Tag Archives: sudo

அமேசான் இணையச்சேவைகள் – EC2 – மேகத்திலிருந்து ஒரு வலைத்துளி

சென்ற பதிவில் நாம் உருவாக்கிய புதிய மேகக்கணினியின் நிலையென்ன என்பதை அமேசான் தளத்திற்குள் சென்று, EC2 பிரிவின் முகப்புப்பக்கத்தில் காணலாம். நமது கணினி நல்லநிலையில் ஓடிக்கொண்டிருக்கிறது என காண்கிறோம். இப்பதிவில், அக்கணினிக்குள் நுழைந்து, ஒரு சிறிய வலைப்பக்கத்தை இயக்கிப்பார்க்கலாம். மேகக்கணினிக்குள் நுழைதல்: லினக்ஸ், யுனிக்ஸ் குடும்பக்கணினிகளில் பிறகணினிகளுக்குள் பாதுகாப்பான முறையில் நுழைந்து, வேலைசெய்வதற்கு SSH (Secure SHell) என்ற நெறிமுறையைப் பயன்படுத்தலாம். இருகணினிகளுக்கிடையே பாதுகாப்பாக, தரவுகளைப் பரிமாறிக்கொள்வதற்கான வழிகளில் திறப்பிணைகளும் ஒன்று. மேகக்கணினியை உருவாக்கும்போது, கடைசிப்படிநிலையில் ஒரு… Read More »