Tag Archives: swecha

உங்களுக்கு Dark Pattern பற்றித் தெரியுமா? ஸ்வேச்சா – நாள் 7

இன்று காலை VS Codium மென்பொருள் நிறுவல் இருந்தது. VS Codium என்பது VS Code மென்பொருளின் கட்டற்ற வடிவம் என்பதை விரிவாகச் சொன்னார்கள். அதைத் தொடர்ந்து HTML, CSS வகுப்புகளும் நடந்தன. பிற்பகலில் இரஞ்சித் ராஜ் – தரவு, தரவின் முக்கியத்துவம், தரவுகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றிப் பேசினார். இந்திய அரசின் தரவுகளைப் பார்க்க data.gov.in/ போய்ப் பார்க்கலாம் என்று காண்பித்தார். லிங்கிடுஇன் போன்ற தளங்கள் எப்படி நம்முடைய தரவுகளைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள், அதற்கு… Read More »

ஸ்வேச்சா நாள் 6 – கிட்லேப் ஓர் அறிமுகம்

திட்டப்பணி செய்வதற்குப் பதிப்பு மேலாண்மை கருவியின் தேவை என்ன? திட்டப்பணி செய்ய ஒரு குழுவை உருவாக்கிவிட்டோம். பிறகு ஒவ்வொருவரும் திட்டப்பணியில் வேலை செய்யத் தொடங்குவோம் அல்லவா! இவற்றை எல்லாம் எப்படி ஒருங்கிணைப்பது? ஒவ்வொருவரும் தனித்தனி வேலை செய்வதை ஒருங்கிணைப்பதே பெரிய வேலை. சில சமயங்களில் ஒரே வேலையில் (அல்லது ஒரு நிரலில்) பலரும் இணைந்து வேலை செய்ய வேண்டியது வரும் அல்லவா! அதையெல்லாம் ஒருங்கிணைக்கும் ஓரிடம் தான் பதிப்பு மேலாண்மை செயலி(கருவி)யின் வேலை. கோப்புகளில்(நிரல்களில்) உள்ள மாற்றங்களைப்… Read More »

ஸ்வேச்சா நாள் 5: சமூகத்திற்குப் பயன்படும் திட்டப்பணிகள்

இன்று ஸ்வேச்சா பயிற்சிப்பட்டறையின் ஐந்தாவது நாள். நேற்று தனித்தனி அணிகளை உருவாக்கினார்கள். நான் இருப்பது பதினோராவது அணி. அதற்கெனத் தனியே கட்செவி(வாட்சப்) குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. அணி உறுப்பினர்களாகவே தனியாக இணைந்து இந்தக் குழுவை உருவாக்கியிருக்கிறார்கள். காணொளி இயங்கலையில் பிக் புளூபட்டன், விவாதங்களுக்கு discuss.swecha.org, படிப்பதற்கு மூடுல்(moodle) என எல்லாவற்றிலும் கட்டற்ற மென்பொருட்களை எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் செய்து வரும் ஸ்வேச்சா வாட்சப் குழு உருவாக்கச் சொல்லவில்லை. இருந்தாலும் உறுப்பினர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு கட்செவிக் குழுவை… Read More »

ஸ்வேச்சா – இணையவழி பயிற்சிப் பட்டறை – நாள் 3

ஸ்வேச்சாவின் ஆறு வார இணையவழி பயிற்சிப் பட்டறை நீங்கள் அறிந்ததே!  (தெரியாதவர்கள் swecha.org போய்ப் பார்க்கலாம்!) இன்று அப்பயிற்சிப் பட்டறையின் மூன்றாவது நாள்.  அதன் குறிப்புகளை உங்களுடன் இங்கே பகிர்கிறேன். முதல் 45 நிமிடங்கள் நேற்றைய லினக்ஸ் மேலாண்மையை மீண்டும் சுருக்கமாகச் செய்து காட்டுவதாக இருந்தது. பிறகு ஹரிசாய்,பவபுத்தி(Bhavabhuthi) இருவரும் மென்பொருள் வாழ்க்கை வட்டம் (SDLC) பற்றி முக்கால் மணிநேரம் சொல்லிக் கொடுத்தார்கள். ஒவ்வொரு மணிநேரத்திற்கும் கால் மணிநேரம் இடைவெளி கொடுத்து ஒருங்கிணைத்திருந்தார்கள். இந்த முறை மிகச்… Read More »