எளிய தமிழில் Electric Vehicles 3. திறன் பொறித்தொடர்
பெட்ரோல் டீசல் ஊர்திகளிலிருந்து மின்னூர்திகளில் நாம் செய்யும் மிகப்பெரிய மாற்றம் திறன் பொறித்தொடரில்தான் (Powertrain). இது தவிர பெட்ரோல் டீசல் கொள்கலத்துக்குப் பதிலாக இழுவை மின்கலம் (traction battery) இருக்கும். மற்றபடி இரண்டு ஊர்திகளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆகவே இவை இரண்டிலும் திறன் பொறித்தொடர்களில் உள்ள மாறுபாடுகளைப்பற்றி முதலில் பார்ப்போம். பெட்ரோல் டீசல் ஊர்திகளின் திறன் பொறித்தொடர் பெட்ரோல் டீசல் ஊர்திகளில் தொடர்ச்சியாக உள்ள எஞ்சின், உரசிணைப்பி (clutch), பல்லிணைப்பெட்டி (transmission or gear box),… Read More »