Tag Archives: tossconf

தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு 2023

வணக்கம். ஆண்டுதோறும் உலகெங்கும் மென்பொருள் விடுதலை விழா செப்டம்பர் 16 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழகத்தில் சென்னை, புதுவை, விழுப்புரம் ஆகிய ஊர்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. சென்ற ஆண்டு முதல், மென்பொருள் விடுதலை விழாவை, சென்னையில் பல்வேறு கட்டற்ற மென்பொருள் சார்ந்த அமைப்புகள் இணைந்து‘தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு’ என நடத்தி வருகிறோம். இதில், பல்வேறு இணைய உரைகள், ஒரு நாள் நேரடி மாநாடு, பல்வேறு பயிற்சிப் பட்டறைகள் என செப்டம்பர் மாதம் முழுதுமே… Read More »

இரண்டாவது தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு – செப் 24,25 – இலயோலா கல்லூரி

விடுதலை – இதை விரும்பாதோர் யார்? விடுதலை விதையைக் கணினிக்குள் விதைக்கும் ஓர் ஒப்பற்ற திருவிழாவே இம்மாநாடு! கட்டற்ற மென்பொருளை மகளிர் முன்னணியிலும் ஆடவர் பின்னணியிலும் நின்று களம் காணும் கணித்தமிழ் மாநாடு! “எது செய்க நாட்டுக்கே எனத் துடித்த சிங்கமே! இன்றே, இன்னே புது நாளை உண்டாக்கித் தமிழ் காப்பாய் புத்துணர்வைக் கொணர்வாய் இங்கே!” என்னும் பாவேந்தரின் வைர வரிகளை வாழ்வாக்கும் ஒரு நல் தொடக்கம்! கட்டற்ற கணித்தமிழை விரும்பும் அத்துணை நல்லுள்ளங்களும் இதில் அடக்கம்!… Read More »