Debian இயங்குதளத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்!
பெரும்பாலும், டெபியன் os நிறுவுவதற்காக பிம்ப(mirror) சர்வர்களை பயன்படுத்துவோம்.
தற்பொழுது, இந்தியாவில் இரண்டு புதிய பிம்பச் சர்வர்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன
இந்த செய்தி நிச்சயமாக உங்களுடைய கட்டற்ற மென்பொருள் பயன்படுத்தும் நண்பருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
இந்த இரண்டு சர்வர்களும்,கேரள மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
முதல் சர்வரானது கொச்சி பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருக்கிறது.
மற்றொரு சேர்வரானது கோழிக்கோடு தேசிய தொழில்நுட்பக் கல்வி(NIT )
நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

மேற்படி, இந்த சர்வர்கள் குறித்த தகவலை நீங்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாக விரிவாக அறிந்து கொள்ள முடியும்.
lists.debian.org/debian-dug-in/2024/10/msg00003.html
இதுபோன்ற கட்டற்ற தொழில்நுட்ப வசதிகள் நாடெங்கும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி,
நாகர்கோவில்-02,
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின் மடல் முகவரி: srikaleewarar@myyahoo.com