அஞ்சலி – இரா. கதிர்வேல்

 

 


Link

இரா. கதிர்வேல் தஞ்சையில் உள்ள பேராவூரணி, சித்தாதிக்காடு ஊரைச் சேர்ந்தவர். இன்று காலை ஊரில் வீட்டின் அருகில் உள்ள, அறுந்த மின்கம்பியின் அருகே சென்ற, தன் குழந்தையை காப்பாற்றி , மின்சாரம் தாக்கி, உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு, பேரதிர்ச்சியில் உள்ளேன்.

30 வயதுகளில் உள்ள இளைஞர். தானாகவே லினக்சு, பைதான் நுட்பங்களைப் படித்தவர். கணியம் தளத்தின் தொடக்கத்தில் இருந்தே பேராதரவு தந்தவர். தாம் கற்றவற்றை தமிழில் பிறர்க்கு பகிர்ந்தவர்.

கணியம் தளத்தில் “எளிய தமிழில் PHP” தொடரையும், பல கட்டுரைகளையும் எழுதியவர். தனது வலைப்பதிவிலும் பல நுட்பக் கட்டுரைகளை எழுதியவர். கணியம் நிகழ்வுகளில் கலத்து கொண்டு, பெரும் ஊக்கம் தந்தவர். தன் நண்பர்கள் பலருக்கும் பல வகைகளில் உதவியவர்.

அறிந்தோர் பலரை கொரோனா தொற்று அள்ளிச்செல்ல, மனம் வெறுத்துப் போன காலத்தில், இவரை இழந்தது இன்னும் பலமாக வலிக்கிறது.

கண்ணீர் மட்டுமே தர முடிகிறது கதிர்வேல்.

gnutamil.blogspot.com/

www.kaniyam.com/author/kathirvel/

-https://freetamilebooks.com/ebooks/learn-php-in-tamil/

ta.wikipedia.org/wiki/பயனர்:Linuxkathirvel

www.hindutamil.in/news/tamilnadu/672599-father-died-after-saving-son-from-electric-shock.html

www.facebook.com/story.php?story_fbid=817663309185783&id=897583467016785&scmts=scwspsdd

 

%d bloggers like this: