TiddlyWiki என்பது ஒரு பயன்பாடு அன்று ஆயினும் HTML . JavaScript ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட பெரியஅளவிலான 2எம்பி கொள்ளளவுகொண்டதொரு இணையபக்கமாகும் நாம் நம்முடைய இணையஉலாவியை கொண்டு இதில் திருத்தம் செய்து கொண்டு தனியானதொரு கோப்பாக மறுபெயரிட்டு சேமித்து கொள்ளமுடியும் இதனை கொண்டு குறிப்பெடுத்திடலாம் ,செயல்திட்டத்தை உருவாக்கிகொள்ளலாம் இணைய இதழ்களை வெளியிடலாம் நாம் விரும்பும் இணையபக்கத்தை bookmarkசெய்து சேமித்து கொள்ளலாம் நம்முடைய புதிய இணையபக்கத்தை வெளியிடலாம் நம்முடைய வலைபூவை வெளியிடலாம் என்றவாறான பல்வேறு பணிகளை இதில் செயல்படுத்தி பயன்பெறமுடியும் இது கையடக்கமானது சிறிய Nextcloud எனும் கோப்பகமாக வைத்து கொள்ளலாம் கணினிகளுக்கிடையேயும் கைபேசி சாதனங்களுக்கிடையேயும் பகிர்ந்து கொள்ளலாம்அல்லது யூஎஸ்பி ட்ரைவில் சேமித்து எடுத்து செல்லலாம்
இதனை பயன்படுத்தி கொள்வதற்காக www.tiddlywiki.com/ எனும் இணையபக்கத்திற்கு சென்று empty.html எனும் பெயரிலுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து கொள்க பின்னர் அந்த கோப்பிற்கு நாம் விரும்பிய பெயரினை இட்டுகொள்க அதன்பிறகு நம்முடைய இணையஉலாவியில் புதிய பெயருடைய இந்த கோப்பினை திறந்து கொள்க இதனுடைய திரையின் மேலே வலதுபுறமூலையிலுள்ள pencil போன்றுள்ள உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து தேவையானவாறு விவரங்களை உள்ளீடுசெய்து கொள்க checkmark போன்றுள்ள உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்துTiddlyWikiஐ சேமித்து கொள்க இவ்வாறு சேமித்திடும்போது நாம் விரும்பும் இடத்தில் சேமித்திடுவதற்காக நாம் குரோம் எனும் இணைய உலாவியைபயன்படுத்தி கொண்டிருந்தால் Settings,என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Settings,எனும் பக்கத்தில் Show advanced settings என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் Ask where to save each file before downloading எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக நாம் ஃபயர்ஃபாக்ஸ் எனும் இணைய உலாவியைபயன்படுத்தி கொண்டிருந்தால் திரையின் மேலே வலதுபுறமூலையிலுள்ள Options எனும் முப்புள்ளியை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பட்டியில் Downloads எனும் வாய்ப்பையும் பின்னர் Always ask you where to save filesஎனும் வாய்ப்பினையும் தெரிவுசெய்து சொடுக்குக
குறிப்பெடுப்பதற்காக இந்த TiddlyWiki இல் + எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் புதிய tiddlerஎனும் திரை நாம் குறிப்பெடுப்பதற்காக தோன்றிடும் அதில்Notes for netbooks essay.என்றவாறு பெயரிட்டு குறிச்சொல்லை Tag nameஎனும் புலத்தில் உள்ளீடுசெய்து கொண்டு குறிப்புகளை உள்ளீடுசெய்திடலாம் வடிவமைப்பு செய்வதற்கு TiddlyWiki’s markup அல்லது formatting toolbarஐயும்சேமிப்பதற்காக checkmark எனும் உருவப்பொத்தானையும் பயன்படுத்தி கொள்க
புதிய இணைய இதழ்களை வெளியிடுவதற்காக Tools எனும் தாவிபொத்தானின் திரையில் New journalஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் கருவிகளின் பட்டியில் Create a new journal tiddler எனும் கருவியை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக தொடர்ந்து நம்முடைய இதழ்களை உருவாக்கிடும் பணியை செயல்படுத்திடுக மேலும் வசதிகளை பெறுவதற்காக இதனுடைய கூடுதல்விரிவாக்கம் (plugins) என்பதை பயன்படுத்தி கொள்க குறிப்புகள் செயல்திட்டங்கள் இணையஇதழ்கள் ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து தொகுப்பான TiddlyWikiஎனும் கோப்புகளாக பயன்படுத்தி கொள்ளலாம மேலும் ஒன்றுக்குமேற்பட்ட TiddlyWikiகோப்புகளை கையாள desktop version ஐபயன்படுத்தி கொள்வது நல்லது என பரிந்துரைக்கப்படுகின்றது
மேலும் இதனை பற்றி கானொளி காட்சியின் வாயிலாக தெரிந்து கொள்வதற்காக www.youtube.com/channel/UCCYN_nzlUKKMiTj5rerv2lQ/videos என்ற இணையபக்கத்திற்கு செல்க ஐந்தே படிமுறையில் கற்று செயல்படுத்தி பயன்பெறுவதற்காக www.richshumaker.com/tw5/FiveStepsToTiddlyWiki5.htm என்ற இணையபக்கத்திற்கு செல்க