மின்னுருவாக்கத் திட்டம் – தமிழ் இணையக் கல்விக்கழகம்…!

மின்னுருவாக்கத் திட்டம் – தமிழ் இணையக் கல்விக்கழகம்…!

உங்களிடம் உள்ள அரிய நூல்களை / புகைப்படங்களை இலவசமாக மின்னுருவாக்கம் (Digital) செய்யவேண்டுமா ?

  • உலகில் பேசப்படும் மொழிகளில் மிகப்பழமையான மொழியாகிய தமிழ் மொழியின் ஆய்வாதாரவளங்களை அழிந்துவிடாமல் பாதுகாக்க, அவற்றை மின்னுருவாக்கம் செய்து ஆவணப்படுத்த தமிழ் இணையக் கல்விக்கழகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
  • ஆய்வாதாரவளங்கள் என்பன அச்சுப் புத்தகங்கள், இதழ்கள், குறுவெளியிடுகள், ஓலைச்சுவடிகள், அரிய காகிதச்சுவடிகள், பழைய நாணயங்கள், செப்பேடுகள், புகைப்படங்கள், கல்வெட்டுக்கள், ஒலி-ஒளி ஆவணங்கள், தொல்லியல் சின்னங்கள் முதலியன மட்டுமின்றி இன்னபிறவும் ஆகும்.
  • பொதுமக்கள் மேற்கண்ட அரிய ஆய்வாதாரவளங்களை வைத்திருப்பின், அவற்றைப் பற்றிய தகவல்களைத் தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்குத் தெரிவிக்குமாறு வேண்டப்படுகின்றது.
  • ஆய்வாதாரவளங்களை மின்னுருவாக்கம் செய்த பின்னர் அவர்களிடமே அவை ஒப்படைக்கப்படும்.
  • பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், ஆதினங்கள், மடங்கள், பொதுமன்றங்கள், சங்கங்கள், திருக்கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் இன்னபிற இடங்களிலும் உள்ள மேற்கண்ட ஆய்வாதரவளங்களைப் பற்றிய தகவல்களை tva@tn.gov.in மின்னஞ்சலுக்கோ (அ) ஆய்வுவளமையர் திரு. இரா. சித்தானை அவர்களின் 9444443035 செல்லிடப்பேசிக்கோ தகவல் அளிக்க விழைகிறார்கள்.
  • ஆய்வாதாரவளங்களை அளிக்கும் தனிநபர் (அ) நிறுவனத்தின் பெயர் நன்றியறிதலுடன் அந்த ஆய்வாதாரத்தின் மின்னுருவாக்கத்தில் இடம்பெறும்.
  • அறிவை மக்களிடம் கொண்டுசெல்லும் செயல்பாட்டின் அங்கமாக மட்டுமின்றி, அறிவைப் பொதுமக்கள் அனைவருக்கும் எவ்வித குறுக்கீடுமின்றி கிடைப்பதற்கு இத்திட்டம் வழிவகுக்கும்.

எனவே, பொதுமக்களும் நிறுவனங்களும் இந்த வாய்ப்பை
நம் அடுத்த தலைமுறையினருக்கு பயன்படுத்திக் கொள்ளவும்.

%d bloggers like this: