Tag Archives: women

கணியத்தில் பெண்களின் பங்களிப்பு

இன்றைய நிறுவனங்கள் பலவற்றிலும், தொடக்க நிலையில் ஆண்களுக்கு இணையான எண்ணிக்கையில் பெண்கள் இருந்தாலும், நான்கைந்து ஆண்டுகளுக்கு மேல் அனுபவமுள்ள பெண்களைக் கண்டறிய சிரமப்படுகின்றனர். அதிலும் பெண் தலைவர்களைக் கொண்ட நிறுவனங்கள் அத்தி பூத்தாற்போல அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன. இதற்குப் பல காரணிகள் இருக்கலாம். பள்ளிப்படிப்பை முடித்த பெண்கள் அனைவரும் கல்லூரிக்குச் செல்வதில்லை. கல்லூரியில் பட்டம் பெற்ற பெண்கள் அனைவரும் வேலைக்குச் செல்வதில்லை. வேலையில் சேர்கிற பெண்கள் அனைவரும், திருமணத்திற்குப் பின்னும், மக்கட்பேறுக்குப் பின்னரும் பணியைத் தொடர்வதில்லை. இதனை… Read More »