Tag Archives: tamil

கட்டற்ற திறவூற்றுச் சொற்பிழைத்திருத்தியும் இலக்கணப்பிழைத்திருத்தியும்: வளர்ச்சியும் சவால்களும்

கட்டுரையாளர்கள் : சி . ம . இளந்தமிழ் & வே . இளஞ்செழியன், மலேசியா tamiliam@gmail.com & elantamil@gmail.com இக்கட்டுரை சொற்பிழைகளையும் இலக்கப்பிழைகளையும் திருத்தும் ஒரு கட்டற்ற மென்பொருளை உருவாக்குவதற்காகத் தமிழ்ச் சமூகம் கடந்த பத்து ஆண்டுகளாக மேற்கொண்டுவரும் பணிகளை எடுத்துச் சொல்லும் . அடுத்து , 2011 ஆம் ஆண்டு ஒரு முன்னோடி பதிப்பாக வெளியிடப்பட்ட தமிழ் ‘ ஹன்ஸ்பெல் ‘ சொற்பிழைத்திருத்தி எவ்வாறு எழுத்துப்பிழைகளைக் கண்டுபிடிக்கிறது என்பது விளக்கப்படும் . மூன்றாவதாக ,… Read More »

லிப்ரெஓபிஸ் 4.3: இன்று, அதினும் சிறந்த அலுவலகத் தொகுதி இல்லை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3, 2014 இன்று தமிழா! குழுவினர் லிப்ரெஓபிஸ் 4.3 இன் வெளியீட்டை அறிவித்தனர். உலகெங்கிலும் பரவிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்களின் உடனுழைப்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வந்த லிப்ரெஓபிஸ், இன்று எல்லாவிதத் தேவைகளையும் நிறைவு செய்யும் ஒரு மிகச் சிறந்த அலுவலகத் தொகுதியாக வளர்ந்திருக்கிறது. ‘லிப்ரெ’ என்றால் விடுதலை என்று பொருள்பட அமைந்துள்ள லிப்ரெஓபிஸ் ஒரு கட்டற்ற திறமூல மென்பொருள் ஆகும். அது முழுக்க முழுக்க தமிழில் அமைந்திருப்பது மட்டுமல்லாது, அனைவருக்கும் இலவசமாகவே… Read More »

லிப்ரெஓபிஸ் (Libre Office) முன்னேற்றம் – தமிழாக்கம்

நண்பரே, வணக்கம். கட்டற்றத் திறவுற்று மென்பொருட்களில் லிப்ரெஓபிஸ் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. அதனைத் தமிழாக்கும் பணியை 2011 ஆண்டு முதற்கொண்டு நாம் மெற்கொண்டு வருகின்றோம். கடந்த ஆண்டு லிப்ரெஓபிஸ் முழுமையாக தமிழாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இவ்வாண்டு, லிப்ரெஓபிஸின் புதிய வெளியீடுகள் வெளிவந்துள்ளன. அடுத்த மாதம் 22 ஆம் திகதி லிப்ரெஓபிஸ் 4.3 வெளிவரவிருக்கிறது. அப்பதிப்பும் முழுமையாக தமிழில் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். இதுவரை அதன் ஒரு இலட்சம் சொற்களில் 88 ஆயிரத்தை தமிழுக்கு மொழிபெயர்த்து விட்டோம்.… Read More »

தமிழ் மொழி சார்ந்த கட்டற்ற மென்பொருட்கள் – திட்டப்பணி

தமிழ் மொழி சார்ந்த கட்டற்ற மென்பொருட்களின் தேவை பெருமளவில் உள்ளது. அவற்றை உருவாக்கவும், நிரலாளர்களை ஊக்குவிக்கவும் Google Summer of Code போன்ற திட்டம் ஒன்றை செயல்படுத்தலாம். திட்டப்பணிகள் 1. தமிழ் மொழி சார்ந்த மென்பொருட்களை பட்டியலிடுதல். உங்களுக்கு தேவையான மென்பொருட்களின் பட்டியலை tshrinivasan@gmail.com க்கு அனுப்புக. அவை கணிணி, மொபைல் சார்ந்து இருக்கலாம். மொழியியல், வணிகம், விளையாட்டுகள் என எத்துறையிலும் இருக்கலாம். 2. வல்லுனர் குழு உருவாக்கம் பட்டியல் வெளியானதும், வல்லனர் குழு உருவாக்க வேண்டும்.… Read More »