தமிழ் மொழி சார்ந்த கட்டற்ற மென்பொருட்கள் – திட்டப்பணி

தமிழ் மொழி சார்ந்த கட்டற்ற மென்பொருட்களின் தேவை பெருமளவில் உள்ளது. அவற்றை உருவாக்கவும், நிரலாளர்களை ஊக்குவிக்கவும் Google Summer of Code போன்ற திட்டம் ஒன்றை செயல்படுத்தலாம்.

PKMP

திட்டப்பணிகள்

1. தமிழ் மொழி சார்ந்த மென்பொருட்களை பட்டியலிடுதல்.

உங்களுக்கு தேவையான மென்பொருட்களின் பட்டியலை tshrinivasan@gmail.com க்கு அனுப்புக.
அவை கணிணி, மொபைல் சார்ந்து இருக்கலாம். மொழியியல், வணிகம், விளையாட்டுகள் என எத்துறையிலும் இருக்கலாம்.

2. வல்லுனர் குழு உருவாக்கம்

பட்டியல் வெளியானதும், வல்லனர் குழு உருவாக்க வேண்டும். அவர்கள் தமிழ் மொழி அறிஞராய் இருத்தல் வேண்டும்.
நிரலாளர்கள் தம் சந்தேகங்களை இவர்களிடம் கேட்டு தெளியலாம்.

3. நிரலாளர்களுக்கான அழைப்பு

உலகெங்கும் உள்ள தமிழ் அறிந்த நிரலாளர்கள் கலந்து கொள்ளலாம்.
பட்டியலில் இருந்து ஒன்று அல்லது மேற்பட்ட மென்பொருளை செய்ய ஆர்வம் தெரிவிக்கலாம்.
தனியாகவோ, குழுவாகவோ செய்யலாம்.

3-4 மாத காலத்திற்குள் மென்பொருளை உருவாக்க வேண்டும்.
கட்டற்ற மென்பொருளாக, முதல் நாளில் இருந்தே, மூல நிரலை github.com ல் பகிர வேண்டும்.
ஒவ்வொரு வாரமும், தமது செயல்கள் பற்றி வலைப் பதிவு எழுதி அறிவிக்க வேண்டும்.

4. முடிவுகள்

4 மாத முடிவில், தயாரான மென்பொருட்களை ஆய்வு செய்து, முடிவுகளை அறிவிக்கலாம்.

5. பரிசுகள்

இந்த திட்டத்திற்கு பரிசு தரக்கூடிய புரவலர்களை கண்டறிந்து, அணுகி, பணம் திரட்ட வேண்டும்.
நிதிக்குழு உருவாக்க வேண்டும்.
நன்கு உருவான மென்பொருள் சார்ந்த குழுவினருக்கு பரிசு தருதல்.

82052.gif

இத்திட்டத்திற்கு விரைவில் பெயர் வைக்கலாம்.
தகுந்த பெயர் தந்து உதவுக.

திட்டத்தில் சேர்ந்து உதவ விரும்பினால், எனக்கு எழுதுக. tshrinivasan@gmail.com

திட்டம் பற்றிய உங்கள் கருத்துகளையும் எழுதுக.

நன்றி.

%d bloggers like this: