிரித்தோம்? இடைவெளி இருப்பதைப் பார்த்தோம்!… Read More »

பைத்தான் ரிஜெக்ஸ் 5 – கடவுச்சொல்லைக் கண்டுபிடிப்பது எப்படி?

கடவுச்சொல் எழுதுவதில் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளங்களில் கொடுத்திருப்பார்கள். சிலர் எட்டெழுத்துகளாவது குறைந்தது இருக்க வேண்டும் என்பார்கள். சிலர், கட்டாயம் எண்கள் கலந்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள். சிலர், பெரிய எழுத்தும் சின்ன எழுத்தும் கலந்திருக்க வேண்டும் என்பார்கள். சிலர் மேலே சொன்ன எல்லாமே இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். இவற்றிற்குரிய பைத்தான் நிரல் எழுதுவது எப்படி? ரிஜெக்சில் அதை எப்படிச் செய்வது? பார்ப்போமா! முதலில், கடவுச்சொல்லுக்குரிய கட்டுப்பாடுகளை வகைப்படுத்தி விடுவோம். 1. குறைந்தது எட்டு எழுத்துகள். if… Read More »

பைத்தான் ரிஜெக்ஸ் – 4 – தேதியை உறுதிப்படுத்துவது எப்படி?

இதற்கு முன்பு, தொலைபேசி எண்கள், அலைபேசி எண்கள் ஆகியவற்றை எப்படிச் சோதிப்பது என்று பார்த்துவிட்டோம். இப்போது நம் முன்னால் உள்ள கேள்வி – ஒரு தேதி – சரியான தேதி என்று தான் பைத்தான் ரிஜெக்ஸ் மூலம் எப்படி உறுதிப்படுத்துவது என்பதைத் தான்!  தேதியை எப்படி எழுதுவோம் – பொதுவாக நாள்/மாதம்/ஆண்டு என்பதை, dd/mm/yyyy எனும் பொது வடிவத்தில் எழுதுவோம் அல்லவா! அதாவது முதலில் இரண்டு எண்கள்(தேதிக்கு), பிறகு இரண்டு எண்கள்(மாதத்திற்கு), பிறகு நான்கு எண்கள்(ஆண்டுக்கு) என்பது… Read More »

பைத்தான் – ரிஜெக்ஸ் – 2 – தொலைபேசி எண்களை எப்படிச் சோதிப்பது?

முந்தைய பதிவில் அலைபேசி எண்கள் பார்த்தோம் அல்லவா! இப்போது நாம் ரிஜெக்ஸ் முறையில் தொலைபேசி எண்களைச் சோதிப்பது எப்படி என்று பார்ப்போமா! முதலில் சில தொலைபேசி எண்களை எழுதுவோம். கீழ் உள்ள எண்களைப் பாருங்கள். 9144-22590000 – சென்னை எண் 91462-2521234 – திருநெல்வேலி எண் 9140-23456789 – ஐதராபாத் எண் 914562-212121 – சிவகாசி எண் இந்த எண்களில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. STD என்று சொல்லப்படும் பகுதிக் குறியீடு, பிறகு தொலைபேசி எண். இந்த… Read More »